Gold Rate Today (October 20): தங்கம் விலை சரிவு! கொண்டாட்டத்தில் திருமண வீட்டார்!
கடந்த 2 வாரங்களாக அதிகரித்து வந்த தங்கம் விலை தற்போது சரிவடைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்கள், முதலீட்டாளர்களின் மாற்றம் மற்றும் போர் பதற்றம் குறைந்தது போன்ற காரணங்களால் இந்த விலை சரிவு ஏற்பட்டுள்ளது.

திருமண ஏற்பாட்டாளர்கள் மகிழ்ச்சி
கடந்த 2 வார காலமாக அதிகரித்து வந்த தங்கம் வார முதல் வர்த்த நாளில் சரிவடைந்துள்ளதால் திருமண ஏற்பாட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்தியாவில் திருமண சீசன் மற்றும் பண்டிகை காலம் தொடங்கியுள்ள நிலையில், தங்கம் விலை குறைந்துள்ளதால் பலரும் நடை கடைகள் நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர். அதுவும் பெண்கள் காலையிலேயே நகைக்கடையில் குவிந்ததால் பல கடைகளில் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.
ஆபரணத்தங்கம் விலை
சென்னையில் ஆபரணத்தங்கம் விலை கிராமுக்கு 80 ரூபாய் குறைந்து 11 ஆயிரத்து 920 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 640 ரூபாய் குறைந்து 95,360 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை 1 கிராம் 190 ரூபாய்க்கும் 1 கிலோ பார்வெள்ளி 190 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
காரணம் இதுதான்.!
சர்வதேச சந்தையில் தங்கம் தேவை குறைந்தது, மற்றும் முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் முதலீடு செய்ய தொடங்கியது உள்ளிட்ட காரணங்களே தங்கம் மற்றும் வெள்ளி விலை குறைய காரணமாக நிதி நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். போர் போன்ற பதற்றங்கள் ஏற்கனவே தங்க விலையை உயர்த்தியிருந்தன. இப்போது அந்தப் பதற்றம் சற்று குறைந்து, உலக அளவில் ஸ்திரத்தன்மை ஏற்பட்டுள்ளது. இதனால், தங்கத்தின் "பாதுகாப்பு" தேவை குறைந்து விலை சரிந்தது. கச்சா எண்ணெய் விலை குறைதல் மற்றும் ரூபாய் மதிப்பு ஸ்திரத்தன்மை தங்க இறக்குமதி செலவைக் குறைக்க உதவியது. மேலும், வங்கி வட்டி விகிதங்கள் உயர்ந்தால், மக்கள் தங்கத்தை விட்டு ஃபிக்ஸ் டெபாசிட் போன்ற பாதுகாப்பான ஆப்ஷன்களுக்கு மாற்றியது போன்றவையும் விலை சரிவுக்கு காரணமாக கூறப்படுகிறது.