Swamy: Budget:பட்ஜெட்டா, மளிகைக் கடை பில் மாதிரி இருக்கு: நிர்மலா சீதாராமனை விளாசிய சுப்பிரமணியன் சுவாமி
மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது பட்ஜெட்டா, மளிகைக் கடை பில் மாதிரி இருந்தது என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி விளாசியுள்ளார்.
மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது பட்ஜெட்டா, மளிகைக் கடை பில் மாதிரி இருந்தது என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி விளாசியுள்ளார்.
மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான அரசு தொடர்ந்து 9-வது முறையாக நேற்று பட்ஜெட்டைத் தாக்கல் செய்தது. மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தனது 5-வது பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
மத்தியில் ஆளும் பாஜக அரசு தாக்கல் செய்த கடைசி முழு பட்ஜெட் இதுவாகும். அடுத்த ஆண்டு பொதுத்தேர்தலைச் சந்திக்க இருப்பதால் பட்ஜெட்டில் பல்வேறு சலுகைகளை அறிவித்தது. கடந்த 5 ஆண்டுகளுக்குப்பின் வருமானவரி உச்சவரம்பு விலக்கு உயர்த்தப்பட்டது, முதியோர், பெண்களுக்கென திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.
நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட் வளர்ச்சிக்கான பட்ஜெட், வளர்ந்த இந்தியாவை வலுவாக உருவாக்கும் பட்ஜெட் என பிரதமர் மோடி புகழந்தார். மத்திய அமைச்சர்கள், பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் அனைவரும் மத்திய பட்ஜெட்டை புகழ்ந்தனர். அடுத்த ஆண்டு பொதுத்தேர்தலைச் சந்திக்கும் நோக்கல் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் என அரசியல் நோக்கர்கள் தெரிவித்தனர்.
ஆனால், பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி பட்ஜெட்டை கிண்டல் செய்து ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட கருத்தில் “இன்று தாக்கல் செய்யப்பட்டது பட்ஜெட்டா? இது மளிகைக் கடைக்காரரின் பில் போன்று இருக்கு.
ஒரு ஒழுக்கமான பட்ஜெட் என்பது குறிக்கோள்கள் என்ன என்பதை வெளிப்படுத்த வேண்டும். ஜிடிபி வளர்ச்சி விகிதம் என்றால் முதலீட்டின் நிலை மற்றும் வருவாய் விகிதத்தை வெளிப்படுத்த வேண்டும்; முன்னுரிமைகள், பொருளாதார உத்தி, மற்றும் வளங்களை திரட்டுதல் ஆகியவை இருக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்