இந்தியாவில் அக்டோபர் மாதத்தில் வேலையின்மை 7.77 சதவீதமாக அதிகரி்த்துள்ளது என்று இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம்(சிஎம்ஐஇ) தெரிவித்துள்ளது.
இந்தியாவில் அக்டோபர் மாதத்தில் வேலையின்மை 7.77 சதவீதமாக அதிகரி்த்துள்ளது என்று இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம்(சிஎம்ஐஇ) தெரிவித்துள்ளது.
கடந்த செப்டம்பர் மாதத்தில் வேலையின்மை 6.43 சதவீதமாக இருந்த நிலையில் அக்டோபரில் 7.77 சதவீதமாக அதிகரித்துள்ளது. 25 மாநிலங்களில் 6 மாநிலங்களில் வேலையின்மை நிலவரம் இரட்டை இலக்கத்தில் வளர்ந்துள்ளது.
பாஜக ஆளும் ஹரியானா மாநிலத்தில் 31.8%, காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானில் 30.7 சதவீதம், ஜம்மு காஷ்மீரில் 22.4%, ஜார்க்கண்டில் 16.5%, பீகாரில் 14.50%, திரிபுராவில் 10.50% என்றநிலையில் இருக்கிறது.
வேலையின்மை மிகவும்குறைவாக பாஜகவின் சிவராஜ்சிங் சவுகான் ஆளும் மத்தியப்பிரதேசத்தில் இருக்கிறது. இந்த மாநிலத்தில் வேலையின்மை 0.8 சதவீதம் மட்டுமே உள்ளது. அதைத் தொடர்ந்து, சத்தீஸ்கரில் 0.9%, ஒடிசாவில்1.1% மட்டுமேவேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது
யார் இந்த இசுதான் கத்வி.? பத்திரிகையாளர் டூ ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளர்.. குஜராத் தேர்தல் பரபர!
இந்தியப் பொருளதார கண்காணிப்பு மையம் வெளியிட்ட தகவலின்படி, கிராமங்களில் வேலையில்லாதோர் எண்ணிக்கை அக்டோபர் மாதத்தில் 8.04 சதவீதமாக உயர்ந்துள்ளது, இது செப்டம்பரில் 5.84 சதவீதமாக இருந்தது. அதே நேரம், நகர்ப்புறங்களில் வேலையின்மை செப்டம்பரில் 7.70% ஆக இருந்தது, அக்டோபரில் 7.21 சதவீதமாகக் குறைந்துள்ளது.
கிராமப்புறங்களில் வேலையின்மை கடந்த 2021ம் ஆண்டில் 7.7 சதவீதமாகவும், 2020ம் ஆண்டில் 7 சதவீதமாகவும் இருந்தது, 2019 , அக்டோபர் மாதத்தில்8.1 சதவீதமாக உயர்ந்திருந்தது.
அக்டோபர் மாதத்தில் அதிகமான பண்டிகைகள்,விடுமுறை நாட்கள் வந்ததால் பெரிய நிறுவனங்கள், வேலைக்கு ஆட்களை எடுக்கும் மனிதவள நிறுவனங்களும் குறைவாகவே வேலைக்கு ஆட்களை எடுத்துள்ளன என்று நாக்ரி.காம் தெரிவித்துள்ளது.
மூச்சு முட்டும் காற்று மாசு ! டெல்லியில் தொடக்கப்பள்ளிகளுக்கு நாளை முதல் விடுமுறை
தகவல் தொழில்நுட்பத்துறையில் அக்டோபரில் வேலைக்கு ஆள்எடுப்பது கடந்த ஆண்டு இதே மாதத்தோடு ஒப்பிடுகையில் 18 % குறைந்துள்ளது. மருத்துவத்துறை, தொலைத்தொடர்பு ஆகியவற்றிலும் ஆட்களை வேலைக்கு எடுப்பது அக்டோபரில் சரிந்துள்ளது.
கொல்கத்தா, மும்பையில் வேலைக்கு ஆள் எடுப்பது அதிகரித்துள்ளது, டெல்லியில் கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் பெரும்பாலும் மாற்றவில்லை. தகவல் தொழில்நுட்பத்துறை மந்தமாக செயல்படுவதால், ஹைதராபாத், பெங்களூரு, புனேயில் வேலைக்கு ஆட்களை எடுப்பது குறைவாக உள்ளது.
