கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் வேலுமணி, ஈகோவைத் தவிர்ப்பதால் உறவுகளிலும் தொழிலிலும் ஏற்படும் நன்மைகளைப் பற்றிப் பேசினார். ஈகோ உறவுகளைப் பலவீனப்படுத்தி வலியை உருவாக்குகிறது என்றார். மேலும், முந்தைய கால பணிச்சூழல் மாறியுள்ளதையும் சுட்டிக்காட்டினார்.
கோவையைச் சேர்ந்த கோடீஸ்வர தொழிலதிபர் டாக்டர் ஆரோக்கியசாமி வேலுமணி சமீபத்தில் தனிப்பட்ட வாழ்க்கையிலும் தொழில் வாழ்க்கையிலும் ஈகோவை ஒதுக்கி வைத்தால் ஏற்படும் நன்மைகள் பற்றிப் பேசியுள்ளார். வெள்ளிக்கிழமை எக்ஸ் தளத்திள்கு பேட்டியளித்த தைரோகேர் நிறுவனர் வேலுமணி, ஈகோ உறவுகளை பலவீனப்படுத்தி தேவையற்ற வலியை உருவாக்கும் என்றார்.
"எந்தவொரு தொழிலையும் தொடங்க ஈகோவை விட்டுவிட வேண்டும்" என்ற அவர், "தொழிலுக்காக மட்டும் அல்ல. தொழில் அல்லது திருமண உறவு எதுவாக இருந்தாலும், ஈகோ வலிகளைப் பெருக்கி மகிழ்ச்சியைக் கெடுக்கிறது. ஈகோ வலுவாகும்போது உறவுகள் பலவீனமாகின்ற" என்று அவர் கூறினார்.
அவரது கருத்து நெட்டிசன்கள் மத்தியில் விவாதத்தைத் தூண்டியது. மற்றொரு பதிவில், டாக்டர் வேலுமணி கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலையுடன் ஒப்பிடும்போது பணிச்சூழல் எவ்வாறு மாறியுள்ளது எனக் கூறினார். 1980களில், அலுவலகங்களில் கேன்டீன்கள் இல்லை என்பதை நினைவுகூர்ந்தார். 1990களில், அவை ஒரு நாளைக்கு இரண்டு மணிநேரம் மட்டுமே செயல்பட்டன; பிற்கு படிப்படியாக அது விரிவடைந்தது என்றும் கூறினார்.
கனவை நனவாக்கிய அம்பானி மகன்! உலகின் மிகப்பெரிய வந்தாரா மறுவாழ்வு மையம்!
"கடந்த வாரம் நான் ஒரு அலுவலகத்திற்குச் சென்றிருந்தேன். அங்கு பல உணவுகளுடன் 24 மணிநேரமும் இயங்கும் ஃபுட் கோர்ட் இருக்கிறது. எல்லா அலுவலகங்களிலும் இதே போன்ற தேவை அதிகரித்து வருகிறதா?" என்று அவர் கேள்வி எழுப்பினார்.
1959ஆம் ஆண்டு பிறந்த டாக்டர் ஆரோக்கியசாமி வேலுமணி, சுயமாகத் தொழில் தொடங்கி கோடீஸ்வரரானார். சுகாதாரத் துறையில் முன்னணி நிறுவனமான தைரோகேர் நிறுவனத்தை உருவாக்கி உள்ளார். இந்தியாவில் மலிவு விலையில் மருத்துவச் சோதனைகளை வழங்கும் முன்னோடி நிறுவனமான தைரோகேர் டெக்னாலஜிஸ் விளங்குகிறது. மேம்பட்ட இமேஜிங் மற்றும் புற்றுநோய் நோய் கண்டறிதலில் நிபுணத்துவம் பெற்ற நியூக்ளியர் ஹெல்த்கேர் நிறுவனத்தையும் வேலுமணி தொடங்கியுள்ளார்.
எளிமையாகத் தொடங்கப்பட்ட தைரோகேர் நிறுவனம் 2021ஆம் ஆண்டில் ரூ.7,000 கோடி சந்தை மூலதனத்தை எட்டியது. அவரது வாழ்க்கைப் பயணம், ஆர்வமுள்ள தொழில்முனைவோரைத் தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது.
வரியைச் சேமிக்க உதவும் சட்டப்பிரிவு 80C! 5 வழிகளில் பணத்தை மிச்சப்படுத்தலாம்!
