MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • ஏஐ வளர்ச்சியில்.. இந்த வேலைகள் எல்லாம் காணாமல் போகும்.. ஆந்த்ரோபிக் வெளியிட்ட அதிர்ச்சி பட்டியல்

ஏஐ வளர்ச்சியில்.. இந்த வேலைகள் எல்லாம் காணாமல் போகும்.. ஆந்த்ரோபிக் வெளியிட்ட அதிர்ச்சி பட்டியல்

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) நிறுவனமான ஆந்த்ரோபிக் வெளியிட்ட புதிய ஆய்வு, எந்த வேலைகள் ஏஐ-யால் முதலில் மாற்றப்பட வாய்ப்புள்ளது என்பதை வெளிப்படுத்துகிறது.

2 Min read
Author : Raghupati R
Published : Mar 09 2026, 11:46 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
ஏஐ முதலில் மாற்றக்கூடிய வேலைகள்
Image Credit : Google

ஏஐ முதலில் மாற்றக்கூடிய வேலைகள்

உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) வேகமாக வளர்ந்து வரும் நிலையில், இது பல வேலை வாய்ப்புகளின் எதிர்காலத்தை எப்படி பாதிக்கும் என்ற விவாதம் அதிகரித்து வருகிறது வருகிறது. இந்த நிலையில் ஏஐ நிறுவனமான வெளியிட்ட புதிய ஆய்வு அறிக்கை, எந்த வகை வேலைகள் முதலில் ஏஐ மூலம் மாற்றப்பட வாய்ப்பு உள்ளது என்பதை கூறியுள்ளது. குறிப்பாக அலுவலக பணிகளில் அதிகமாக மீண்டும் செய்யப்படும் பணிகள் ஏஐ ஆட்டோமேஷனால் விரைவாக பாதிக்கப்படலாம் என அந்த அறிக்கை தெரிவிக்கிறது. 

இருப்பினும், தற்போது பெரிய அளவில் வேலை இழப்புகள் ஏற்பட்டுள்ளன என்ற தெளிவான சான்றுகள் இன்னும் இல்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏஐ வேலை வாய்ப்புகளை எவ்வாறு பாதிக்கலாம் என்பதை மதிப்பிடுவது ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் பொருளாதார நிபுணர்கள் மேக்சிம் மைசென்கோப் மற்றும் பீட்டர் மெக்ரோரி “Exposure Index” என்ற புதிய கணக்கீட்டு முறையை உருவாக்கியுள்ளனர்.

23
செயற்கை நுண்ணறிவு தாக்கம்
Image Credit : Google

செயற்கை நுண்ணறிவு தாக்கம்

இந்த முறை ஒரு வேலைப்பதவியின் பெயரை மட்டும் பார்க்காமல், அந்த வேலையில் உள்ள ஒவ்வொரு பணியையும் தனித்தனியாக ஆய்வு செய்கிறது. அதில் உள்ள பல பணிகளை ஏஐ கருவிகள் எளிதாக செய்ய முடிந்தால், அந்த வேலை அதிக ஆபத்தில் உள்ளது என மதிப்பிடப்படுகிறது. இந்த ஆய்வின் படி, தொழில்நுட்ப துறையில் உள்ள சில வேலைகள் ஏஐ பாதிப்புக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. 

குறிப்பாக ப்ரோகிராமர்கள் மற்றும் சாப்ட்வேர் டெவலப்பர்கள் பட்டியலில் முக்கிய இடத்தில் உள்ளனர். ஏனெனில் இப்போது உள்ள பல ஏஐ கருவிகள் ப்ரோகிராம்களை எழுதுவதும், தொழில்நுட்ப பிரச்சினைகளை தீர்ப்பதும் சகஜமாக மாறியுள்ளது. மேலும் கஸ்டமர் சர்வீஸ் பிரதிநிதிகள், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்கள் மற்றும் மருத்துவ பதிவு மேலாளர்கள் போன்றவை ஆபத்தான பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

Related Articles

Related image1
50% இலிருந்து 10% ஆக குறைந்த வரி.. திருப்பூர் டெக்ஸ்டைல் துறைக்கு பெரிய நிம்மதி!
Related image2
வரி, பாஸ்டேக், கேஸ் விலை அப்டேட்!.. மார்ச் 1 முதல் பெரிய மாற்றங்கள்!.. மக்களே உஷார்!
33
புதிய ஆய்வு வெளிப்படுத்தும் உண்மை
Image Credit : Google

புதிய ஆய்வு வெளிப்படுத்தும் உண்மை

இந்தப் பணிகள் பொதுவாக ஒரே மாதிரியான மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட செயல்முறைகளைக் கொண்டவை என்பதால் ஏஐ அவற்றை எளிதாகக் கையாள முடியும். ஆனால் அனைத்து வேலைகளும் ஏஐ மூலம் உடனடியாக மாற்றப்படாது என்றும் அறிக்கை கூறுகிறது. குறிப்பாக உடல் உழைப்பு அல்லது நேரடி மனித தொடர்பு தேவைப்படும் வேலைகள் தற்போது பாதுகாப்பாக உள்ளன. உதாரணமாக சமையலர்கள், உயிர்காக்கும் காவலர்கள், பாத்திரம் கழுவும் தொழிலாளர்கள் போன்ற பணிகளில் மனித திறன் மற்றும் நேரடி அனுபவம் அவசியம். 

இவ்வகை பணிகளை தற்போதைய ஏஐ தொழில்நுட்பங்கள் முழுமையாக மாற்ற முடியாது. மேலும், ஏஐ வளர்ச்சி இருந்தாலும் வேலை இழப்புகள் பெரிதாக ஏற்பட்டுள்ளன என்ற ஆதாரம் தற்போது இல்லை எனவும் அறிக்கை தெரிவிக்கிறது. இருப்பினும் சில ஆரம்ப அறிகுறிகள் தென்படுகின்றன. குறிப்பாக 22 முதல் 25 வயதுக்குள் இளம் பணியாளர்களை நியமிக்கும் வேகம் சில துறைகளில் குறைந்துள்ளது. ஆரம்ப நிலை வேலைகளில் நிறுவனங்கள் ஏஐ கருவிகளை அதிகமாக பயன்படுத்தத் தொடங்கியிருப்பதால், எதிர்காலத்தில் வேலை சந்தையில் மெதுவாக மாற்றங்கள் ஏற்படக்கூடும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வேலைவாய்ப்பு
செயற்கை நுண்ணறிவு
தொழில்
வேலைவாய்ப்பு
வணிகம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தீயாய் எரியும் கச்சா எண்ணெய் கிணறுகள்.! உங்கள் பாக்கெட்டை பதம் பார்க்கப்போகும் பெட்ரோல் ரேட்!
Recommended image2
50% இலிருந்து 10% ஆக குறைந்த வரி.. திருப்பூர் டெக்ஸ்டைல் துறைக்கு பெரிய நிம்மதி!
Recommended image3
இனி இஷ்டத்துக்கு புக் பண்ண முடியாது.. சிலிண்டர் விதிகளில் அதிரடி மாற்றம்: 21 நாட்கள் கட்டாய இடைவெளி
Related Stories
Recommended image1
50% இலிருந்து 10% ஆக குறைந்த வரி.. திருப்பூர் டெக்ஸ்டைல் துறைக்கு பெரிய நிம்மதி!
Recommended image2
வரி, பாஸ்டேக், கேஸ் விலை அப்டேட்!.. மார்ச் 1 முதல் பெரிய மாற்றங்கள்!.. மக்களே உஷார்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved