Asianet News TamilAsianet News Tamil

irctc: railways: ரயில் லேட்டா? ஐஆர்சிடிசி வழங்கும் இந்த உரிமையை கேட்க மறக்காதீங்க

ரயில் குறித்த நேரத்துக்கு வரவில்லை, தாமதமாக வருகிறது என்று கவலைப்படுகிறீர்களா. இனிமேல் கவலைப்படாதிங்க!. ஐஆர்சிடிசி வழங்கும் இந்த உரிமையை இனிமேல் கேட்டு பெற்று எஞ்சாய் பண்ணுங்க.

If the train is late, you have the right to use THIS facility from IRCTC.
Author
First Published Sep 6, 2022, 4:57 PM IST

ரயில் குறித்த நேரத்துக்கு வரவில்லை, தாமதமாக வருகிறது என்று கவலைப்படுகிறீர்களா. இனிமேல் கவலைப்படாதிங்க!. ஐஆர்சிடிசி வழங்கும் இந்த உரிமையை இனிமேல் கேட்டு பெற்று எஞ்சாய் பண்ணுங்க.

உயர் நடுத்தரக் குடும்பத்தினர், நடுத்தரக் குடும்பத்தினர், சாமானியர்களுக்கு பயணத்தில் வரப்பிரசாதமாக இருப்பது ரயில்பயணம்தான். ஆனால், சில நேரங்களில் இயற்கை இடர்பாடுகளான மழை, வெள்ளம், பனிக்காலத்தில் ரயில்கள் தாமதமாக வருவது இயல்பானதாக மாறும். 

gdp of india:உலகப் பொருளாதாரத்தில் 3வது இடத்துக்கு இந்தியா முன்னேறும்: ஜெர்மனி, ஜப்பானை தோற்கடிக்கும்

If the train is late, you have the right to use THIS facility from IRCTC.

ஆனால், அந்த நேரத்தில் டிக்கெட்டை முன்பதிவு செய்துவிட்டு ரயிலுக்காக பயணிகள் காத்திருப்பது வேதனைக்குரியது. அந்த நேரத்தில் பயணிகள் கவலைப்படாமல் ஐஆர்சிடிசி வழங்கும் உரிமையை பயணிகள் அனுபவித்து ரிலாக்ஸாக இருக்கலாம்.

ncrb:முதியோர் கொலையில் தமிழகம் முதலிடம் ! வயதானவர்கள் வாழ தகுதியில்லாதவர்களா? என்சிஆர்பி அதிர்ச்சித் தகவல்

அந்த உரிமை என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்

ரயில்கள் குறித்த நேரத்துக்குள் வராமல் தாமதமாக வருவதாக அறிவிக்கப்பட்டால் ஐஆர்சிடிசி விதிப்படி, பயணிகளுக்கு இலவசமாக உணவு மற்றும் குடிக்க ஏதாவது வழங்குவது கட்டாயமாகும். இந்த உணவுக்கு எந்தவிதமான கட்டணமும் ஐஆர்சிடிசி பயணிகளிடம் இருந்து வசூலிக்கக்கூடாது. 

இதுபோன்ற நேரத்தில் பயணிகள் தங்கள் உரிமையை கேட்டுப் பெற்று இலவசமாக உணவும், குடிக்க தேநீர், காபி அல்லது குளி்ர்பானம் அல்லது தண்ணீர் ஆகியவற்றை கேட்டுப் பெறத் தயங்கக்கூடாது. இந்த உரிமையை ஐஆர்சிடிசி வழங்குகிறது. இந்திய ரயில்வேயின் விதியின்படி, ரயில் தாமதமாகினால், பயணிகளுக்கு காலை உணவு, மதிய உணவு வழங்கிட வேண்டும். 

If the train is late, you have the right to use THIS facility from IRCTC.

எப்போது இந்த வசதி கிடைக்கும்

ஐஆர்சிடிசி விதியின்படி, ரயில் 30 நிமிடங்களுக்கு அதிகமாக தாமதமாக வந்தால் இலவசமாக உணவைக் கேட்டுப் பெறலாம். ஆனால்,  30 நிமிடங்களுக்குள் தாமதமாக ரயில் வந்தால் இலவச உணவைப் பெற முடியாது. கேட்டரிங் கொள்கையின்படி, ரயில்கள் 2 மணிநேரம் அல்லது அதற்கு மேல் தாமதமாக வந்தால், சதாப்தி, துரந்தோ, ராஜ்தானி ரயில் பயணிகளுக்கு இந்த வசதி கிடைக்கும்.

ncrb:முதியோர் கொலையில் தமிழகம் முதலிடம் ! வயதானவர்கள் வாழ தகுதியில்லாதவர்களா? என்சிஆர்பி அதிர்ச்சித் தகவல்

If the train is late, you have the right to use THIS facility from IRCTC.

கேட்டரிங் கொள்கையிந்படி, தேநீர் அல்லது காபி, மற்றும் 2 பிக்கெட் காலை உணவாகவும், தேநீர் அல்லது காபி மற்றும் 4 பிரட் துண்டுகள்,வெண்ணெய் மாலை உணவாகவும் வழங்கலாம். சாதம் உள்ளிட்ட மதிய உணவாகவும் அல்லது 7 பூரி, கூட்டு, ஊறுகாய் வழங்கலாம். 

Follow Us:
Download App:
  • android
  • ios