இந்தியப் பிரதமர் மோடி உதவ வேண்டும்; சஜித் பிரேமதாசா உருக்கமான வேண்டுகோள்!!
இலங்கையும், மக்களும் பேரழிவில் இருந்து மீள்வதற்கு உதவிக் கொண்டே இருக்க வேண்டும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும், எதிர்க்கட்சிகளுக்கும், நாட்டு மக்களுக்கும் அந்த நாட்டின் எதிர்க்கட்சித் தலைவரும், சமகி ஜன பாலவேகயா கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இலங்கையும், மக்களும் பேரழிவில் இருந்து மீள்வதற்கு உதவிக் கொண்டே இருக்க வேண்டும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும், எதிர்க்கட்சிகளுக்கும், நாட்டு மக்களுக்கும் அந்த நாட்டின் எதிர்க்கட்சித் தலைவரும், சமகி ஜன பாலவேகயா கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இலங்கை வரலாற்றில் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சியை சந்தித்துக் கொண்டு இருக்கிறது. வாங்கிய 55 பில்லியன் டாலருக்கான கடன் மீதான வட்டியை கட்ட முடியாமல் திணறி வருகிறது. நாட்டின் அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே, பிரதமராக இருந்த அவரது சகோதரர் மகிந்த ராஜபக்சே மீது மக்கள் ஆவேசம் கொண்டனர்.
இதையும் படிங்க: இலங்கை அதிபர் தேர்தல்: திடீரென சஜித் பிரேமதாசா வாபஸ்; உருவானது மும்முனைப் போட்டி!!
இதற்குக் காரணம் பணவீக்கம் அதிகரித்து, விலைவாசி உயர்வு விண்ணை முட்டியது. அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் கடந்த ஆறு மாதங்களாகவே மக்கள் திண்டாடி வருகின்றனர். இதனால், மக்கள் தெருக்களில் இறங்கி போராடத் துவங்கினர். இறுதியில் வழியில்லாமல், மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்தார்.
இவர் ராஜினாமா செய்த பின்னரும் சிக்கல் தீரவில்லை. தொடர்ந்தது. இதையடுத்து, அதிபர் கோத்தபய ராஜபக்சேவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று மக்கள் உக்கிரமான போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, ராஜினாமா செய்வதற்கு முன்பே மாலத்தீவு தப்பிச் சென்ற கோத்தபய அங்கிருந்து சிங்கப்பூர் தப்பிச் சென்றார்.
இதையும் படிங்க: இலங்கையின் பிரதமராகிறாரா சஜித் பிரேமதாசா? உடைந்தது ராஜபக்சே கட்சி!!
இடைக்கால அதிபராக ரணில் நீடிக்கிறார். இந்த் நிலையில் நாளை புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடக்கிறது. இதில் மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. இறுதிப் போட்டியில் டலஸ் அலஹப்பெரும, இடைக்கால அதிபர் ரணில் விக்ரமசிங்க, இலங்கை தேசிய மக்கள் கட்சி தலைவர் அனுர குமார திசாநாயக்க ஆகியோர் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சஜித் பிரேமதாசா போட்டியில் இருந்து விலகிக் கொண்டார். டலஸ் அலஹப்பெருமாவுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளார்.இன்று டெல்லியில் இலங்கை குறித்து முடிவு எடுப்பதற்கு அனைத்துக் கட்சி கூட்டத்தை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூட்டி இருந்தார். இலங்கைக்கு தொடர்ந்து உதவ வேண்டும் என்று தனது கருத்தை வெளிப்படுத்தி இருந்தார்.
இந்த நிலையில் டுவிட்டரில் பதிவிட்டு இருக்கும் சஜித் பிரேமதாசா, ''நாளை இலங்கையின் அதிபராக வரப் போகிறார் என்பதை விட, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும், அந்த நாட்டின் எதிர்க்கட்சிகளுக்கும், நாட்டு மக்களுக்கும் நான் விடுக்கும் பணிவான, அன்பான வேண்டுகோள், தாய் இலங்கையும், மக்களும் பேரழிவில் இருந்து மீள்வதற்கு உதவிக் கொண்டே இருக்க வேண்டும்'' என்று பதிவிட்டுள்ளார்.
பொருளாதார பேரழிவில் இருக்கும் இலங்கைக்கு, நடப்பு நிதியாண்டில் ஜனவரி முதல் ஏப்ரல் வரை நான்கு மாதங்களில் இந்தியா 3,000 கோடிக்கும் அதிகமான நிதியுதவியை அளித்துள்ளது. ஆனால், இலங்கையுடன் உறவு கொண்டாடிக் கொண்டு இருக்கும் சீனா இதே கால கட்டத்தில் வெறும் 542 கோடி மட்டுமே அளித்து இருந்தது.