மத்திய அரசு பல பொருட்களின் ஜிஎஸ்டி விகிதங்களை குறைத்துள்ளது. இந்த விலை குறைப்பு செப்டம்பர் 22, 2025 முதல் அமலுக்கு வரும்.
மத்திய அரசு தீபாவளிக்கு முன்னதாக பொதுமக்களுக்கு ஒரு பரிசை அளித்துள்ளது. புதன்கிழமை நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. 18% மற்றும் 12% வரி அடுக்குகளில் இருந்த பல பொருட்கள் 5% வரி அடுக்குக்கு மாற்றப்பட்டுள்ளன. இதன் மூலம் அன்றாடம் பயன்படுத்தப்படும் பல பொருட்களின் விலை குறையும். இந்த புதிய விகிதங்கள் நவராத்திரியின் முதல் நாளான செப்டம்பர் 22, 2025 முதல் அமலுக்கு வரும். புதிய ஜிஎஸ்டி சீர்திருத்தத்திற்குப் பிறகு எந்தெந்த பொருட்களின் விலை குறையும் என்பதை விரிவாக பார்க்கலாம்.
அன்றாடப் பொருட்கள்
- ஹேர் ஆயில், ஷாம்பு, டூத்பெஸ்ட், சோப், டூத் பிரஷ், ஷேவிங் க்ரீம் – 18% → 5%
- வெண்ணெய், நெய், சீஸ், பால் பொருட்கள் – 12% → 5%
- பேக் செய்யப்பட்ட காரப் பொருட்கள், மிக்ஸ்சர் – 12% → 5%
- பாத்திரங்கள், பால் புட்டிகள், நாப்கின்கள், டயப்பர்கள் – 12% → 5%
- தையல் இயந்திரம் மற்றும் அதன் பாகங்கள் – 12% → 5%
விவசாயப் பொருட்கள்
- டிராக்டர் டயர்கள் மற்றும் பாகங்கள் – 18% → 5%
- டிராக்டர் - 12% → 5%
- உயிரி பூச்சிக்கொல்லிகள், நுண்ணூட்டச்சத்துக்கள் – 12% → 5%
- சொட்டு நீர்ப்பாசன அமைப்பு – 12% → 5%
- மண் பதப்படுத்தும் இயந்திரங்கள் – 12% → 5%
மருத்துவப் பொருட்கள்
- தனிநபர் மருத்துவக் காப்பீடு – 18% → 0% (பூஜ்யம்)
- தெர்மாமீட்டர் – 18% → 5%
- மருத்துவ தர ஆக்ஸிஜன் – 12% → 5%
- அனைத்து வகை நோய் கண்டறியும் கருவிகள் – 12% → 5%
- குளுக்கோமீட்டர் மற்றும் டெஸ்ட் ஸ்ட்ரிப்ஸ் – 12% → 5%
ஆட்டோமொபைல்
- பெட்ரோல் கார்கள் (1200 சிசி வரை) – 28% → 18%
- டீசல் கார்கள் (1500 சிசி வரை) – 28% → 18%
- மூன்று சக்கர வாகனங்கள் – 28% → 18%
- மோட்டார் சைக்கிள்கள் (350 சிசி வரை) – 28% → 18%
- சரக்கு வாகனங்கள் – 28% → 18%
மின்னணு சாதனங்கள்
- ஏர் கண்டிஷனர் – 28% → 18%
- 32 அங்குலத்திற்கு மேல் உள்ள டிவி – 28% → 18%
- மானிட்டர், புரொஜெக்டர்கள் – 28% → 18%
- டிஷ்வாஷர் – 28% → 18%
கல்வி
- வரைபடங்கள், விளக்கப்படங்கள் – 12% → 0% (பூஜ்யம்)
- பென்சில்கள், ஷார்ப்பனர்கள், கிரேயான்கள் – 12% → 0%
- நோட்டுப் புத்தகங்கள் – 12% → 0%
- அழிப்பான் – 12% → 0%.
