Form 16 என்பது வருமான வரி சட்டம் 1961 -இன் பிரிவு 203-ன் கீழ் வழங்கப்படும் சான்றிதழ். இதன் மூலம் 2025-26 மதிப்பீட்டு ஆண்டுக்கான ஐ.டி.ஆர் தாக்கலை சுலபமாக செய்யலாம். டிஜிட்டல் ஃபார்ம் 16 பயன்பாட்டில் வந்துள்ளது, இது  செயல்முறையை எளிமையாக்கும்.

ITR தாக்கல் செய்யலாம் ஈசியா - கை கொடுக்கும் டிஜிட்டல் Form 16

நாடு முழுவதும் வருமான வரி அறிக்கைகள் தாக்கல் செய்யும் பருவம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வேலை செய்யும் மக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி! உங்கள் நிறுவனமே உங்களுக்காக Form 16 ஐ வழங்கியிருக்கலாம் அல்லது விரைவில் வழங்கும். இந்த சான்றிதழ் மூலம், நீங்கள் 2025-26 மதிப்பீட்டு ஆண்டுக்கான ஐ.டி.ஆர் தாக்கலை சுலபமாக செய்யலாம். அதே சமயம், இப்போது டிஜிட்டல் ஃபார்ம் 16 பயன்பாட்டில் வந்துள்ளது. இதை பயன்படுத்துவது உங்கள் தாக்கல் செயல்முறையை எளிமையாக்கும் மற்றும் பிழைகள் ஏற்படுவதைத் தவிர்க்கும்.

Form 16 என்றால் என்ன? ஏன் அது முக்கியம்?

Form 16 என்பது வருமான வரி சட்டம் 1961 -இன் பிரிவு 203-ன் கீழ் வழங்கப்படும் ஒரு கட்டாயமான சான்றிதழ். இதில் உங்கள் சம்பளம் மற்றும் அதிலிருந்து பிடிக்கப்பட்ட வரி (TDS) பற்றிய முழுமையான விவரங்களும் இடம்பெறும். CBDT விதிமுறைகளின்படி, ஒவ்வொரு நிறுவனமும் தனது ஊழியர்களுக்கு ஜூன் 15க்குள் இந்த Form 16 ஐ வழங்க வேண்டும்.

Form 16-ன் பகுதிகள்

பகுதி A: தொழிலாளி மற்றும் நிறுவன விவரங்கள், வேலை செய்த காலம், மற்றும் TDS விவரங்கள்.

பகுதி B: சம்பள விவரம், விலகல்களும், VI-A பிரிவின் கீழ் கழிவுகள், மற்றும் வரிக்குட்பட்ட வருமானம்.

டிஜிட்டல் Form 16 எப்படி பெறுவது?

நிறுவனம் மூலமாக: Form 16 பெரும்பாலும் மின்னஞ்சல் அல்லது நிறுவனத்தின் உள்ளக போர்டல் வழியாக வழங்கப்படுகிறது. https://www.tdscpc.gov.in. என்ற இணையதள முகவரியில் PAN விவரங்களுடன் உள்நுழைய வேண்டும். "View Form 26AS" பகுதியில் உங்கள் TDS விவரங்களை பார்க்கலாம். முக்கியமாக, முழு Form 16 இங்கு கிடைக்காது. ஆனால், பணியாளரால் செலுத்தப்பட்ட TDS சரியானதா என்பதை உறுதி செய்யலாம்.

ITR தாக்கலில் Digital Form 16-ஐ எப்படி பயன்படுத்துவது?

விவரங்களை பொருத்திப் பார்க்கவும். Form 16, Form 26AS மற்றும் AIS (Annual Information Statement) ஆகியவற்றின் விவரங்களை நன்கு ஒப்பிட்டு பிழைகள் தவிர்க்க வேண்டும். Form 16 - பகுதி B-யில் உள்ள சம்பள மற்றும் கழிவுகளை ஐ.டி.ஆர் படிவத்தில் உள்ளிடவும். முன்பே நிரப்பப்பட்ட (pre-filled) விவரங்களை பயன்படுத்தினாலும், Form 16-ஐ ஒப்பிட்டு சரிபார்ப்பது அவசியம்.

சமர்ப்பிப்புக்கு முன் சரிபார்ப்பு

TDS தொகை மற்றும் PAN விவரங்களை சரியாக உள்ளதா என இறுதியாக உறுதி செய்ய வேண்டும். சிறிய பிழைகள் கூட தாக்கலுக்குப் பிந்தைய தாமதங்களை ஏற்படுத்தலாம் அல்லது வருமான வரித் துறையிடமிருந்து நோட்டீஸ் வரலாம். டிஜிட்டல் Form 16 ஐ சரியாகப் பயன்படுத்தினால், உங்கள் வருமான வரி தாக்கல் செயல்முறை மிக எளிமையாகவும், பாதுகாப்பாகவும் இருக்கலாம். Form 16 மற்றும் 26AS ஆகியவற்றின் இடையே ஒத்துபோவதை உறுதி செய்யுங்கள். அதனால் உங்கள் ITR தாக்கல் ஒரு ‘ஸ்மார்ட் & சிம்பிள்’ அனுபவமாக மாறும்!