McKinsey & Company: மெக்கின்ஸி நிறுவனம் 2,000 ஊழியர்களை வேலையிலிருந்து நீக்க முடிவு

அமெரிக்காவைச் சேர்ந்த மேலாண்மை மற்றும் ஆலோசனை வழங்கும் மெக்கின்ஸி அன்ட் கோ நிறுவனம், 2 ஆயிரம் ஊழியர்களை வேலையிலிருந்து நீக்க முடிவு செய்துள்ளதாக ப்ளூம்பெர்க் செய்தி வெளியிட்டுள்ளது.

McKinsey will lay off 2,000 people in one of its largest downsizing.

அமெரிக்காவைச் சேர்ந்த மேலாண்மை மற்றும் ஆலோசனை வழங்கும் மெக்கின்ஸி அன்ட் கோ நிறுவனம், 2 ஆயிரம் ஊழியர்களை வேலையிலிருந்து நீக்க முடிவு செய்துள்ளதாக ப்ளூம்பெர்க் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த ஆட்குறைப்பு என்பது வாடிக்கையாளர்களுடன் நேரடியாகத் தொடர்பு இல்லாத துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள் மீதுதான் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெரிந்துகொள்ளுங்கள்| பான் கார்டு தொலைந்துவிட்டால் என்ன செய்வது? எப்படி விண்ணப்பித்து பெறுவது?

மெக்கின்ஸி அன்ட் கோ நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் விடுத்தஅறிவிப்பில் “ நாங்கள் எங்கள் வாடிக்கையாளருடன் நேரடியாகத் தொடர்பில் இல்லாத பிரிவில் பணியாற்றும் குழுவை மறுவடிவமைப்பு செயய இருக்கிறோம். ஏறக்குறைய 10 ஆண்டுகளுக்குப்பின் இந்த மாற்றம் நடக்கிறது. இந்த குழுவினர் எங்கள் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக, ஊக்கமாக இருந்தார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

 இந்த ஆட்குறைப்பு என்பது, மக்நோலியா திட்டத்தின் ஒருபகுதி. வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக்கொள்ள இந்த ஆட்குறைப்பு உதவும் என நம்புகிறோம், அனைத்து ஊழியர்களையும் பரவலாக எவ்வாறு பயன்படுத்துவது குறித்தும் மெக்கின்ஸி ஆலோசனை செய்து வருகிறது என்று ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.

இந்தியா, சீனா மட்டும் உலகப் பொருளாதார வளர்ச்சியில் பாதிக்கும் அதிகமாக பங்களிக்கும்: ஐஎம்எப் நம்பிக்கை

இந்த ஆட்குறைப்புத் திட்டம் வரும்வாரத்தில் முடிவாகும். எத்தனை பேரை வேலையிலிருந்து நீக்குவது என்பது விரைவில் தெரியவரும். தற்போது மெக்கின்ஸி அன்ட் கோ நிறுவனத்தில் உலகம்முழுவதும் 45ஆயிரம் பேர் பணியாற்றுகிறார்கள். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் 28ஆயிரம் பேர்தான் இருந்தனர்.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios