இந்தியா மற்றும் சிங்கப்பூர் இடையே இனிமேல் எளிதாக யுபிஐ செயலி மூலம் பணம் அனுப்பலாம். இதற்காக சிங்கப்பூரின் பேநவ்(Paynow) செயலியுடன் இந்தியாவின் யுபிஐ(UPI)  அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது.

இந்தியா மற்றும் சிங்கப்பூர் இடையே இனிமேல் எளிதாக யுபிஐ செயலி மூலம் பணம் அனுப்பலாம். இதற்காக சிங்கப்பூரின் பேநவ்(Paynow) செயலியுடன் இந்தியாவின் யுபிஐ(UPI) அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது.

சிங்கப்பூரின் பேநவ் மற்றும் இந்தியாவின் யுபிஐ செயலி கூட்டாகச் செயல்படுவதன் மூலம் இனிமேல் இந்தியர்கள் சிங்கப்பூருக்கு எளிதாகப் பணம் அனுப்பலாம், அந்நாட்டில் யுபிஐ மூலம் பொருட்கள், சேவைகளுக்கு பணம் செலுத்த முடியும். 

அதேபோல் சிங்கப்பூர் மக்கள் இந்தியாவில் தங்களின் பேநவ் செயலியைப் பயன்படுத்த முடியும். சிங்கப்பூரில் வாழும் இ்ந்தியர்கள், தமிழர்கள் எளிதாக தங்கள் உறவினர்களுக்கு பணம் அனுப்பமுடியும்.
இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முடிந்தநிலையில் பிரதமர் நரேந்திர மோடியும், சிங்கப்பூர் பிரதமர் லீ ஹீன் லூங் இருவரும் சேர்ந்து காணொலி மூலம் இந்த திட்டத்தை நேற்று தொடங்கி வைத்தனர்.

மெக்கின்ஸி நிறுவனம் 2,000 ஊழியர்களை வேலையிலிருந்து நீக்க முடிவு

பிரதமர் மோடி குறிப்பிடுகையில் “ இந்தியா-சிங்கப்பூர் நட்புறவுக்கு இன்று சிறப்பான நாள், புத்தாக்கம் மற்றும் நிதித்தொழில்நுட்பத்தில் இரு நாடுகளின் கூட்டுறழு ஆழமாகச் சென்றுள்ளது. என்னுடைய நண்பர் பிரதமர் லீ ஹீன் லூங்குடன் நிகழ்ச்சியில் பங்கேற்பது இன்னும் சிறப்பானது” எனத் தெரிவித்தார். 
இரு நாடுகளின் செயலிகளும் இணைக்கப்பட்டுள்ளதால், இனிமேல் சிங்கப்பூரில் வாழும் இந்தியர்கள் சிரமமின்றி பணம் அனுப்பலாம். 

எல்லை கடந்து ஒருவரிடம் இருந்து ஒருவருக்கு யுபிஐ மூலம் பணம் அனுப்பும் வசதியை முதன்முதலாக சிங்கப்பூர் பெற்றுள்ளது. 

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறுகையில் “ சிங்கப்பூரில் உள்ள இந்தியர்கள், குறிப்பாக தொழிலாளர்கள், மாணவர்கள் டிஜிட்டல்நுட்பத்தைிந் பலன்களை பெறலாம். சிங்கப்பூரில் இருந்து குறைந்த செலவில் தேவையான பணத்தை அனுப்பிவிடலாம்” எனத் தெரிவித்துள்ளது. க்யூஆர் கோட் மூலம் யுபிஐ செயலியை பயன்படுத்தும் சிங்கப்பூரில் ஏற்கெனவே சில இடங்களில் புழக்கத்துக்கு வந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டு பயணத்துக்காக மாதம்தோறும் 100 கோடி டாலர் செலவிடும் இந்தியர்கள்:RBI அறிக்கை

சிங்கப்பூர் பிரதமர் லீ ஹீன் லூங் பேசுகையில் “ பேநவ் மற்றும் இந்தியாவின் யுபிஐ செயலிக்கு இடையிலான கூட்டு அறிமுகத்தை பிரதமர் மோடியுடன் இணைந்து செயல்படுத்துவது மகிழ்ச்சியாக இருக்கிறது. சிங்கப்பூர் நிதி ஆணையம், இந்திய ரிசர்வ் வங்கி ஆகியவற்றுக்கு வாழத்துகள். சிங்கப்பூரிலும், இந்தியாவிலும் உள்ள அனைவருக்கும் இந்த இணைப்பின் மூலம் பலன் கிடைக்கும்” எனத் தெரிவித்தார்