ஸ்கூட்டர், பைக், கார் வாங்க சரியான நேரம் இதுதான்! ஜிஎஸ்டி சலுகையால் மக்கள் குஷி!
தீபாவளிக்கு முன், அரசு வாகனங்கள் மற்றும் ஆட்டோ பாகங்களுக்கான ஜிஎஸ்டி வரியை 28% இல் இருந்து 18% ஆகக் குறைத்துள்ளது. இந்த வரிச் சலுகை நடுத்தர வர்க்க மக்களுக்குப் பெரிய பலனளிக்கும்.

வாகன ஜிஎஸ்டி குறைப்பு
இந்த தீபாவளிக்கு முன் நடுத்தர வர்க்க மக்களுக்கு பெரிய பரிசாக, அரசு ஜிஎஸ்டி வரிகளில் பெரிய மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக போக்குவரத்து துறையில் பல வாகனங்களுக்கும் ஆட்டோ பாகங்களுக்கும் 28% ஜிஎஸ்டி குறைத்து 18% ஆக மாற்றப்பட்டுள்ளது. இதனால் லாரிகள், பேருந்துகள், ஆம்புலன்ஸ், இ-ரிக்ஷா போன்ற வாகனங்களின் விலை குறைய வாய்ப்பு உள்ளது. மேலும், தொழிற்சாலையிலிருந்து நேரடியாக மருத்துவ வசதிகளுடன் வரும் ஆம்புலன்சுகளுக்கும் ஜிஎஸ்டி சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
கார் பைக் ஜிஎஸ்டி சலுகை
ஜிஎஸ்டி 2.0 வரும் இந்த புதிய வரிச் சலுகை, சாதாரண மக்களின் வாழ்க்கைச் செலவுக்கு நேரடியான பலன்களை வழங்கும். தினசரி பயன்பாட்டுக்காக வாகனம் வாங்க நினைக்கும் நடுத்தர வர்க்க குடும்பங்களுக்கு இது மிகப் பெரிய நிம்மதியாக இருக்கும். இதுவரை 28% ஜிஎஸ்டி வாகனங்கள் மற்றும் அவற்றின் பாகங்கள் 18% ஆக குறைந்துள்ளதால், பராமரிப்பு செலவு குறைய வாய்ப்பு அதிகம்.
டயர் ஆட்டோ பாகங்கள் வரி குறைப்பு
முதலில் டயர்கள் குறித்து பார்க்கும்போது சைக்கிள், ரிக்ஷா, விமான டயர்களைத் தவிர்த்து, மற்ற அனைத்து புதிய ரப்பர் டயர்களுக்கும் 28% ஜிஎஸ்டி இப்போது 18% மட்டுமே. இதனால் வாகன பராமரிப்பு செலவு குறையும். அதேபோல், சரக்கு ஏற்றிச் செல்லும் மோட்டார் வாகனங்கள், பேருந்துகள், லாரிகள், ஆம்புலன்சுகள் அனைத்துக்கும் வரிச்சலுகை கிடைத்துள்ளது. 1800cc-க்கு மேற்பட்ட இன்ஜின் கொண்ட ரோடு டிராக்டர்களுக்கும் 18% ஜிஎஸ்டி மட்டுமே விதிக்கப்படும்.
18% ஜிஎஸ்டி மாற்றம்
குடும்பங்களுக்கான சிறிய வாகனங்களும் மலிவாகின்றன. 1200cc வரை என்ஜின் கொள்ளளவு கொண்ட பெட்ரோல், CNG, LPG கார்கள் (நீளம் 4 மீட்டர் வரை) மற்றும் 1500cc வரை டீசல் கார்கள் (நீளம் 4 மீட்டர் குறைவாக) ஆகியவற்றுக்கு இனி 18% ஜிஎஸ்டி மட்டுமே. இதனால் ஹாட்ச்பேக், காம்பாக்ட் கார்கள் வாங்கும் சுமை குறையும். மேலும், 350cc வரையிலான என்ஜின் கொள்ளளவு கொண்ட மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்கள், மோப்பெட்கள் மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் மலிவாகின்றன.
ஆம்புலன்ஸ் ஜிஎஸ்டி விலக்கு
சுகாதாரத்துறையிலும் பாதிப்பு ஏற்படும் வகையில், மருத்துவ உபகரணங்களுடன் தயாராக வரும் ஆம்புலன்ஸ்களுக்கான ஜிஎஸ்டி குறைக்கப்பட்டுள்ளது. இதனால் ஆம்புலன்ஸ் சேவைகள் குறைந்த விலையில் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. அதோடு, பெட்ரோல்-டீசல் + எலக்ட்ரிக் மோட்டார் கொண்ட ஹைப்ரிட் வாகனங்களும் சலுகைக்குள் வந்துள்ளன. இனி காம்பாக்ட் ஹைப்ரிட் கார்கள் இரு வகைகளுக்கும் 18% வரி மட்டுமே விதிக்கப்படும். இதன் மூலம் சுற்றுச்சூழல் நட்பு வாகனங்கள் எதிர்காலத்தில் மலிவான விலையில் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.