இந்தியா உலகளாவிய வளர்ச்சிக்கான சக்தியாக உள்ளது: IMF அறிக்கை குறித்து பிரதமர் மோடி கருத்து
சர்வதேச செலாவணி நிதியம் (International Monetary Fund) இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி குறித்த கணிப்பை 0.2 சதவீதம் அதிகரித்து 6.3 சதவீதமாக உயர்த்தி இருக்கிறது.
உலகப் பொருளாதாரம் குறித்த கவலைகளுக்கு மத்தியில், இந்தியா வலுவான பொருளாதார வளர்ச்சியைப் பெறும் என்று சர்வதேச செலாவணி நிதியம் (IMF) கணித்துள்ள நிலையில், இந்தியா உலகின் பிரகாசமான இடமாகவும், வளர்ச்சி மற்றும் புதுமைகளின் சக்தியாகவும் உள்ளது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
சர்வதேச செலாவணி நிதியம் (International Monetary Fund) செவ்வாயக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி குறித்த கணிப்பை 0.2 சதவீதம் அதிகரித்து 6.3 சதவீதமாக உயர்த்தி இருக்கிறது. உலகளாவிய வளர்ச்சிக் கணிப்பை மூன்று சதவீதமாகக் குறைத்தாலும்கூட, இந்தியாவின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும் என்று ஐ.எம்.எஃப். கூறியிருக்கிறது.
மல்லுக்கு நிற்கும் சீனா! ரூ.23,500 கோடிக்கு நவீன ஆயுதங்கள் வாங்க ஒப்பந்தம் செய்த இந்தியா!
இந்தக் கணிப்பு குறித்து IMF அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அந்தப் பதிவை ரீட்வீட் செய்து கருத்து கூறியுள்ள பிரதமர் மோடி, "எங்கள் மக்களின் வலிமை மற்றும் திறன்களால் இந்தியா உலகின் பிரகாசமான புள்ளியாகவும், வளர்ச்சி மற்றும் புதுமைகளின் சக்தியாகவும் உள்ளது. வளமான இந்தியாவை நோக்கிய நமது பயணத்தை வலுப்படுத்துவோம். மேலும் நமது சீர்திருத்தப் பாதையை மேலும் மேம்படுத்துவோம்" என்று தெரிவித்துள்ளார்.
"இந்தியாவின் வளர்ச்சியானது 2023 மற்றும் 2024 ஆகிய இரண்டு ஆண்டுகளிலும் 6.3 சதவீதம் முன்னேற்றத்துடன் வலுவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2023ஆம் ஆண்டிற்கான வளர்ச்சியை 0.2 சதவீதம் உயர்த்தியிருப்பது, ஏப்ரல்-ஜூன் மாதங்களில் எதிர்பார்த்ததை விட வலுவான நுகர்வுகளை பிரதிபலிக்கிறது" என்று சர்வதேச செலாவணி நிதியத்தின் 'உலகப் பொருளாதாரக் கண்ணோட்டம்' என்ற அறிக்கை கூறுகிறது.
உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடான சீனாவைவிட இந்தியாவின் வளர்ச்சி அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நகைக்கடன் vs சொத்து கடன்: வித்தியாசம் என்ன? கடன் வாங்கும்போது எது சிறந்த வழி?