Asianet News TamilAsianet News Tamil

gdp of india:உலகப் பொருளாதாரத்தில் 3வது இடத்துக்கு இந்தியா முன்னேறும்: ஜெர்மனி, ஜப்பானை தோற்கடிக்கும்

உலகப் பொருளாதார வளர்ச்சியில் ஜெர்மனி,ஜப்பானை தோற்கடித்து 2029ம் ஆண்டில் இந்தியா 3வது இடத்துக்கு முன்னேறும் என்று எஸ்பிஐ வங்கியின்ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

India may overcome Germany and Japan to become the third-largest economy in the world.
Author
First Published Sep 6, 2022, 4:43 PM IST

உலகப் பொருளாதார வளர்ச்சியில் ஜெர்மனி,ஜப்பானை தோற்கடித்து 2029ம் ஆண்டில் இந்தியா 3வது இடத்துக்கு முன்னேறும் என்று எஸ்பிஐ வங்கியின்ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

எஸ்பிஐ வங்கியின் பொருளாதார ஆய்விறிக்கை கூறியிருப்பதாவது

நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டின் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 13.5 சதவீதமாக இருந்தது. நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளதார வளர்ச்சி 6.7% முதல் 7.7% வரைஇருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

gold rate today: ஏறுமுகத்தில் தங்கம் விலை! சீக்கிரம் வாங்குங்க! மீண்டும் சவரன்ரூ.38,000: இன்றைய நிலவரம் என்ன?

India may overcome Germany and Japan to become the third-largest economy in the world.

சர்வதேச சூழல், இயற்கைக் காரணிகள் ஆகியவற்றால் பொருளாதார வளர்ச்சி 6 முதல் 6.5% வரை இருக்கும்
2014ம் ஆண்டிலிருந்தே இந்தியா பொருளாதார வளர்ச்சியில் ஏற்றத்துடனே இருந்து வருகிறது இதே நிலை நீடித்தால் ஜப்பான், ஜெர்மனி நாடுகளைத் தோற்கடித்து 2029ம் ஆண்டில் உலகின் 3வது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும்.

2014ம் ஆண்டில் இந்தியா 10வது இடத்தில்இருந்தது, தற்போது 5வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. 2027ம்ஆண்டில் ஜெர்மனியைத் தோற்கடித்து, 2029ம் ஆண்டில் ஜப்பானை பொருளாதார வளர்ச்சியில் இந்தியா தோற்கடிக்கும். 

cyrus mistry: tata sons: சைரஸ் மிஸ்திரி மறைவு!ஷபூர்ஜி பலூன்ஜி குழுமத்தின் 3,000கோடி டாலர் சொத்து என்னாகும்?

India may overcome Germany and Japan to become the third-largest economy in the world.

2014ம் ஆண்டிலிருந்தே இ்ந்தியா மிகப்பெரிய கட்டமைப்பு ரீதியான மாற்றத்துக்கு நகர்ந்தது. அதன் தொடர்ச்சியாக கடந்த ஆண்டு டிசம்பரில் பிரிட்டனை பொருளாதார வளர்ச்சியில் இந்தியா தோற்கடித்தது. 2014ம் ஆண்டில் உலகளவில் இந்தியாவின் ஜிடிபி பங்கு 2.6%  இருந்தநிலையில் இப்போது 3.5%மாக அதிகரித்துள்ளது. 2027ம் ஆண்டில் இது 4சதவீதத்தைக் கடக்கும். 

வரும் காலங்களில் சீனாவின் பொருளாதார வளர்ச்சி மேலும் சரியும்போது அது இந்தியாவுக்கு பெருமளவில் பொருளாதாரத்தில் உயர்வதற்கு வாய்ப்பாக மாறும். சீனாவில் முதலீடு குறையும், வர்த்தகம் குறையும், இதை இந்தியா நன்கு பயன்படுத்தி பொருளாதாரத்தை வளர்த்துக்கொள்ள முடியும்.

cyrus mistry: seat belt:tata sons: சைரஸ் மிஸ்திரி மரணம் சொல்லும் செய்தி என்ன? காரில் பேக்-சீட் பெல்ட் அவசியமா?

சமீபத்தில் ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன்-14 மாடலை இந்தியாவில் தயாரிக்கத் தொடங்கியது. இதுபோன்று சீனாவில் செயல்படும் ப ல்வேறுநிறுவனங்கள்இந்தியாவின் பக்கம் திரும்பும்போது, வேகமான பொருளாதார வளர்ச்சியுள்ள நாடு என்ற பெருமையை இந்தியா தக்கவைக்கும். 

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
 

Follow Us:
Download App:
  • android
  • ios