PAN Card: தெரிந்துகொள்ளுங்கள்| பான் கார்டு தொலைந்துவிட்டால் என்ன செய்வது? எப்படி விண்ணப்பித்து பெறுவது?
பான் கார்டு தொலைந்துவிட்டால் எவ்வாறு பெறுவது, எப்படி மீண்டும் விண்ணப்பிப்பது குறித்த தகவல்களை பார்க்கலாம்.
பான் கார்டு தொலைந்துவிட்டால் எவ்வாறு பெறுவது, எப்படி மீண்டும் விண்ணப்பிப்பது குறித்த தகவல்களை பார்க்கலாம்.
எந்தஒரு சொத்து வாங்கவும்,விற்கவும், விலை உயர்ந்த பொருட்கள் வாங்கவும்,விற்கவும், இன்று பான்கார்டு இன்றியமையாத ஆவணமாக மாறிவிட்டது. குறிப்பாக வருமானவரி ரிட்டன் தாக்கல் செய்ய பான் கார்டு முக்கியமாகும்.
ஒருவர் தான் வைத்திருக்கும் பான் கார்டை தொலைவிட்டால் உடனடியா டூப்ளிகேட் பான் கார்டை ஆன்லைன் மூலம் அல்லது ஆஃப் லைனில் விண்ணப்பிக்கலாம். அல்லது மின்னணு பான்கார்டை பதவிறக்கம் செய்து கொள்ள முடியும்
நிதிஆயோக் சிஇஓ-வாக முன்னாள் வர்த்தகச் செயலாளர் பிவிஆர் சுப்ரமணியம் நியமனம்: யார் இவர்?
ஆனால், பான் கார்டு திருடப்பட்டாலோ அல்லது தொலைந்துவிட்டநிலையில் அது குறித்து உடனடியாக அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவிக்க வேண்டும், முதல்தகவல் அறிக்கை பதிவு செய்து, யாரும் கார்டை பயன்படுத்தாதவாறு தடுக்க வேண்டும், எப்ஐஆர் காப்பியும் பெற வேண்டும்
ஆன்-லைனில் எவ்வாறு பான் கார்டு மீண்டும் விண்ணப்பிப்பது
1. TIN-NSDL என்ற அதிகாரபூர்வ இணையதளத்துக்குச் செல்ல வேண்டும்
2. பான் கார்டில் உள்ள விவரத்தை மாற்றுதல், அல்லது மறுபிரின்ட் எடுத்தல் என ஏதாவது ஒன்றைத் தேர்வு செய்ய வேண்டும்.
3. அதில் வரும் விண்ணப்பத்தில் பெயர், பிறந்ததேதி, மொபைல் எண் ஆகியவற்றை பூர்த்தி செய்து சப்மிட் செய்ய வேண்டும்.
4. ஒரு டோக்கன் எண் வழங்கப்படும், அந்த எண் விண்ணப்பதாரரின் மின்அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்
5. தனிப்பட்ட தகவல்களை நிரப்பியபின், பான் கார்டு விண்ணப்பத்தை சப்மிட் செய்ய வேண்டும். பிரின்ட் எடுத்து தபால் மூலம் அனுப்புப்போகிறீர்களா அல்லது டிஜிட்டல் ரீதியாக அனுப்பப்போகிறீர்களா என்று கேட்கப்படும்
அதானி சொத்து 5000 கோடி டாலருக்கும் கீழ் சரிந்தது|30 நாட்களுக்குமுன் 3வது இடம்!இப்போ 25!
6. அஞ்சல் மூலம் அனுப்புவதாக இருந்தால், ஓட்டுநர் உரிமம் நகல், வாக்காளர் அடையாள அட்டை, பிறப்புச்சான்று, பாஸ்போர்ட் இதில் ஏதாவது ஒன்றில் விண்ணப்பதாரர் கையொப்பமிட்டு, உரிய கட்டணத்தை செலுத்தி ஆதார் வழங்கும் என்எஸ்டிஎல் அமைப்புக்கு அனுப்ப வேண்டும்.
7. அதில் அஞ்சல் கவரில், எதற்காக விண்ணப்பிக்கிறோம் என்ற தகவலையும் குறிப்பிட வேண்டும்.
8. டிஜிட்டல் ரீதியாக தாக்கல் செய்யும்போது, கேஒய்சி விவரங்கள் சரிபார்க்கப்பட்டு, ஓடிபி எண் ஆதார் பதிவு செய்த செல்போன் எண்ணுக்கு அனுப்பி வைக்கப்படும். அந்த ஓடிபி எண்ணைக் குறிப்பிட்டு, டிஜிட்டல் கையொப்பம் மூலம் அனுப்பி வைக்கலாம்.
9. அஞ்சல் மூலம் பான் கார்டு வர வேண்டுமா, அல்லது இ-பான் கார்டு தேவையா என்பதை குறிப்பிட வேண்டும்.
10. விண்ணப்பத்தை நிறைவு செய்யும்போது, தகவல்தொடர்பு முகவர், விண்ணப்ப விவரங்களைக் குறிப்பிட்டு விண்ணப்பத்தை சப்மிட் செய்ய வேண்டும்.
11. அனைத்தும் முடிந்தபின், கட்டணம் செலுத்தும் பக்கத்துக்குச் செல்லும் அதில் குறிப்பிடப்படும் கட்டணத்தை வங்கிக்கணக்கு, யுபிஐ மூலம் செலுத்தலாம்.
12. இந்த பணிகள் முடிந்த 15 முதல் 20 நாட்களுக்குள் பான் கார்டு வழங்கப்படும்.
ஜார்ஜ் சோரஸ் பேச்சு இந்திய ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்: ஸ்மிருதி இரானி கொந்தளிப்பு
ஆஃப்-லைனில் பான்கார்டு விண்ணப்பிப்பது எப்படி
1. புதிய பான்கார்டு அல்லது பான்கார்டில் மாற்றம் செய்யும் படிவம் இதில் ஏதாவது ஒன்றை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
2. படிவத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை ஆங்கிலத்தில் கேபிடல் எழுத்தில் எழுத வேண்டும்.
3. விண்ணப்பதாரர், 2 பாஸ்போர்ட் புகைப்படத்தில் குறுக்குக் கையொப்பமிட்டு படிவத்தில் ஒட்ட வேண்டும்
4. இந்த படிவத்தில் கட்டணம் செலுத்தியதற்கான ரசீது, அடையாள அட்டையின் நகல் ஆகியவற்றை என்எஸ்டிஎல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
இந்த விண்ணப்பத்தை வருமானவரி துறையின் பான் சேவை பரிசீலித்து அடுத்த 2 வாரங்களில் டூப்ளிகேட் பான் கார்டு முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்