விவேகானந்தா கொலை வழக்கு: சிபிஐ விசாரணையில் ரகசிய சாட்சியாக மாறிய ஒய்.எஸ்.சர்மிளா
ஆந்திரா மாநில முதல்வர் ஒய்எஸ் ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கையும் ஒய்எஸ்ஆர் தெலுங்கானா கட்சியின் நிறுவனருமான ஒய்எஸ் சர்மிளா முன்னாள் அமைச்சர் ஒய்.எஸ். விவேகானந்த ரெட்டி கொலை வழக்கில் சிபிஐயின் ரகசிய சாட்சியாக மாறியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஆந்திரா மாநில முதல்வர் ஒய்எஸ் ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கையும் ஒய்எஸ்ஆர் தெலுங்கானா கட்சியின் நிறுவனருமான ஒய்எஸ் சர்மிளா முன்னாள் அமைச்சர் ஒய்.எஸ். விவேகானந்த ரெட்டி கொலை வழக்கில் சிபிஐயின் ரகசிய சாட்சியாக மாறியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஷர்மிளாவின் வாக்குமூலத்துடன் சிபிஐயின் இறுதி குற்றப்பத்திரிகை வெள்ளிக்கிழமை வெளியானது. 2019 லோக்சபா தேர்தலில் கடப்பா எம்பி ஒய்எஸ் அவினாஷ் ரெட்டிக்கு சீட்டு கிடைக்காமல் பார்த்துக் கொள்ள முயன்றதால், மாமா விவேகானந்த ரெட்டி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சிபிஐ விசாரணை அதிகாரிகளிடம் ஷர்மிளா வாக்குமூலம் அளித்திருப்பதாகக் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.
பட்டப்பகலில் துணிகரம்.. இரும்பு கம்பியால் கொடூரமாக தாக்கப்பட்ட ஊழியர் - 14 லட்சம் கொள்ளை!
ஒய்.எஸ்.விவேகானந்த ரெட்டி மார்ச் 15, 2019 அன்று தேர்தல் பிரச்சாரத்தின்போது கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த வழக்கை விசாரித்து வந்த சிபிஐ, அவினாஷ் மற்றும் அவரது தந்தை பாஸ்கர் ரெட்டி ஆகியோர் கொலைக்கு திட்டமிட்டதாகவும், அதற்காக நான்கு பேரை வேலைக்கு அமர்த்தியதாகவும் குற்றப்பத்திரிகையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
2017ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் தான் தோல்வியடைந்ததற்கு பாஸ்கர் ரெட்டி, அவரது சகோதரர் மனோகர் ரெட்டி மற்றும் அவினாஷ் ஆகியோர் தான் காரணம் என்று குற்றம் சாட்டிய விவேகானந்த ரெட்டி, அவர்களுக்கு பாடம் கற்பிக்க விரும்பினார் என்றும் சர்மிளா சிபிஐ அதிகாரிகளிடம் கூறியிருக்கிறார். இதன்படி, அவினாஷை தேர்தல் களத்தில் இருந்து விலக்கி வைக்க முயற்சித்ததே கொலைக்கு வழிவகுத்திருப்பதாகத் தெரிகிறது.
கடப்பா தொகுதியை ஜெகனின் தாயார் ஒய்.எஸ்.விஜயம்மா அல்லது ஒய்.எஸ்.ஷர்மிளாவுக்கு வழங்க வேண்டும் என்று விவேகானந்த ரெட்டி ஜெகனிடம் கூறியதாகவும் சிபிஐ சொல்கிறது.
விவேகானந்த ரெட்டி தான் கொலை செய்யப்படுவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு தன்னிடம் வந்து, அவினாஷையும் அவரது குடும்பத்தினரையும் தேர்தலில் இருந்து விலக்கி வைக்கும் தனது திட்டத்திற்கு சம்மதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார் என்றும் ஒய்.எஸ்.ஷர்மிளா தெரிவித்துள்ளார். ஜெகன் தனக்கு டிக்கெட் கொடுப்பார் என்று நம்பிக்கை இல்லாதபோதும் விவேகானந்த ரெட்டியின் திட்டத்துக்கு ஒப்புக்கொண்டதாகவும் ஷர்மிளா சொல்லியிருக்கிறார்.