பிஎஸ் 3  தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட  வாகனங்களில் வாங்கவோ அல்லது விற்கவோ ஏப்ரல் 1 ஆம் தேதியிலிருந்து  தடை  விதிக்கப் பட்டுள்ளது . இதனால் காற்று மாசு படுவதை குறைக்க முடியும் . எனவே  பல சோதனைகளின் அடிப்படையில், பிஎஸ் 3 தொழில்நுட்ப இஞ்சின் கொண்ட வாகனங்களுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. இதற்கு ஒரே வழி இது போன்ற வாகனங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதே.

இதன்  காரணமாக வாகன  டீலர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள்  பாதிப்பு  அடைந்துள்ளனர். ஏனெனில்,பிஎஸ் 3 மாடல் வாகங்களை பிஎஸ் 4 வாகனமாக மாற்றுவதற்கு அதிக செலவு ஆகும் என்பது  குறிப்பிடத்தக்கது.

ஒரு வேளை தடை செய்யப்பட்ட பிஎஸ் 3 வாகனங்களை, பிஎஸ் 4  வாகனங்களாக  மாற்ற முடிவு  செய்தால், அதற்காக  செலவிடும்  தொகையை கணக்கிட்டு, மற்ற வாகனங்களின் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது என்பது  குறிப்பிடத்தக்கது .