செப்டம்பர் 14 வரை தான் டைம் இருக்கு... இலவசமாக ஆதார் அப்டேட் செய்யும் வாய்ப்பை மிஸ் பண்ணாதிங்க!

செப்டம்பர் 14ஆம் தேதிக்குள் ஆதார் விவரங்களை இலவசமாக அப்டேட் செய்துகொள்ளலாம். இந்தக் காலக்கெடு முடிந்த பிறகு ஆதார் கார்டில் உள்ள தகவல்களை அப்டேட் செய்ய கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.

How to Update Aadhaar Card Online for Free? Deadline on September 14 sgb

ஆதார் கார்டில் ஏதேனும் பிழை இருந்தால் அதைத் திருத்தவும், ஆதார் விவரங்களை அப்டேட் செய்யவும் இப்போது கட்டணம் ஏதும வசூலிக்கப்படாது. ஆனால் இது செப்டம்பர் 14ஆம் தேதி வரை மட்டுமே. அதற்குப் பிறகு இலவசமாக அப்டேட் செய்ய முடியாது.

இந்தியக் குடிமக்களுக்கான அடையாள ஆவணங்களில் முக்கியமானது ஆதார் கார்டு. அரசுத் திட்டங்களில் பயன் பெறுவதற்கும் ஆதார் அட்டை தேவைப்படுகிறது. இதனால், ஆதார் கார்டில் உள்ள விவரங்கள் எப்போதும் சரியாக இருப்பதை உறுதிசெய்வது அவசியம்.

செப்டம்பர் 14ஆம் தேதிக்குள் ஆதார் விவரங்களை இலவசமாக அப்டேட் செய்துகொள்ளலாம். இந்தக் காலக்கெடு முடிந்த பிறகு ஆதார் கார்டில் உள்ள தகவல்களை அப்டேட் செய்ய கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். எனவே இலவச அப்டேட் வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

வயநாட்டில் 8 மணிநேரம் போராடி பழங்குடியின குடும்பத்தைக் காப்பாற்றிய கேரள அதிகாரிகள்!

ஆதார் விதிமுறைகளின்படி ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆதார் அட்டையில் உள்ள அடையாளச் சான்று (POI), முகவரிச் சான்று (POA) ஆகியவற்றுக்கான ஆவணங்களைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டும்.

குழந்தைகளுக்கும் ஆதார் கார்டு கிடைக்கும். ப்ளூ ஆதார் என்ற பெயரில் குழந்தைகளுக்கான ஆதார் அட்டை வழங்கப்பட்டு வருகிறது. 5 முதல் 15 வயதிற்குள் இருக்கும் குழந்தைகளின் புளூ ஆதார் அட்டை விவரங்களையும் 10 ஆண்டுகளுக்குப் பின் புதுப்பிக்க வேண்டும்.

ஆதார் ஆணையம் இலவச அப்டேட்டுக்கான அவகாசத்தை தொடர்ந்து நீட்டித்து வருகிறது. முதலில் இந்தக் காலக்கெடு மார்ச் 14ஆம் தேதி முடிய இருந்தது. அது ஜூன் 14ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. பின், செப்டம்பர் 14-ஆம் தேதி வரை இலவசமாக ஆதார் விவரங்களைப் புதுப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

ஆதார் கார்டில் உள்ள பெயர், முகவரி, பிறந்த தேதி, மொபைல் எண் உள்ளிட்ட விவரங்கள் சரியாக இருக்கிறதா என்பதை சரிபார்த்து இலவசமாக புதுப்பித்துக்கொள்ளுமாறு ஆதார் ஆணையம் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

600 கிமீ மைலேஜ் கொடுக்கும் ஸ்மூத் டிரைவிங்.. அசத்தலா வசதிகளுடன் டாடா கர்வ் EV எவ்வளவு தெரியுமா?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios