train ticket cancel: என்னங்க புதுசா இருக்கு! ரயில் டிக்கெட் கேன்சல் செய்தாலும் ஜிஎஸ்டி வரி
ரயில் டிக்கெட் கேன்சல் செய்தாலும் அதற்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் என்று புதிய விதியை மத்திய நிதிஅமைச்சகம் புகுத்தியுள்ளது.
ரயில் டிக்கெட் கேன்சல் செய்தாலும் அதற்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் என்று புதிய விதியை மத்திய நிதிஅமைச்சகம் புகுத்தியுள்ளது.
பண்டிகைக் காலம் நெருங்குவதால் வெளியூர்களிலும் வெளிமாநிலங்களிலும் பணியாற்றுவோர் சொந்த ஊர்களுக்குவருவது ரயில்வே டிக்கெட் முன்பதிவு செய்வர். அவர்களுக்கு டிக்கெட் உறுதியாகி, படுக்கை அல்லது இருக்கை வசதியும் ஒதுக்கப்படும்.
ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் பொதுக்குழுக் கூட்டம்: முகேஷ் அம்பானி அறிவிப்பு மீது எதிர்பார்ப்பு
ஆனால், கடைசி நேரத்தில் எதிர்பாராத சூழல் காரணமாகவோ அல்லது திட்டம் மாற்றம் காரணமாக பயணத்தை தள்ளிப்போடலாம், அல்லது ரத்து செய்யலாம். அந்த நேரத்தில் தங்களுக்கு உறுதியான டிக்கெட்டை வேறுவழியின்றி பயணி ரத்து செய்ய நேரிடும்.
அவ்வாறு ரத்து செய்யப்படும் டிக்கெட்டுக்கு ரயில்வேதுறை சார்பில் கேன்சலேஷன் சார்ஜ் பிடிக்கப்பட்டு மீதத் தொகை டிக்கெட் முன்பதிவு செய்தவர் வங்கிக்கணக்கில் சேர்க்கப்படும்.
இதுதான் நடைமுறையாக இருந்து வருகிறது. ஆனால், இனில் உறுதியான டிக்கெட்(கன்பர்மேஷன் டிக்கெட்) வைத்திருப்பவர்கள் திடீரென ரத்து செய்ய நேர்ந்தால், அவ்வாறு கேன்சல் செய்யும் டிக்கெட்டுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கலாம் என மத்திய நிதி அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.
பாதாளத்தில் பங்குச்சந்தை: சென்செக்ஸ் 1200புள்ளிகள் வீழ்ச்சி: ஐடி பங்குகள் அடி: காரணம் என்ன?
இது தொடர்பாக கடந்த 3ம் தேதி நிதிஅமைச்சகத்தின் ஆய்வுப் பிரிவி ரயில்வே துறைக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், உறுதியான டிக்கெட்டை கேன்சல் செய்பவர்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்க பரிந்துரைத்துள்ளது.
இதன்படி சுற்றறிக்கையில் கூறுகையில் “ ரயில்வேயில் டிக்கெட் முன்பதிவு என்பது ஒரு ஒப்பந்தம், அதாவது ரயில்வே சேவையை வழங்க உறுதி செய்துள்ளது.
ஆனால், திடீரென டிக்கெட் முன்பதிவு செய்தபயணி அந்த ஒப்பந்தத்தை மீறி டிக்கெட்டை ரத்துசெய்யும் போது, ஒப்பந்தத்தை மீறிவிடுகிறார். இதற்காக சேவை வழங்கும் ரயில்வே நிறுவனத்துக்கு இழப்பீடாக சிறிய தொகையும், கேன்சல் கட்டணமும் வசூலிக்கப்படும்.
அதாவது ஒப்பந்தத்தை மீறும் பயணிக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி கேன்சல் சார்ஜ்ஜுக்கு இணையாக ஜிஎஸ்டி வரியும் விதிக்கப்படும்.
உதாரணமாக, ஏசி முதல்வகுப்பு பெட்டிக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும். இதே அளவுக்கு டிக்கெட் ரத்து செய்யும்போதும் கட்டணம் விதிக்கப்படும்.
wheat flour export: கோதுமை மாவு ஏற்றுமதிக்கு மத்திய அரசு திடீர் கட்டுப்பாடு
ஏ.சி. முதல்வகுப்பில் 48மணிநேரத்துக்கு முன் டிக்கெட்டை கேன்சல் செய்தால் ரூ.240 பிடிக்கப்படும். இந்த டிக்கெட்டை முன்பதிவு செய்யும்போது தனியாக 5 சதவீதம் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும். ரத்து செய்யும்போது, ரத்துக் கட்டணத்தில் 5 சதவீதம் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும்.
அதாவது ரயில் புறப்படுவதற்கு 48 மணிநேரத்துக்கு முன்பாக டிக்கெட்டை ரத்துசெய்தால், ரத்து கட்டணம் ரூ.240. அதோடு 5% ஜிஎஸ்டி சேர்த்து ரூ.252 பிடிக்கப்படும். 2ம்வகுப்பு ஏசிக்கு கேன்சல் கட்டம் ரூ.200+5%ஜிஎஸ்டி, 3ம்வகுப்பு ஏசி கேன்சல் கட்டணம் ரூ.180+5% ஜிஎஸ்டி சேர்த்து பிடிக்கப்படும்.
ரயில் புறப்படுவதற்கு 48மணி நேரம் முதல் 12 மணிநேரத்துக்குள் உறுதியான டிக்கெட்டை ரத்துசெய்தால், 25 சதவீதம் கேன்சல் கட்டணம்வசூலிக்கப்படும்.
செப்டம்பரில் வங்கிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை? தெரிந்து திட்டமிடுங்கள்
ஆனால், 2ம்வகுப்பு பெட்டியில் டிக்கெட் முன்பதிவு செய்து, உறுதியான டிக்கெட்டை ரத்து செய்தால், அதற்கு ஜிஎஸ்டி வரி பிடிக்கப்படாது எனத் தெரிவிக்ககப்பட்டுள்ளது. ஆதலால், 2ம் வகுப்பு படுக்கை, இருக்கை வசதியில் டிக்கெட் முன்பதிவுசெய்தவர்கள் கவலைப்படத் தேவையில்லை