தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஹெச்டிஎப்சி, ஐசிஐசிஐ, பேங்க் ஆப் பரோடா போன்ற முன்னணி வங்கிகள் சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளன. வாடிக்கையாளர்களை ஈர்க்கும் நோக்கில் இந்த பண்டிகைகால சலுகைகள் வழங்கப்படுகின்றன.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வங்கி வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கேஷ்பேக், வட்டி விகிதக் குறைப்பு, செயலாக்கக் கட்டணங்களில் தள்ளுபடி, ஃஜீரோ ஃபோர்க்ளோசர் கட்டணங்கள் ஆகியவை இதில் அடங்கும். இந்த சலுகைகள் வாடிக்கையாளர்களை அதிக அளவில் ஈர்க்கும் நோக்கில் வகுக்கப்பட்டுள்ளன.
ஹெச்டிஎப்சி வங்கியின் சிறப்பு சலுகைகள்
நாட்டின் மிகப்பெரிய தனியார் வங்கியான ஹெச்டிஎப்சி (HDFC) வங்கி, கார்டுகள், கடன், PayZapp மற்றும் EASYEMI போன்ற சேவைகளில் 10,000 க்கும் மேற்பட்ட சலுகைகளை வழங்குகிறது. தனிப்பட்ட கடன் வட்டி 9.99% ஆரம்பமாக, 72 மாதங்கள் வரை ஜீரோ ஃபோர்க்ளோசர் கட்டணத்துடன் வழங்கப்படுகிறது (ரூ.15 லட்சம் மேல் கடன் மற்றும் 730க்கு CIBIL மதிப்பெண் பெற்றவர்களுக்கு). வீட்டு கடன் வட்டி விகிதம் 7.40%, கார்கடன் வட்டி 8.55% ஆகும்.
வணிக மற்றும் வாகன கடன் சலுகைகள்
ஹெச்டிஎப்சி வங்கி வணிகம், இரண்டு சக்கர வாகனம், தங்கக் கடன் மற்றும் கார்டு கடன் போன்ற பல்வேறு கடன்களுக்கான சலுகைகள் வழங்குகிறது. வங்கி 9,499 கிளைகள், 21,251 ஏடிஎம்கள் மற்றும் 6 லட்சம் வணிகர்கள்/டீலர்கள் முகாமை பயன்படுத்தி வாடிக்கையாளர்களுக்கு அருகில் சலுகைகளை கொண்டுவரும் திட்டம் வகுக்கியுள்ளது.
வட்டி விகிதங்கள் மற்றும் பொருளாதார முன்னேற்றம்
வீட்டு கடன் வட்டி விகிதம் பொதுவாக 8.75–9.65% ஆகும், வாகன கடன் வட்டி 10%க்கு மேல், தனிப்பட்ட கடன் வட்டி 12-13% வரை இருக்கும். ஜிஎஸ்டி விகிதங்கள் குறைப்பு, வருமானவரி குறைப்பு மற்றும் பண்டிகை சீசன் தேவைகள் காரணமாக H2FY26ல் வர்த்தக கடன் வளர்ச்சி 20% க்கும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐசிஐசிஐ வங்கி சலுகைகள்
ஐசிஐசிஐ (ICICI) வங்கி வீட்டு கடனுக்கு ரூ.5,000 செயலாக்கக் கட்டணம், வாகன கடனுக்கு ரூ.999 செயலாக்கக் கட்டணம். மேலும், iPhone 17க்கு ரூ.6,000 உடனடி கேஷ்பேக் மற்றும் LG, Haier, Panasonic, Bluestar, JBL போன்ற பிராண்டுகளில் ரூ.50,000 வரை சலுகைகள் கிடைக்கின்றன.
பேங்க் ஆப் பரோடா சிறப்பு வட்டி
பேங்க் ஆப் பரோடா (Bank of Baroda) வீட்டு கடனுக்கு 7.45% ஆரம்ப வட்டி விகிதம், செயலாக்கக் கட்டணமில்லாமல் வழங்கப்படுகிறது. பெண்கள், 40 வயதிற்கு குறைந்த Gen Z மற்றும் Millennials க்கு கூடுதல் வட்டி சலுகை கிடைக்கும். கார்கடன் வட்டி குறைக்கப்பட்டு, EV வாங்குபவர்களுக்கு 50% செயலாக்கக் கட்டணத் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.
இண்ட்ஸ்லண்ட் வங்கி சலுகைகள்
இண்ட்ஸ்லண்ட் (IndusInd) வங்கி வீட்டு, வாகன, தனிப்பட்ட கடன் மற்றும் சொத்துக் கடன் போன்ற கடன்களின் செயலாக்கக் கட்டணத்தில் 50% வரை தள்ளுபடி செய்கிறது. தனிப்பட்ட கடன் வட்டி 10.49% முதல், 84 மாதங்கள் வரை கடன் காலத்திற்கு வழங்கப்படுகிறது. வீட்டு கடன் திட்டங்களில் ரூ.10 கோடி வரை கடன், நீடிக்கப்பட்ட காலப்பகுதி மற்றும் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் வசதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
