Gold Rate Today: தங்கம் விலை மீண்டும் ஏறுமுகம்! நகை வாங்குபவர்கள் என்ன செய்ய?
சென்ற சில தினங்களாக சிறிய ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கம் விலை இன்று மறுபடியும் உயரத் தொடங்கி இருக்கிறது.
இரண்டு நாட்கள் லேசாகக் குறைந்து மகிழ்ச்சி கொடுத்த தங்கம் விலை இன்று மீண்டும் சரசரவென்று ஏறுமுகமாக மாறியுள்ளது.
மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதும் கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை பின்னர் சற்று குறைந்தது. சென்ற சில தினங்களில் லேசான இறக்கம் காணப்பட்டது. காணப்பட்டது. நேற்றும் அதற்கு முந்தைய தினமும் தங்கம் விலை சற்று சரிந்ததைப் பார்க்க முடிந்தது.
நேற்றைய விற்பனையில் தங்கம் விலை முந்தைய நாளைக் காட்டிலும் கிராமுக்கு 55 ரூபாய் குறைவாக இருந்தது. இன்று மீண்டும் விலை ஏற்றம் கண்டிருக்கிறது.
இன்று 24 காரட் தூய தங்கம் விலை 20 ரூபாய் உயர்ந்து, 5,702 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி ஒரு சவரன் தூய தங்கம் 160 ரூபாய் விலை உயர்வு கண்டு 45,616 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 20 ரூபாய் அதிகரித்து, 5,340 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. இதேபோல ஒரு சவரன் ஆபரணத் தங்கம் கிராமுக்கு 160 ரூபாய் கூடி, 42,720 ரூபாய் விலையில் கிடைக்கிறது.
இன்று வெள்ளி விலையும் சற்று கூடிவிட்டது. வெள்ளியின் விலை ஒரு கிராம் 20 பைசா உயர்ந்து 72 ரூபாய் 70 காசுகளாக உள்ளது. ஒரு கிலோ வெள்ளி 72,700 ரூபாய் விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.
LPG Price: எல்பிஜி சிலிண்டர் விலை எப்போது குறையும்? நாடாளுமன்றத்தில் மத்திய அரசு பதில்