பான் கார்டு இல்லாமலே ஆன்லைனில் புதிய வங்கிக் கணக்கு தொடங்க முடியுமா?

பான் கார்டு இல்லாமலேயே வங்கிக் கணக்கைத் ஆரம்பிக்கலாம். அது எப்படி, அதற்கான நிபந்தனைகள் என்னென்ன என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

How to Open Bank Account Without Pan Card sgb

வங்கிக் கணக்கு உங்கள் பணத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும், வட்டி மூலம் கூடுதல் பணத்தைப் பெறவும் ஒரு சிறந்த வழியாகும். நீங்கள் ஒரு கணக்குத் திறக்க விரும்பினால், ​​KYC சரிபார்ப்புக்காக சில ஆவணங்களை வங்கிக்கு வழங்க வேண்டும். அந்த வகையில் வங்கி கணக்கு தொடங்குவதற்கு பான் கார்டு அவசியமா?

ஒரு காலத்தில் வங்கியில் புதிய கணக்கு தொடங்க வேண்டும் என்றால் பான் கார்டு கட்டாயமாக இருந்தாது. ஆனால் இப்போது அப்படி இல்லை. பான் கார்டு இல்லாமலேயே வங்கிக் கணக்கைத் ஆரம்பிக்கலாம். அது எப்படி, அதற்கான நிபந்தனைகள் என்னென்ன என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

வாட்ஸ்அப் இந்தியாவை விட்டு வெளியேறுகிறதா? மத்திய அமைச்சர் சொன்ன சேதி என்ன தெரியுமா?

யார் பான் கார்டு இல்லாமல் வங்கிக் கணக்குத் தொடங்க முடியும்?

18 வயதுக்கு மேற்பட்டவராக இருந்தால் அவரிடம் பான் கார்டு இல்லாவிட்டாலும், ஆன்லைனிலேயே புதிதாய ஒரு வங்கிக் கணக்கைத் தொடங்கலாம். இந்த கணக்குகள் பெரும்பாலும் 'சிறிய கணக்குகள்' என்று அழைக்கப்படுகின்றன. இந்தக் கணக்குகளில் டெபிட்/கிரெடிட் கார்டைப் பெற முடியாது. பேலன்ஸ், கடன் பெறுவது, பணப் பரிவர்த்தனை, டெபாசிட் போன்றவற்றில் வரம்புகள் இருக்கும்.

ஆனால், பான் கார்டு பெற்றதும் இந்தக் கணக்குடன் இணைத்துவிட்டால், சிறிய கணக்கை வழக்கமான சேமிப்புக் கணக்காக மேம்படுத்தும் வசதி சில வங்களில் இருக்கும். பான் கார்டு இணைக்கப்பட்டதும் குறைவான கட்டுப்பாடுகள்தான் இருக்கும்.

பான் கார்டு கட்டாயமா?

வங்கிக் கணக்கு தொடங்கும்போது பான் கார்டு இருக்கிறதா என்று கேட்கக்கூடும். ஆனால், அது கட்டாயமில்லை. பான் கார்டு இல்லையென்றால், வேறு அடையாளச் சான்றுகளையும் முகவரி சான்றுகளையும் KYC க்கு பயன்படுத்தலாம்.

ஆதார் அட்டை மிகவும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்படும் அடையாளச் சான்றுகளில் ஒன்று. வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுனர் உரிமம், போன்ற அரசால் அங்கீகரிக்கப்பட்ட சான்றுகளை அளிக்கலாம். முகவரி சான்றுக்கு மின்சாரம், கேஸ் சிலிண்டர் போன்றவற்றின் சமீபத்திய பில்லை கொடுக்கலாம். ரேஷன் கார்டு முகவரி சான்றுக்கு பரவலாக பயன்படுத்தப்படுகிறது.

முக்கியக் குறிப்பு:

வங்கிகளுக்கு வெவ்வேறு தேவைகள் இருக்கலாம். எனவே விரும்பும் வங்கிக்கு நேரடியாகச் சென்று கணக்கு தொடங்குவது சிறந்தது. சில வங்கிகள் வருமானச் சரிபார்ப்புக்காக PAN கார்டுக்கு மாற்றாக படிவம் 16 ஐக் கேட்கலாம். சரிபார்ப்புக்காக அசல் ஆவணங்கள் அல்லது சான்றளிக்கப்பட்ட நகல்களை மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும்.

ஜீரோ சம்பளத்தில் வேலை பார்க்கும் அம்பானியின் வாரிசுகள்! அப்படி என்ன செய்றாங்க தெரியுமா?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios