Gautam Adani Net Worth:வளர்ச்சியும் சரிவும்| டாப்-25 கோடீஸ்வரர்கள் வரிசையில்கூட அதானி இல்லை!
கெளதம் அதானியின் சொத்து மதிப்பு மளமளவெனச் சரிந்து வருவதால், உலகக் கோடீஸ்வரர்கள் வரிசையில் டாப்-25 இடத்தில் கூட அதானி இடம்பெறவில்லை.
கெளதம் அதானியின் சொத்து மதிப்பு மளமளவெனச் சரிந்து வருவதால், உலகக் கோடீஸ்வரர்கள் வரிசையில் டாப்-25 இடத்தில் கூட அதானி இடம்பெறவில்லை.
கடந்த மாதம் அதானி, உலகக் கோடீஸ்வரர்கள் வரிசையில் 3வது இடத்தில் இருந்த நிலையில் இந்த மாதம் 25வது இடத்துக்கு கீழ் சரிந்துள்ளார்.
பிப்ரவரி 22ம் தேதி நிலவரப்படி கெளதம் அதானியின் சொத்து மதிப்பு 4340 கோடி டாலருக்கும் கீழ் சரிந்தது என்று போர்ப்ஸ் மற்றும் ப்ளூம்பெர்க் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெளிநாட்டு பயணத்துக்காக மாதம்தோறும் 100 கோடி டாலர் செலவிடும் இந்தியர்கள்:RBI அறிக்கை
இந்தியப் பங்குச்சந்தையில் அதானி குழுமம் செய்த தில்லுமுல்லு, மோசடிகள், போலி நிறுவனம் மூலம் பணப்பரிமாற்றம் ஆகியவை குறித்து அமெரி்க்காவின் ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனம் அறிக்கை வெளியிட்டது. இந்த அறிக்கைக்குப்பின் அதானி குழுமத்துக்கு இறங்குமுகமாக இருந்து வருகிறது. கடந்த ஒரு மாதத்துக்குள் அதானி குழுமத்தின் மதிப்பு ஏறக்குறைய ரூ.8 லட்சம் கோடிவரை குறைந்துள்ளது.
ஆசியக் கோடீஸ்வரர்களில் முதலிடம், உலகக் கோடீஸ்வரர்கள் வரிசையில் 3வது இடத்தில் இருந்த அதானி, நேற்று கோடீஸ்வரர்கள் வரிசையில் 26வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
அதானி குழுமத்தின் பங்குகள் நேற்று மிகவும் மோசமாகச் சரிந்து, 360 கோடி டாலர்களை வாரிச் சுருட்டிச் சென்றது. இதனால், அதானி நிலை இன்னும் மோசமாகி சொத்து மதிப்பு 4240 கோடி டாலராகக் குறைந்து 26-வது இடத்துக்கு சரிந்தார்.
அதானிக்கு போட்டியளி்க்கும் வகையில் பிரான்ஸின் கப்பல்நிறுவனத்தின் ரோடோல்ப் சாடே குடும்பத்தினர் 4140 கோடி டாலர் சொத்துக்களுன் 27வது இடத்தில் உள்ளார். பிரான்ஸ் பினால்ட் 4000 கோடி டாலர் சொத்துக்களுடன் 28-வது இடத்திலும் உள்ளனர்.
ஜீ என்டர்டெயின்மென்ட் திவால் நடவடிக்கை எடுக்க IndusInd வங்கிக்கு என்சிஎல்டி அனுமதி
இந்த ஆண்டு தொடக்கத்தில் அதானியின் சொத்து மதிப்பு 12100 கோடி டாலராக இருந்தது, உலகின் கோடீஸ்வரர்களான டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்கை முந்திவிடுவார் அதானி என்று கணிக்கப்பட்டது. ஆனால், பிப்ரவரி 1ம் தேதி அதானி 10வது இடத்துக்கு சரிந்தார். அதானி சொத்து மதிப்பு ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனர் முகேஷ் அம்பானி சொத்து மதிப்பைவிடக் குறைந்தது.
கடந்த 3ம் தேதிவரை டாப்-20 கோடீஸ்வரர்கள் வரிசையில் இருந்த அதானி, நேற்றுமுன்தினத்தில் இருந்து 25-வது இடங்களில்கூட இல்லை. கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரியில் இருந்து இந்தியாவின் கோடீஸ்வர மனிதர் என்று அழைக்கப்பட்டு வந்தார், கொரோனா காலத்தில் மட்டும் அதானி சொத்து மதிப்பு 4270 கோடி டாலர் உயர்ந்தது. உலகிலேயே அதிகமாக சொத்து சேர்ந்ததில் 5வது தொழிலதிபராக அதானி உயர்ந்தார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உலகக் கோடீஸ்வரர்கள் வரிசையில் 2வது இடத்துக்கு முன்னேறிய அதானி சொத்து மதிப்பு 15630 கோடி டாலராக உச்சம் தொட்டது
அதானி குழுமம் ரூ.1,500 கோடி கடனை SBI பரஸ்பர நிதி, ஆதித்யா பிர்லாவுக்கு திருப்பிச் செலுத்தியது
ஆனால், ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் அறிக்கையால் அதானியின் சாம்ராஜ்யம் அனைத்தும் சீட்டுக்கட்டுப்போல் குலைந்தது. ஒரு மாதத்துக்குள் 26-வது இடத்துக்கு அதானி தள்ளப்பட்டார். அதானி குழுமத்தின் பங்குகள் தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகின்றன. பங்குச்சந்தையில் நேற்று வர்த்தகத்தில்அதானி குழுமத்தின் 10 நிறுவனப் பங்குகளும் 10.4 சதவீதம் சரிந்துள்ளது.