Asianet News TamilAsianet News Tamil

காத்திருக்கும் மத்திய அரசு ஊழியர்கள்! விரைவில் வருகிறது ஜாக்பாட் அறிவிப்பு!!

3 சதவீதம் அகவிலைப்படி உயர்வு இருக்கும் எனக் கூறப்பட்டாலும், இறுதி முடிவு எட்டப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. பணவீக்கப் போக்குகளைப் பொறுத்து 4 சதவீதம் வரை உயரலாம் என்றும் கூறப்படுகிறது.

7th Pay Commission: Central Govt Employees May See 3% DA Hike In September sgb
Author
First Published Aug 3, 2024, 9:20 PM IST | Last Updated Aug 3, 2024, 9:23 PM IST

செப்டம்பரில், மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு 3 முதல் 4 சதவீதம் அகவிலைப்படி (DA) உயர்வு அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

3 சதவீத அகவிலைப்படி உயர்வு இருக்கும் எனக் கூறப்பட்டாலும், இறுதி முடிவு எட்டப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. பணவீக்கப் போக்குகளைப் பொறுத்து 4 சதவீதம் வரை உயரலாம் என்றும் கூறப்படுகிறது.

தற்போதைய ​​அகவிலைப்படி அடிப்படை ஊதியத்தில் 50 சதவீதமாக உள்ளது. 7வது ஊதியக் குழுவின் கீழ் அடிப்படை ஊதியத்துடன் அகவிலைப்படியை இணைப்பது குறித்து விவாதங்கள் நடந்துள்ளன. ஆனால் அகவிலைப்படி 50 சதவீதத்தைத் தாண்டினால் இது சாத்தியமில்லை.

இந்தியா அமெரிக்க சம்பளத்தில் 1/4 பங்கை எட்டவே 75 வருஷம் ஆகும்: உலக வங்கி கணிப்பு

அதற்கு பதிலாக, வீட்டு வாடகை படி (HRA) போன்ற பிறவற்றை அதிகரிப்பதற்கான ஏற்பாடுகள் பரிசீலிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

மார்ச் 2024 இல், மத்திய அரசு அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்தில் 4 சதவீதம் உயர்த்தியது. மேலும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான அகவிலை நிவாரணமும் 4 சதவீதம் உயர்த்தப்பட்டது. ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் இருந்து அமலுக்கு வரும் வகையில் ஆண்டுக்கு இரண்டு முறை அகவிலைப்படி உயர்த்தப்படுகிறது.

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களின் கூட்டமைப்பு 8வது ஊதியக் குழுவை உருவாக்கவும், 2024 பட்ஜெட்டுக்கு முன்னதாக பழைய ஓய்வூதியத் திட்டத்தைக் கொண்டுவரவும் வலியுறுத்தியது. இருப்பினும், 8வது ஊதியக் குழு அமைக்கும் திட்டம் இல்லை என நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி ஜூலை 30ஆம் தேதி மாநிலங்களவையில் தெரிவித்தார்.

7வது ஊதியக் குழு பிப்ரவரி 2014 இல் நிறுவப்பட்டது. அதன் பரிந்துரைகள் ஜனவரி 1, 2016 முதல் நடைமுறைக்கு வந்தன.

வயநாட்டில் 8 மணிநேரம் போராடி பழங்குடியின குடும்பத்தைக் காப்பாற்றிய கேரள அதிகாரிகள்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios