mukesh ambani:reliance agm 2022: (RIL)ரிலையன்ஸ் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம்: முகேஷ் அம்பானி முக்கிய அறிவிப்பு
ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின்(RIL) 45-வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் இன்று அதன் தலைவர் கோடீஸ்வரர், முகேஷ் அம்பானி தலைமையில் இன்று நடக்கிறது.
ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின்(RIL) 45-வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் இன்று அதன் தலைவர் கோடீஸ்வரர், முகேஷ் அம்பானி தலைமையில் இன்று நடக்கிறது.
இன்று பிற்பகல் 2 மணிக்கு காணொலி வாயிலாக நடக்கும் ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில் முகேஷ் அம்பானி முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் எனத் தெரிகிறது.
குறிப்பாக 5ஜி சேவை எப்போது தொடங்கப்படும், ஜியோபோன் 5ஜி அறிமுகம் எப்போது ஆகியவை குறித்தும், எதிர்காலத் திட்டங்கள், சில்லரை வர்த்தகம், தொலைத்தொடர்பு, மின்சக்தி ஆகியவை குறித்து அறிவிப்புகள் வெளியாகலாம் எனத் தெரிகிறது
பெரும்சரிவில் தங்கம் விலை: என்ன காரணம்? சவரனுக்கு ரூ.280 வீழச்சி: இன்றைய நிலவரம் என்ன?
கடந்த ஆண்டு நடந்த ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில் ஜியோபோன் நெக்ஸ்ட் அறிமுகமானது. அடுத்த 3 ஆண்டுகளில் எரிசக்தி துறையில் ரூ.75 ஆயிரம் முதலீடு செய்யப்படும் என அறிவித்தது.
‘ஹாஸ்டைல் டேக்ஓவர்’ என்றால் என்ன? இப்படித்தான் என்டிடிவியை கபளீகரம் செய்ததா அதானி குழுமம்
இந்த ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்திலும் வரும் ஆண்டுக்கான முதலீடுதிட்டங்கள், மின்சக்தி ஆகியவை குறித்து அறிவிப்பு வெளியாகலாம். நாடாளுமன்றத்தில் எரிசக்தி பாதுகாப்பு திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்படி, சுற்றுச்சூழலுக்கு கேடு இல்லாத, க்ரீன் ஹெட்ரஜன், க்ரீன் அமோனியா, பயோமாஸ் ஆகியவற்றை அனைத்து தொழிற்சாலைகளும் நுகர்வது கட்டாயமாக்கப்பட்டது
ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம்தனது க்ரீன் ஹெட்ரஜன் செலவை கிலோவுக்கு ரூ.5 ஆகக் குறைத்தது. இது தவிர ரிலையன்ஸ் நிறுவனம் முதல் கட்டமாக 13 நகரங்களில் 5ஜி சேவையைத் தொடங்க உள்ளது. குறிப்பாக டெல்லி, மும்பை ஆகிய நகரங்களில் தொடங்கப்பட உள்ளது. ரிலையன்ஸ் போட்டி நிறுவனமான ஏர்டெல் நிறுவனமும் இந்த மாத இறுதியில் 5ஜி சேவையைத் தொடங்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
செப்டம்பரில் வங்கிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை? தெரிந்து திட்டமிடுங்கள்
இன்றைய பொதுக்குழுக் கூட்டத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் 5ஜி போன் அறிமுகம் மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது. கூகுள் உதவியுடன் தயாரிக்கப்பட்டுள்ள ஸ்மார்ட் போன் அனைவரும் வாங்கும் வகையில் ரூ.12ஆயிரத்துக்குள் இருக்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தவிர தொலைத்தொடர்புத்துறை, சில்லரை வர்த்தகம் ஆகியவற்றிலும் எதிர்காலத் திட்டங்களையும் ரிலையன்ஸ் நிறுவனம் அறிவிக்கும் எனத் தெரிகிறது
உலகிலேயே 4-வது கோடீஸ்வரராக கவுதம் அதானி வளர்ந்துவிட்டநிலையில், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனர் முகேஷ் அம்பானிக்கு சறுக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில் மிகப்பெரிய அறிவிப்புகளை முகேஷ் அம்பானியிடம் இருந்து எதிர்பார்க்கலாம்.