ரூ.7.27 லட்சம் வரை வருமான வரி கிடையாது! புதிய வரி விதிப்பு முறை பற்றி நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

ஆண்டு வருவாய் ரூ.7.27 லட்சம் வரை இருந்தால் வருமான வரி செலுத்த வேண்டாம் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

No Income Tax For People Earning Up To THIS Much Per Annum Under New Tax Regime: Nirmala Sitharaman

புதிய வரி விதிப்பு முறையில் ஆண்டு வருமானம் ரூ.7.27 லட்சம் வரை ஈட்டினால் வருமான வரி செலுத்த வேண்டிய அவசியம் இல்லை என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்துக்குச் சென்ற மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அங்கு உள்ள ஆடமார் மடம் மற்றும்  கிருஷ்ணர் கோயிலுக்கு சென்றார். பின், உடுப்பியில் அமைக்கப்பட்ட இந்திய ரத்தினங்கள் மற்றும் நகைகள் கழகத்தின் பொது வசதி மையக் கட்டிடத்தையும் அமைச்சர் திறந்து வைத்தார்.

அப்போது பேசிய நிர்மலா சீதாராமன், "பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ஆண்டுக்கு ரூ.7.27 லட்சம் வரை வருமானம் ஈட்டும் நடுத்தர மக்களுக்கு வருமான வரி விலக்கு உட்பட பல வரிச் சலுகைகளை வழங்குகிறது" என்றார். மேலும், சமூகத்தின் எந்தப் பிரிவினரும் மத்திய அரசால் ஒதுக்கப்படவில்லை எனவும் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.

இந்தியாவில் டெஸ்லா கார் தொழிற்சாலை! ரூ.20 லட்சம் முதல் மின்சார கார் விற்க திட்டம்!

"2023-24ஆம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் ரூ.7 லட்சம் வரை வருவாய் ஈட்டியவர்களுக்கு வருமான வரி விலக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டது. அதில் சில சந்தேகங்கள் எழுவதாக பலர் கூறினர். 7 லட்சம் ரூபாய்க்குக் குறைவான வருமானம் இருந்தால் என்ன ஆகும் என சந்தேகம் வந்தது." என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், "நாங்கள் நீங்கள் சம்பாதிக்கும் ஒவ்வொரு ரூபாய்க்கும் வரி செலுத்துவது எப்படி என்பதைக் கண்டுபிடிக்க முயன்றோம். எடுத்துக்காட்டாக ரூ.7.27 லட்சத்திற்கு, எந்த வரியும் செலுத்தவில்லை. பிறகு தான் வரி செலுத்த ஆரம்பிக்கிறீர்கள். புதிய திட்டத்தின் கீழ், நிலையான வரி விலக்கு இல்லை என்பதே குறையாக இருந்தது. இப்போது ரூ.50,000 நிலையான வரி விலக்கு கொடுக்கப்பட்டு உள்ளது" என்று தெரிவித்தார்.

ரூ.2.07 லட்சம் கோடி சொத்து.. தினமும் நன்கொடை மட்டும் ரூ.3 கோடி.. நாட்டின் மிகப்பெரிய பணக்காரர் பற்றி தெரியுமா?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios