இனி டெபாசிட் கணக்கில் 4 நாமினிகளை சேர்க்கலாம்! மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு!!
வங்கி சட்ட திட்டங்களில் திருத்தம் செய்து நாமினிகளை சேர்க்க அனுமதி கொடுத்தாலும், கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் கணக்கு விவர்ங்களை குடும்பத்தினருடன் பகிர்ந்துகொள்ள வேண்டும்.
ஒரு டெபாசிட் கணக்கிற்கு நான்கு நாமினிகளை நியமிக்க அனுமதிப்பது உள்பட வங்கி சட்டங்களில் முக்கிய மாற்றங்களை கொண்டுவர மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. வெள்ளிக்கிழமை நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இது குறித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
டெபாசிட் கணக்குகளுக்கு நாமினியாக 4 பேரே நியமிக்க அனுமதிப்பதால், உரிமைகோரப்படாத டெபாசிட் தொகை அதிகரித்து வருவதைக் குறைக்கலாம் என்று மத்திய அரசு கருதுகிறது. நாமினிகள் டெபாசிட் தொகைக்கு உரிமை கோருவதில் உள்ள சிரமங்களைக் குறைக்க முடியும் என்றும் நம்பப்படுகிறது.
2024ஆம் ஆண்டின் மார்ச் மாத நிலவரப்படி நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளிலும் சேர்த்து உரிமை கோரப்படாத மொத்த டெபாசிட் தொகை ரூ.78,000 கோடியாக உள்ளது. டெபாசிட் செய்தவர் இறந்துபோகும்போது அல்லது பிற சந்தர்ப்பங்களில் அக்கவுண்ட்டில் இருந்து பணத்தை எடுக்க முடியாமல் போகிறது.
இதைத் தவிர்க்கும் வகையில் வங்கி தொடர்பான சட்டத்தில் மாற்றங்களைக் கொண்டுவர மத்திய அரசு தீர்மானித்தது. இப்போது, பிக்சட் டெபாசிட் கணக்குகளுக்கு ஒரு நாமினியை மட்டுமே சேர்க்க முடியும். இதனை 4 நாமினிகள் வரை சேர்க்கும் வகையில் மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்துடன் காப்பீடு மற்றும் HUF கணக்குகளிலிருந்து பணத்தை எடுப்பது தொடர்பாகவும் முக்கிய சீர்திருத்தங்கள் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது.
அன்புள்ள இந்திய ராணுவ வீரர்களுக்கு... 3ஆம் வகுப்பு சிறுவன் எழுதிய நெகிழ்ச்சியான கடிதம்!
பொது வருங்கால வைப்பு நிதியில் (PPF) கணக்கில் அதிகமான நாமினிகளை நியமிக்க அனுமதிக்கபவும் முடிவு செயப்பட்டுள்ளது. ஆனால், இந்த மாற்றங்கள் எப்போது அமலுக்கு வரும் என்பது தெரியவில்லை. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இது தொடர்பான மசோதாவை தாக்கல் செய்யும்போதுதான் கூடுதல் விவரங்கள் தெரியவரும்.
சில மாதங்களுக்கு முன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் டெபாசிட் கணக்குகளில் உரிமைகோரப்படாமல் இருக்கும் டெபாசிட் தொகை அதிகரிப்பது பற்றிச் சுட்டிக்காட்டி இருந்தார். வங்கிகள் மற்றும் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்தவர்கள் இறந்துபோனதும் அவர்கள் முதலீடு செய்த பணம் உரிமைகோரப்படாமல் வங்கியில் உள்ளது என்று அவர் எடுத்துரைத்தார்.
வங்கி சட்ட திட்டங்களில் திருத்தம் செய்து நாமினிகளை சேர்க்க அனுமதி கொடுத்தாலும், கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் கணக்கு விவர்ங்களை குடும்பத்தினருடன் பகிர்ந்துகொள்ள வேண்டும். அப்படிச் செய்தாலே உரிமைகோராமல் இருக்கும் தொகை கணிசமாகக் குறையும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
காத்திருக்கும் மத்திய அரசு ஊழியர்கள்! விரைவில் வருகிறது ஜாக்பாட் அறிவிப்பு!!