ஆன்லைனில் ரூ.10 லட்சத்தை பறிகொடுத்தவருக்கு 8 அட்வைஸ்! எஸ்பிஐ சொல்வது என்னென்ன தெரியுமா?
எல்லா வங்கிகளும் தங்கள் வாடிக்கையாளர்களை வங்கிக் கணக்கு தொடர்பான எந்த வகையான தகவலையும் யாரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டாம் என தொடர்ந்து எச்சரிக்கின்றன.
சமீபத்தில், நாக்பூரில் வசிக்கும் ஒருவர் வங்கி ஊழியர் என்று கூறிக்கொண்ட அடையாளம் தெரியாத நபரிடம் ஆன்லைன் மோசடியில் ரூ.9.66 லட்சத்தை இழந்தார். ஹட்கேஷ்வரில் வசிக்கும் சதீஷ் தீட்சித் (56) என்பவருக்கு, தனியார் வங்கி ஊழியர் என்று கூறிக்கொண்டு ஒருவர் போன் செய்திருபக்கிறார். வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள் இணைய மோசடியில் இருந்து பாதுகாக்கும் பணியில் இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.
அவர் பாதிக்கப்பட்டவரின் டெபிட் கார்டு மற்றும் வங்கிக் கணக்கு விவரங்களைப் பெற்று, அவற்றை பயன்படுத்தி, ரூ.9.66 லட்சம் பணத்தை வேறு கணக்குக்கு மாற்றியுள்ளார் என வங்கி அதிகாரி ஒருவர் கூறுகிறார். வங்கிக்கணக்கு வைத்திருப்பவர்கள் ஆன்லைன் வங்கி மோசடிகளின் சிக்க பணத்தை இழந்த வழக்குகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
எல்லா வங்கிகளும் தங்கள் வாடிக்கையாளர்களை வங்கிக் கணக்கு தொடர்பான எந்த வகையான தகவலையும் யாரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டாம் என தொடர்ந்து எச்சரிக்கின்றன. இந்நிலையில், பாதுகாப்பான ஆன்லைன் வங்கிச் சேவைக்கு பாரத ஸ்டேட் வங்கி சில அறிவுரைகளை அளித்துள்ளது.
வரி ஏய்ப்பு செய்தால் தப்பிக்கவே முடியாது... முறைகேடுகளை தடுக்க ஸ்கெட்ச் போடும் வருமான வரி!
1. வங்கியின் இன்டர்நெட் பேங்கிங் இணையதளத்தை நேரடியாகப் பார்வையிடவும். மற்றொரு தளத்தின் இணைப்பு அல்லது மின்னஞ்சல் மூலம் வங்கி இணையதளத்தை அணுகுவதைத் தவிர்க்கவும்.
2. போலியாக உருவாக்கப்பட்ட இணையதளங்களைத் தவிர்க்க, இணையதளத்தின் பெயர் மற்றும் முகவரி (URL) ஐ எப்போதும் சரிபார்க்கவும்.
3. உங்கள் பாஸ்வேடு அல்லது பின் நம்பரைக் கேட்கும் எந்த மின்னஞ்சலுக்கும் ஒருபோதும் பதிலளிக்க வேண்டாம். அதுமட்டுமிட்றி, அவற்றைக் கேட்பவர்கள் பற்றி உடனே வங்கிக்கு தெரிவிக்கவும். ஆன்லைன் பேங்கிங் பாஸ்வேடு அல்லது பின் நம்பரை காவல்துறையோ வங்கியோ கூட கேட்க முடியாது.
4. வங்கி இணையதளத்தை பயன்படுத்த பொது இன்டர்நெட் கஃபே அல்லது பொதுவான கணினியை பயன்படுத்த வேண்டாம்.
ரூ.1,200 கோடிக்கு லண்டனில் மேன்ஷன் வாங்கிய இந்திய தொழிலதிபர் ரவி ரூயா!
5. கணினியில் ஆன்டி வைரஸ் மென்பொருளை அப்டேட் செய்துகொண்டே இருக்கவும். ஹேக்கர்கள், வைரஸ் தாக்குதல்கள் அல்லது தீங்கிழைக்கும் 'ட்ரோஜன் ஹார்ஸ்' புரோகிராம்களுக்கு எதிராக செயல்படும் தடுப்பு மென்பொருட்களையும் நிறுவலாம். பொருத்தமான ஃபயர்வால் பயன்படுத்துவதும் பரிந்துரைக்கப்படுகிறது.
6. நீங்கள் பயன்படுத்தும் கணினியில் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் 'ஃபைல் அண்ட் பிரிண்டிங் ஷேரிங்' அம்சத்தை ஆஃப் செய்து வைக்கவும்.
7. கணினியைப் பயன்படுத்தாத நேரத்தில் லாக் செய்து வைக்கவும். பிரவுசரில் பாஸ்வேடுகளை சேமிக்க வேண்டாம்.
8 அவ்வப்போது உங்கள் வங்கிக் கணக்கு விவரத்தையும் பரிவர்த்தனை வரலாற்றையும் தவறாமல் சரிபார்க்கவும்.
விவேகானந்தா கொலை வழக்கு: சிபிஐ விசாரணையில் ரகசிய சாட்சியாக மாறிய ஒய்.எஸ்.சர்மிளா