நகைக்கடன் vs சொத்து கடன்: வித்தியாசம் என்ன? கடன் வாங்கும்போது எது சிறந்த வழி?
அவசரத் தேவைகளுக்காகவும் திருமணம், கல்வி, மருத்துவம் தொடர்பான தேவைகளை முன்னிட்டும் கடன் வாங்க இருப்பவர்கள் எதன் மீது கடன் பெறுவது நல்லது என்பதை யோசித்து முடிவு எடுக்க வேண்டும்.
அவசர பணத்தேவை ஏற்படும்போது கையில் போதிய பணம் இல்லாவிட்டால் கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. அந்த நிலையை சமாளிக்க தனிநபர் கடன்களை வாங்குவார்கள். இப்படி கடன் பெறுபவர்கள் நல்ல நிதிப் பின்னணியைப் பேணிவரவேண்டும். ஆனால், அப்படி இல்லாமல் கடன் வாங்கினால் அதிக வட்டி செலுத்த வேண்டிவரும்.
சொத்து ஏதும் இருந்தால் நெருக்கடி நேரத்தில் அதை வங்கியில் அடமானமான வைத்தும் கடன் பெறுவது வழக்கம். இப்படி கடன் பெறும்போது அதற்கான வட்டி விகிதம் குறைவாக வசூலிக்கப்படும். மற்றொரு வாய்ப்பாக நகைகளை வங்கிகளில் அடகு வைத்து கடன் பெறமுடியும்.
குறைந்த வட்டியில் இந்த இரண்டு விதமான கடன்களையும் பயன்படுத்திக்கொள்ள முடியும். விவசாயிகள் நகைக்கடன் வாங்கினால், அவர்கள் தங்கள் நிலத்தின் பட்டாவை வைத்து மற்றவர்களைக் கிடைப்பதைவிடக் குறைவான வட்டியுடன் கடன் வாங்கலாம்.
மல்லுக்கு நிற்கும் சீனா! ரூ.23,500 கோடிக்கு நவீன ஆயுதங்கள் வாங்க ஒப்பந்தம் செய்த இந்தியா!
நகைக்கடன் வாங்கினால் அதை ஆண்டு முடிவில் திருப்பிச் செலுத்தலாம். ஆனால், மாதம்தோறும் வட்டி செலுத்திவிட்டால் மொத்தமாகச் செலுத்தவேண்டிய தொகை குறையும். ஆண்டுதோறும் தொகையைச் செலுத்தினால் வட்டி அதிகமாகிவிடும்.
சொத்துக்கள் மீது கடன் கிடைப்பது கொஞ்சம் கடினமானது. நில மதிப்பீட்டாளர்கள், வழக்கறிஞர்கள் அறிவுரை பெற்ற பிறகுதான் கடனுக்கு ஒப்புதல் கிடைக்கும். நகைக்கடன் விஷயத்தில் இந்தச் சிக்கல் கிடையாது. வங்கியில் நகையை அடகு வைத்த உடனே கடன் தொகையைப் பெற்றுக்கொள்ளலாம்.
சொத்துகள் மீது கடன் வாங்கும்போது ஆவணங்களைப் பரிசோதிப்பது போன்ற நடைமுறைச் சிக்கல்கள் இருக்கின்றன. இதனால் சற்று தாமதம் ஆகலாம். உடனடி பணத்தேவை இருக்கும்போது இது கைகொடுக்காது. ஆனால், நகைக்கடனில் அதுபோன்ற சிக்கல்கள் கிடையாது. அவசரத் தேவைக்கு உடனுக்குடன் கடன் பெற்றுக்கொள்ளலாம்.
பெரிய தொகை தேவைப்படும்போது நகைகளை வைத்து கடன் வாங்கினால் போதிய அளவுக்கு தொகையைக் கிடைக்காமல் போகலாம். அத்தகைய சூழ்நிலையில் சொத்துக்களை அடமானம் வைப்பது ஒரு வாய்ப்பாக இருக்கும். இப்படிக் கடன் பெறும்போது, அடகு வைக்கும் சொத்தை வங்கிக்கு ஈடுகடனாக பதிவுசெய்து கொடுக்கவேண்டும். கடனைத் திரும்பச் செலுத்திவிட்டால், வங்க இந்த ஈடுகடனை விடுவித்துவிடும்.