elon musk: twitter:எலான் மஸ்க் மீது ட்விட்டர் நிறுவனம் வழக்கு: அக்டோபரில் விசாரணை : மஸ்க் கோரிக்கை நிராகரிப்பு
டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் மீது ட்விட்டர் நிறுவனம் தொடர்ந்த வழக்கு வரும் அக்டோபர் மாதம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று டெலாவர் நீதிமன்ற நீதிபதி தெரிவித்தார்.
டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் மீது ட்விட்டர் நிறுவனம் தொடர்ந்த வழக்கு வரும் அக்டோபர் மாதம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று டெலாவர் நீதிமன்ற நீதிபதி தெரிவித்தார்.
இந்த வழக்கை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் விசாரிக்க வேண்டும் என்று எலான் மஸ்க் தரப்பு நீதிபதியிடம் கோரிக்கை வைத்தது. ஆனால், மிகப்பெரிய தொகை பரிமாற்றத்தில் வழக்கை தள்ளிப்போடுதல், தாமதித்தல் கூடாது என்று கூறி மஸ்க் கோரிக்கையை நீதிபதி நிராகரித்தார்.
இந்தியப் பிரதமர் மோடி உதவ வேண்டும்; சஜித் பிரேமதாசா உருக்கமான வேண்டுகோள்!!
ட்விட்டர் நிறுவனத்தில் உள்ள ஒவ்வொரு பங்கையும் 54.20 டாலருக்கும், ஒட்டுமொத்தமாக 4400 கோடிக்கு வாங்க விரும்புவதாகவும் எலான் மஸ்க் தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக ட்விட்டர் நிறுவனத்துக்கும், எலான் மஸ்கிற்கும் ஒப்பந்தம் கையொப்பமானது.
ஆனால், ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் தனது முடிவை ஒத்திவைப்பதாக எலான் மஸ்க் திடீரென தெரிவித்தார். ட்விட்டர் நிறுவனத்தில் ஏராளமான போலிக் கணக்குகள் இருப்பதால், அதுதொடர்பாக தகவல்கள் தேவை என்று எலான் மஸ்க் கோரியிருந்தார்.
ஆனால் ட்விட்டர் நிறுவனம் அந்தப் போலிக் கணக்குகள், ஸ்பாம் குறித்த விவரங்களை வழங்கவில்லை. இது தொடர்பாக பலமுறை ட்விட்டர் நிறுவனத்துக்கு எலான் மஸ்க் எச்சரிக்கை விடுத்திருந்தார். ஆனால், ட்விட்டர் நிறுவனம் எலான் மஸ்க்குடனான ஒப்பந்தத்தை கிடப்பில் போட்டதேத்தவிர அந்தவிவரங்களை வழங்கவில்லை.
இலங்கையில் புதிய அதிபருக்கான வாக்குப் பதிவு துவங்கியது: பார்லிமெண்டில் மகிந்தா ராஜபக்சே!!
இதையடுத்து, ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக எலான் மஸ்க் அதிரடியாக கடந்த வாரம் அறிவித்தார். ஆனால், ஒப்பந்தத்தை மீறி எலான் மஸ்க் நடந்துள்ளதால், அவருக்கு எதிராக டெலாவர் நீதிமன்றத்தில் ட்விட்டர் நிர்வாகம் தொடர்ந்தது.
ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும்ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக எலான் மஸ்க் தெரிவித்த நிலையில் ட்விட்டர் நிறுவனத்தின் பங்குமதிப்பு கடுமையாகச் சரிந்தது. கடந்த ஏப்ரல் மாதம் ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதாக மஸ்க் அறிவித்த நிலையில் 54.20 டாலராக உயர்ந்தநிலையில் அதைவிட 36% குறைந்து, 34.58 டாலராகச் சரிந்தது.
ட்விட்டர் நிறுவனத்துடன் செய்த ஒப்பந்தத்தை ரத்து செய்தது, ட்விட்டர் பங்கு மதிப்பு குறைந்ததற்கு எலான் மஸ்க் காரணம் என்று ட்விட்டர் நிறுவனம் தெரிவித்து.
இந்நிலையில் ட்விட்டர் நிறுவனம் தொடர்ந்த வழக்கை 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் விசாரிக்க வேண்டும் என எலான் மஸ்க் தரப்பு வழக்கறிஞர்கள் டெலாவர் நீதிமன்றத்தில் கோரியிருந்தனர்.
நல்ல குடும்பம்ப்பா! 35 வயது வளர்ப்பு மகளுடன் குழந்தை பெற்ற 76வயதான எலான் மஸ்க் தந்தை
ஆனால், டெலாவர் நீதிமன்ற நீதிபதி ஜூட் மெகார்மிக் கூறுகையில் “ ட்விட்டர், மஸ்க் தொடர்பான வழக்கு அக்டோபர் மாதம் விசாரிக்கப்படும். அதிகமான தொகை கொண்ட ஒப்பந்தம் என்பதால், நீண்டகாலம் கிடப்பில் போடுவது இருதரப்புக்குமே பெரிய இடர்பாடுகளை வழங்கும்” எனத் தெரிவித்தார்
ட்விட்டர் நிறுவனம் செப்டம்பர் மாதம் வழக்கை விசாரிக்க வேண்டும் எனக் கோரியது, எலான் மஸ்க் தரப்போ, வழக்கு சிக்கலானது என்பதால், அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கக் கோரினார்கள்.
அதற்கு நீதிபதி மெக்கார்மிக் “ எலான் மஸ்க் தரப்பு டெலாவர் நீதிமன்றத்தை குறைத்து மதிப்பிட்டுள்ளது. விரைந்து இந்த வழக்கை முடிப்போம்.” எனத் தெரிவித்தார். நீதிபதி மெக்கார்மிக் கொரோனாவில் பாதிக்கப்பட்டிருந்ததால், காணொலி வாயிலாகவே விசாரணை நடந்தது.