Adani:அதானி குழுமம் ரூ.1,500 கோடி கடனை SBI பரஸ்பர நிதி, ஆதித்யா பிர்லாவுக்கு திருப்பிச் செலுத்தியது
அதானி போர்ட்ஸ் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலம், எஸ்பிஐ பரஸ்பர நிதி, ஆதித்யா பிர்லா லைப் ஆகியவற்றிடம் இருந்து வாங்கிய ரூ.1500 கோடி கடனை திருப்பிச் செலுத்தியுள்ளது.
அதானி போர்ட்ஸ் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலம், எஸ்பிஐ பரஸ்பர நிதி, ஆதித்யா பிர்லா லைப் ஆகியவற்றிடம் இருந்து வாங்கிய ரூ.1500 கோடி கடனை திருப்பிச் செலுத்தியுள்ளது.
விரைவில் ரூ.1000 கோடி கடனை மார்ச் மாதத்தில் திரும்பச்செலுத்த உள்ளதாக அதானி குழுமம் தெரிவித்துள்ளது.
எஸ்பிஐ மியூச்சல்பண்ட் செய்தித்தொடர்பாளர் கூறுகையில் “ அதானி போர்ட்ஸ் நிறுவனம் எங்களிடம் வாங்கியிருந்த கடனில் ரூ.1000கோடியை திருப்பி அளித்துள்ளது, இனிமேல் எங்களுக்கும் அதானி குழுமத்துக்கும் தொடர்பு இல்லை.
மெக்கின்ஸி நிறுவனம் 2,000 ஊழியர்களை வேலையிலிருந்து நீக்க முடிவு
அதானி குழுவிற்கான மூலதனம் மற்றும் பணப்புழக்க மேலாண்மைத் திட்டத்தின் மீதும் சந்தை வைத்துள்ள நம்பிக்கையையும் இது காட்டுகிறது.”எனத் தெரிவித்துள்ளார்.
அதேபோல ஆதித்யநா பிர்லா சன் லைப் மியூச்சல் பண்ட் நிறுவனத்துக்கு ரூ.500 கோடிகடனை அதானி குழுமம் திருப்பி அளித்துள்ளது.
இந்தியப் பங்குசந்தையில் இன்று கறுப்பு நாளாகும். மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 930 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது. இதில் குறிப்பாக அதானி குழுமத்தில் உள்ள 10 நிறுவனங்களின் பங்குகளும் வீழ்ந்தன. அதானி என்டர்பிரைசர்ஸ் பங்குகள் இன்று 10% சரிந்தன. அதானி கிரீன் எனர்ஜி, அதானி டோட்டல் கேஸ் பங்குகளும் 5 சதவீதத்துக்கும்மேல் வீழ்ச்சி அடைந்தன.
இந்தியப் பங்குச்சந்தைகள் கடந்த மாதத்தின் இறுதியில் இருந்து தொடர்ந்துசரிந்துவருகின்றன. இதற்கு அதானி குழுமத்தில் உள்ளபங்குகள் வீழ்ச்சியும் ஒரு காரணம்.
பங்குச்சந்தை படுவீழ்ச்சி|ரூ.7 லட்சம் கோடி காலி!சென்செக்ஸ்927 புள்ளிகள் சரிவு:4 காரணங்கள்!
அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனம், இந்தியப் பங்குச்சந்தையில் அதானி குழுமம் செய்த தில்லுமுல்லுகள், மோசடிகள் குறித்து அறிக்கை வெளியிட்டது. இந்த அறிக்கைக்குப்பின், அதானி குழுமத்தின் பங்குகள் மளமளவெனச் சரியத் தொடங்கின. இதுவரை அதானி குழுமத்துக்கு ரூ.8 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த மாதத்தில் உலகக் கோடீஸ்வரர்கள் வரிசையில் 3வது இடத்தில்இருந்த அதானி, நேற்று முன்தினம் 25-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். இன்றைய சந்தை முடிவில் அதானியின் வரிசை இன்னும் மோசமாகியிருக்கும்.