Asianet News TamilAsianet News Tamil

வயநாட்டில் 8 மணிநேரம் போராடி பழங்குடியின குடும்பத்தைக் காப்பாற்றிய கேரள அதிகாரிகள்!

பாதிக்கப்பட்ட பழங்குடிக் குழந்தைகளின் தாய் உணவு தேடி அட்டமலா காட்டில் சுற்றித் திரிவதை வன அதிகாரி கே ஹாஷிஸ் கண்டதை அடுத்த அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

Wayanad Landslides: Kerala Officials Climb Hill For Eight Hours To Rescue Stranded Tribal Family sgb
Author
First Published Aug 3, 2024, 5:40 PM IST | Last Updated Aug 3, 2024, 5:42 PM IST

வயநாடு நிலச்சரிவைத் தொடர்ந்து மலை மேல் உள்ள குகையில் சிக்கித் தவித்த பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த நான்கு குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோரை மீட்க கேரள வனத்துறை அதிகாரிகள் எட்டு மணி நேரம் துணிச்சலான நடவடிக்கை மேற்கொண்டனர்.

ஜூலை 30ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் 300 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.இந்நிலையில், 4 வயதுக்குட்பட்ட நான்கு குழந்தைகள் உள்பட ஆறு பேர் அடங்கிய பழங்குடியின குடும்பத்தை கேரள அதிகாரிகள் மீட்டுள்ளனர். இந்த அதிகாரிகளுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

கல்பெட்டா வரம்பு வன அலுவலர் கே.ஹாஷிஸ் தலைமையிலான நான்கு பேர் கொண்ட குழுவினர், பலத்த மழை மற்றும் பாறை நிலப்பரப்புக்கு மத்தியில் மீட்புப் பணி மேற்கொண்டுள்ளனர்.

செப்டம்பர் 14 வரை தான் டைம் இருக்கு... இலவசமாக ஆதார் அப்டேட் செய்யும் வாய்ப்பை மிஸ் பண்ணாதிங்க!

“வயநாட்டில் நிலச்சரிவில் சிக்கியவர்கள் துணிச்சலான வனத்துறை அதிகாரிகளின் அயராத 8 மணிநேர போராட்டத்திற்குப் பிறகு, மீட்கப்பட்டனர். விலைமதிப்பற்ற ஆறு உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன" என்று முதல்வர் பினாராயி விஜயன் தனது எக்ஸ் பதிவில் பாராட்டியுள்ளார்.

பாதிக்கப்பட்ட பழங்குடிக் குழந்தைகளின் தாய் உணவு தேடி அட்டமலா காட்டில் சுற்றித் திரிவதை வன அதிகாரி கே ஹாஷிஸ் கண்டதை அடுத்த அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

"அவர்கள் காட்டில் கிடைத்த உணவுப் பொருட்களைப் பயன்படுத்தி உயிர்வாழ்கிறார்கள். காட்டில் கிடைக்கும் பொருட்களை உள்ளூர் சந்தையில் விற்று அரிசி வாங்குகிறார்கள். நிலச்சரிவு மற்றும் கனமழை காரணமாக, அவர்களால் எந்த உணவையும் வாங்க முடியவில்லை” என்று மீட்புப் பணியில் ஈடுபட்ட ஹாஷிஸ் கூறுகிறார்.

"மீட்கப்பட்ட குழந்தைகள் உணவு உட்கொள்ளாததால் சோர்வாக இருந்தனர். நாங்கள் எடுத்துச் சென்ற உணவுப் பொருட்களை அவர்களுக்கு ஊட்டினோம். குழந்தைகளை எங்கள் உடலில் கட்டி வைத்துவிட்டு மீண்டும் மலையில் இருந்து இறங்கி வந்தோம்" என்றும் அவர் தெரிவிக்கிறார்.

பஜாஜ் சி.என்.ஜி. பைக் வாங்கத் துடிக்கும் 33,000 பேர்! 77 நகரங்களில் விற்பனைக்கு ரெடி!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios