வாட்ஸ்அப் இந்தியாவை விட்டு வெளியேறுகிறதா? மத்திய அமைச்சர் சொன்ன சேதி என்ன தெரியுமா?
வாட்ஸ்அப்பின் என்கிரிப்ஷன் தொழில்நுட்பம், மெசேஜ் அனுப்பும் பயனும் பெறும் பயனரும் மட்டுமே செய்திகளைப் படிக்க முடியும் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் பயனரின் தனியுரிமைக்கு முக்கியமானது என்று வாட்ஸ்அப் நிறுவனம் வாதிடுகிறது.
வாட்ஸ்அப்பின் சேவையை இந்தியாவில் நிறுத்தும் திட்டம் எதுவும் இல்லை என்று அந்நிறுவனத்தின் தாய் நிறுவனமான மெட்டா உறுதி அளித்துள்ளது என மத்திய தகவல்தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் இதனை அவர் கூறியுள்ளார்.
காங்கிரஸ் உறுப்பினர் விவேக் தன்கா எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், வாட்ஸ்அப் அல்லது மெட்டா இந்தியாவில் செயல்பாடுகளை நிறுத்துவதற்கான எந்த திட்டத்தையும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திற்கு தெரிவிக்கவில்லை என்று அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.
தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000 இன் பிரிவு 69A இன் கீழ் பயனர் விவரங்களை மத்திய அரசுடன் பகிர வேண்டும் என்ற உத்தரவுகளின் காரணமாக வாட்ஸ்அப் தனது சேவையை நிறுத்த பரிசீலிப்பதாக தகவல் வெளியான நிலையில் அமைச்சரின் பதில் வெளியாகி இருக்கிறது.
ஆபாச வீடியோ பார்த்து தங்கையை பலாத்காரம் செய்த சிறுவன்! தாயின் கண்முன்னே கொடூரக் கொலை!
சமூக ஊடக தளங்கள் தொடர்பான மத்திய அரசின் உத்தரவுகள் தேசிய பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கை உறுதிப்படுத்துவதற்காக வெளியிடப்படுகின்றன என்றும் அமைச்சர் வைஷ்ணவ் தெளிவுபடுத்தி இருக்கிறார். இந்த வழிகாட்டுதல்கள் இந்தியாவின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பைக் காப்பதற்கும் மற்ற நாடுகளுடன் நட்புறவைப் பேணுவதற்கும் முக்கியமானவை என்று குறிப்பிட்டுள்ளார்.
குற்றச் செயல்களைத் தூண்டும் அல்லது அமைதியை சீர்குலைக்கும் நடவடிக்கைகளைத் தடுப்பதும் மத்திய அரசு பிறப்பித்த உத்தரவுகளின் நோக்கம் என அவர் வலியுறுத்தி இருக்கிறார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், வாட்ஸ்அப் தனது என்கிரிப்ஷன் அம்சத்தில் சமரசம் செய்துகொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், இந்தியாவில் சேவையை நிறுத்திக்கொள்வோம் என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் கூறியிருந்தது.
வாட்ஸ்அப்பின் என்கிரிப்ஷன் தொழில்நுட்பம், மெசேஜ் அனுப்பும் பயனும் பெறும் பயனரும் மட்டுமே செய்திகளைப் படிக்க முடியும் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் பயனரின் தனியுரிமைக்கு முக்கியமானது என்று வாட்ஸ்அப் நிறுவனம் வாதிடுகிறது.
மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள் தனியுரிமை உரிமைகளை மீறுவதாகவும், அரசியலமைப்பிற்கு விரோதமாக உள்ளதாகவும் வாட்ஸ்அப் கூறியது.
முன்னதாக, மெட்டா குழுமத்தின் சிஇஓ மார்க் ஜூக்கர்பெர்க், மெசேஜிங் தொழில்நுட்பங்களை இந்தியா விரைவாக ஏற்றுக்கொண்டிருக்கிறது எனப் பாராட்டினார், இந்தியா தொழில்நுட்ப புதுவரவுகளை கிரகித்துக்கொள்வதில் உலக அளவில் முன்னணியில் உள்ளது என்றும் குறிப்பிட்டார்.
இந்தியாவில் 400 மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் வாட்ஸ்அப் பயன்படுத்துகின்றனர். உலகிலேயே மிக அதிக பயனர்களைக் கொண்ட நாடும் இந்தியா தான். இதனால் இந்திய பயனர்களின் தனியுரிமைக்கு மெட்டா நிறுவனம் அதிக முக்கியத்துவத்தைக் கொடுத்து வருகிறது. இதற்காக சட்டப் போராட்டங்கள் இருந்தாலும் வாட்ஸ்அப் இந்திய சந்தையில் இருந்து வெளியேறத் திட்டமிட்டுள்ளதாக எந்த அறிகுறியும் இல்லை.