MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • இந்த பொருட்களுக்கு 0% ஜிஎஸ்டி வரி.. மோடி அரசின் தீபாவளி பரிசு

இந்த பொருட்களுக்கு 0% ஜிஎஸ்டி வரி.. மோடி அரசின் தீபாவளி பரிசு

மோடி அரசு அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு ஜிஎஸ்டியை நீக்கியுள்ளது. தற்போது பல பொருட்கள் இனி 0% வரிக்குள் வந்துள்ளன. இதனால் சாதாரண மக்களின் அன்றாட செலவில் நேரடி குறைவு ஏற்படும்.

1 Min read
Author : Raghupati R
Published : Sep 04 2025, 08:51 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ஜிஎஸ்டி 0%
Image Credit : google

ஜிஎஸ்டி 0%

மோடி அரசு மக்களுக்கு பெரிய பரிசாக, அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு விதிக்கப்பட்ட ஜிஎஸ்டியை (ஜிஎஸ்டி) முழுமையாக நீக்கியுள்ளது. 56வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட இந்த முடிவால், பால், பனீர், ரொட்டி, சப்பாத்தி, கல்வி சார்ந்த பொருட்கள், ஹெல்த் இன்சூரன்ஸ், லைஃப் இன்சூரன்ஸ் உள்ளிட்ட பல பொருட்கள் இனி 0% வரிக்குள் வந்துள்ளன. இதனால் சாதாரண மக்களின் அன்றாட செலவில் நேரடி குறைவு ஏற்படும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
மோடி அரசு
Image Credit : PTI

மோடி அரசு

இந்த கூட்டத்துக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையேற்றார். கூட்டத்தில் வரிச் சதவீதத்தில் மாற்றங்கள் மட்டுமின்றி, வரித்திட்டத்தை எளிமைப்படுத்தும் முயற்சிகளும் தீவிரமாக நடந்தன. குறிப்பாக, முன்பு 5% வரி விதிக்கப்பட்ட UHT பால், சின்னா, பனீர் போன்றவற்றுக்கு இனி ஜிஎஸ்டி இல்லை. மேலும், ரொட்டி, சப்பாத்தி போன்ற இந்திய பாரம்பரிய உணவுகளும் வரிவிலக்குக்குள் வந்துள்ளன.

35
அத்தியாவசிய பொருட்கள் வரிவிலக்கு
Image Credit : Pixabay

அத்தியாவசிய பொருட்கள் வரிவிலக்கு

மேலும், மாணவர்கள் பயன்படுத்தும் நோட்டுப் புத்தகம், பென்சில், ஈரேசர், ஷார்ப்பனர் போன்ற ஸ்டேஷனரி பொருட்களுக்கும் வரி இல்லை. தனிநபர் ஹெல்த் இன்சூரன்ஸ் மற்றும் லைஃப் இன்சூரன்ஸ் பாலிசிகளும் 0% வரிக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. வரைபடம், சார்ட்ஸ், உலகக் கோளம், உயிர் காப்பு மருந்துகள் போன்ற பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையில் தொடர்புடைய பல சேவைகள் மற்றும் பொருட்கள் இதன்மூலம் குறைந்த விலையில் கிடைக்கும்.

45
ஜிஎஸ்டி சலுகை
Image Credit : Pixabay

ஜிஎஸ்டி சலுகை

ஜிஎஸ்டி கவுன்சில் இந்த முறை மிகப் பெரிய கட்டமைப்பு மாற்றத்தையும் தெரிவித்துள்ளது. இதுவரை இருந்த 12% மற்றும் 28% வரிச்சலுகைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இனி பெரும்பாலான பொருட்கள் 5% அல்லது 18% வரிச்சலுகை பிரிவில் மட்டுமே இருக்கும். இதனால் நடுத்தர வர்க்க மக்களுக்கு சில பொருட்கள் மலிவாகக் கிடைக்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.

55
56வது ஜிஎஸ்டி கவுன்சில்
Image Credit : SOCIAL MEDIA

56வது ஜிஎஸ்டி கவுன்சில்

சிறு மற்றும் நடுத்தர அளவிலான வியாபாரிகளுக்கும் இந்த மாற்றங்கள் பெரும் நிம்மதியைத் தருகின்றன. ஜிஎஸ்டி பதிவு மற்றும் வரி தாக்கல் செய்யும் செயல்முறைகள் எளிமைப்படுத்தப்படுகின்றன. நிபுணர்கள் கூறுவதாவது, இந்த மாற்றங்கள் அனைத்தும் வரித்திட்டத்தை வெளிப்படையாக நீதி மிக்கதாகவும் மாற்றி, வளர்ச்சியை நோக்கி செல்லும் மாபெரும் திட்டம் ஒரு பகுதியாகும்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜி.எஸ்.டி
பால்
மோடி அரசு
வணிகம்
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Diwali Gift: தீபாவளிக்கு முன் ரூ.2,000 வரப்போகுது.. உங்க வங்கி கணக்கில் வந்துருச்சா.. செக் பண்ணுங்க
Recommended image2
Income Tax Deadlines: நவம்பர் 7, 14, 15, 21, 30... வரி செலுத்துவோர் கவனிக்க வேண்டிய தேதிகள்!
Recommended image3
வங்கி வட்டி விகிதங்கள் முதல் கிரெடிட் கார்டு வரை: நவ.1 முதல் அமலுக்கு வரும் 5 முக்கிய விதிகள்!
Related Stories
Recommended image1
சிகரெட் முதல் கார் வரை! 40 சதவீத ஜிஎஸ்டி வரியை போட்டுத்தாக்கிய நிர்மலா சீதாராமன்!
Recommended image2
இனி ஹெல்த் இன்சூரன்ஸ்-க்கு ஜிஎஸ்டி இல்லை..! மத்திய அரசு அதிரடி சரவெடி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved