crude oil price today: கச்சா எண்ணெய் விலை 100 டாலருக்கும் கீழ் சரிந்தது: என்ன காரணம்? பெட்ரோல், டீசல் நிலை?
சர்வதேச சந்தையில் பிரன்ட் கச்சா எண்ணெய் விலை பேரல் 7 டாலர் குறைந்து், 100 டாலருக்கும் கீழ் குறைந்தது.
சர்வதேச சந்தையில் பிரன்ட் கச்சா எண்ணெய் விலை பேரல் 7 டாலர் குறைந்து், 100 டாலருக்கும் கீழ் குறைந்தது.
டாலர் மதிப்பு வலுப்பெற்று வருவது, சீனாவில் அதிகரித்து வரும் கொரோனா கட்டுப்பாடுகள், உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுவரும் மந்தநிலை ஆகியவற்றால் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது.
ஜூன் மாத சில்லரை பணவீக்கம் 7.01% ஆகக் குறைவு: வட்டியை மீண்டும் உயர்த்துமா ரிசர்வ் வங்கி?
உலக நாடுகளில் அதிகரித்துவரும் பணவீக்கம், அதைக் கட்டுப்படுத்த உயர்த்தப்பட்டு வரும் வட்டி வீதத்தால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடும் ஊசலாட்டத்துடன் இருந்து வந்தது. இதனால் கச்சா எண்ணெயில் முதலீடு செய்த முதலீட்டாளர்கள் மிகுந்த கவலையடைந்தனர்.
ஏற்கெனவே கடந்த வாரம் கச்சா எண்ணெய் விலை கடந்த 3 மாதங்களில் முதல்முறையாக பேரல் 100 டாலருக்கும் கீழ் வந்தது.
இந்நிலையில் நேற்றும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்தது. பிரன்ட் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 7.61 டாலர் குறைந்து 99.49 டாலராக் குறைந்தது.
அமெரிக்க வெஸ்ட் டெக்சாஸ் கச்சா எண்ணெய் பேரலுக்கு 8.25 டாலர் சரிந்து, 95.84 டாலராகக் குறைந்தது. கடந்த 3 மாதங்களில் கச்சா எண்ணெய்விலை குறைவது இதுதான் முதல்முறையாகும். மார்ச் மாதத்தில் உச்ச கட்டத்தில் பேரல் 140 டாலராக இருந்க கச்சா எண்ணெயில் பிரன்ட் 29%, வெஸ்ட் டெக்சாஸ் 27% சரிந்துள்ளன.
5ஜி ஏலத்தில் களமிறங்கும் அதானி: 4 நிறுவனங்கள் பெயர் வெளியீடு: தெரிய வேண்டிய 10 அம்சங்கள் என்ன?
விலை குறைய என்ன காரணம்
கச்சா எண்ணெய் விலை குறைவதற்கு முக்கியக் காரணம் அமெரிக்க டாலர் மதிப்பு வலுப்பெற்று வருவதுதான் காரணமாகும். ஏனென்றால் சர்வதேச வர்தத்கம் அனைத்தும் டாலரில்தான் நடக்கிறது. கச்சா எண்ணெயும் டாலரில்தான்வாங்கப்படுகிறது.
தற்போது டாலர் மதிப்பு அதிகரிக்கும் போது, வளர்ந்து வரும் நாடுகள், ஐரோப்பிய நாடுகள் ஆகியவை, கச்சா எண்ணெய் வாங்குவதற்கு அதிகமான தொகை கொடுக்க நேரிடும். இதனால், கச்சா எண்ணெய் தேவை இயல்பாகக் குறையத் தொடங்கும். இது மட்டுமல்லாமல் கச்சா எண்ணெய் இறக்குமதியில் உலகிலேயே2 வது பெரிய நாடான சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்படாததால், கச்சா எண்ணெய் தேவையும் குறைந்துள்ளது.
மேலும், உலக அளவில் பொருளாதார மந்தநிலை வரும் எனும் அச்சம் ஆகியவையும் கச்சா எண்ணெய் விற்பனையை பாதித்தன. இதனால் தேவை குறைந்து விலை சரிந்தது.
விமானத்தையே தூக்கிச் செல்லும் திமிங்கல பெலுகா ஏர்பஸ் விமானம்: சென்னை விமானநிலையம் வந்தது ஏன்?
பெட்ரோல், டீசல் விலை குறையுமா?
இந்திய எண்ணெய் நிறுவனங்கள் , சர்வதேச சந்தையில் 2 வாரங்கள் விலை சராசரியை அடிப்படையாக வைத்துதான் விலையை நிர்ணயிக்கின்றன. ஆதலால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரல் 100 டாலருக்கும் கீழ் குறைந்து குறைந்தபட்சம் 10 நாட்களாவது நீடித்தால் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கவாய்ப்புண்டு. இருப்பினும், தற்போது விற்கப்படும் பெட்ரோல், டீசல் விலைக்கே லிட்டருக்கு ரூ.25 வரை எண்ணெய்நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. அவ்வாறு இருக்கையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படுமா என்பது உறுதியற்றதுதான்.