இலங்கையில் புதிய அதிபருக்கான வாக்குப் பதிவு துவங்கியது: பார்லிமெண்டில் மகிந்தா ராஜபக்சே!!

இலங்கை அரசியலில் பெரிய மாற்றமாக அதிபர் போட்டியில் இருந்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சஜித் பிரேமதாசா வாபஸ் பெற்றார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா கட்சியின் பார்லிமென்ட் உறுப்பினர் டலஸ் அலஹப்பெருமவுக்கு தனது ஆதரவை தெரிவித்து இருக்கிறார். இலங்கை நாடாளுமன்றத்தில் நடந்து வரும் அதிபருக்கான தேர்தலில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவும் கலந்து கொண்டுள்ளார். 

Sri Lanka President election: Sajith Premadasa supports SLPP leader Dullas Alahapperuma

இலங்கையில் வரும் 20ஆம் தேதி அதிபருக்கான தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் ஐந்து முனைப் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்தப் போட்டியில் இருந்து தற்போது திடீரென சஜித் பிரேமதாசா வாபஸ் பெற்றுக் கொண்டார். துவக்கத்தில் இருந்து இவர் அதிபராக தேர்வு செய்யப்படுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இவர் எதிர்க்கட்சி தலைவராக இருந்து வருகிறார்.

இதுகுறித்து சஜித் தனது டுவிட்டர் பக்கத்தில், ''நான் நேசிக்கும் எனது நாட்டு மக்களுக்காகவும், அவர்களது நலன் கருதி, இன்று நான் மனுதாக்கல் செய்யவில்லை. போட்டியில் இருந்து வாபஸ் பெறுகிறேன். டலஸ் அலஹப்பெருமவை அதிபராக தேர்வு செய்வதற்கு கூட்டணி கட்சிகளுடன் இணைந்து எங்களது கட்சி  சமகி ஜன பாலவேகயா கடுமையாக உழைக்கும்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன்னதாக நாட்டு மக்களின் நலனைக் கருதி உரிய நேரத்தில் சரியான முடிவை எடுப்பேன் என்று குறிப்பட்டு இருந்தார். இலங்கை அதிபர் தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் இன்று நடக்கிறது. இந்த நிலையில் சஜித் இந்த அறிவிப்பை டுவிட்டர் மூலம் வெளியிட்டுள்ளார்.

இலங்கையில் விவசாயிகள் கடன் ரத்து... அறிவித்தார் அந்நாட்டு இடைக்கால அதிபர் ரணில் விக்ரமசிங்க!!

இலங்கையில் அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே கடந்த 13ஆம் தேதி ராஜினாமா செய்தார். இதை அதிகாரபூர்வமாக 14ஆம் தேதி சபாநாயகர் அறிவித்து இருந்தார். பிரதமராக இருந்த ரணில் வக்கரமசிங்கேவும் தனது பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமா செய்வதற்கு முன்பு கோத்தபய ராஜபக்சே மாலத்தீவுக்கு தப்பிச் சென்று அங்கிருந்து சிங்கப்பூருக்கு சென்றார். அங்கும் அடைக்கலம் கிடைக்கவில்லை. 15 நாட்களுக்கு தங்குவதற்கு மட்டுமே அந்த அனுமதி அளித்துள்ளது.

இதற்கிடையில் இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே தேர்வு செய்யப்பட்டார். இவர் தற்போது அனைத்துக் கட்சிகளையும் இணைத்து அதிபர் தேர்தல் நடத்துவதற்கான சுமூக சூழலை ஏற்படுத்தி வருகிறார். இவர் பிரதமராக நீடிக்கக் கூடாது என்றுதான் போராட்டக்காரர்கள் இவரது வீட்டுக்கு தீ வைத்து இருந்தனர். இந்த நிலையில் இவர் அதிபர் தேர்தலுக்கு போட்டியிடுகிறார். 

கோத்தபய ராஜபக்சேவுக்கு சிங்கப்பூரும் டாட்டா காட்டியது; இந்தியாவுக்கு வருகிறாரா?

அதிபர் ராஜினாமா செய்த 30 நாட்களுக்குள் புதிய அதிபரை தேர்வு செய்ய வேண்டும். புதிய அதிபர் தேர்தல் வரும் 20 ஆம் தேதி (நாளை) நடக்கிறது. இன்று அதிபருக்கான வேட்புமனு தாக்கல் நடந்து வருகிறது. இந்த தேர்தலில் ரணில் விக்ரமசிங்கே, டலஸ் அலஹப்பெரும இடையே கடுமையான போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தற்போது இறுதிப் போட்டியில் டலஸ் அலஹப்பெரும,  இடைக்கால அதிபர் ரணில் விக்ரமசிங்க, இலங்கை தேசிய மக்கள் கட்சி தலைவர் அனுர குமார திசாநாயக்க ஆகியோர் இடையே மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.  தற்போது வரைக்கும் வெற்றிக்கான வாய்ப்பு ரணில் விக்ரமசிங்கேவுக்கு இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios