பஜாஜ் ஃபைனான்ஸ் நிரந்தர வைப்புத்தொகை ரூ.50,000 கோடியை கடந்து சாதனை

பஜாஜ் ஃபைனான்ஸ் ஜூன் 30, 2023 நிலவரப்படி, அதன் ஒருங்கிணைக்கப்பட்ட தொகையில் 21% டெபாசிட்கள் மற்றும் 28% முழுமையான கடன்கள் என்ற அளவில் உள்ளது.

Bajaj Finance records 50,000 crore in fixed deposits in July 2023

இந்தியாவின் முன்னணி மற்றும் பன்முகப்படுத்தப்பட்ட வங்கி அல்லாத நிதி நிறுவனங்களில் ஒன்றான பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனம் மற்றும் பஜாஜ் ஃபின்சர்வின் ஒரு பகுதி, இன்று தனது நிரந்தர வைப்புத்தொகை பதிவில் ரூ. 50,000 கோடி கடந்துள்ளதாக கூறியுள்ளது.

பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனம் ஐந்து லட்சம் டெபாசிட்தார வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது, ஒவ்வொரு டெபாசிட்டரும் 2.87 டெபாசிட்களை வைத்துள்ளவகையில் இது மொத்தம் 14 லட்சம் டெபாசிட்கள் ஆகும்.

பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனம் அதன் நீண்ட கால கடன் திட்டத்திற்காக CRISIL, ICRA, CARE மற்றும் இந்தியா ரேட்டிங் தகுதியையும் CRISIL, ICRA, CARE மூலம் குறுகிய கால கடன் திட்டத்துக்காக ஏ1+ தர தகுதியையும் CRISIL மற்றும் ICRA மூலம் நிலுவை வைப்புத்தொகை திட்டங்களுக்காக  இந்தியா ரேட்டிங்ஸ், ஏஏஏ (நிலையான) தரத் தகுதியை உயர்ந்த கிரெட்டி மதிப்பீட்டை பெற்றுள்ளது.

கோவையில் அரசு ஸ்டார்ட்-அப் திருவிழாவில் பாதுகாப்புக்கு போலீசுக்குப் பதில் தனியார் பவுன்சர்கள்

Bajaj Finance records 50,000 crore in fixed deposits in July 2023

இது குறித்து பஜாஜ் ஃபைனான்ஸ், நிரந்தர வைப்பு மற்றும் முதலீடுகள் பிரிவின் செயல் துணைத் தலைவர் சச்சின் சிக்கா கூறுகையில், "எங்கள் வாடிக்கையாளர்களுக்கு கவர்ச்சிகரமான வட்டி விகிதத்தில் நீண்ட கால சேமிப்பு தீர்வுகளை வழங்குவதில் நாங்கள் கவனம் செலுத்தியுள்ளோம். எங்களின் நிரந்தர வைப்புத்தொகை போர்ட்ஃபோலியோவின் விரைவான வளர்ச்சி, இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில், பஜாஜ் ஃபின்சர்வ் பிராண்டின் மீதான வாடிக்கையாளர் நம்பிக்கை, நிரந்தர வைப்புத்தொகைகளை டிஜிட்டல் முறையில் முன்பதிவு செய்வதன் எளிமை மற்றும் நாடு முழுவதும் உள்ள எங்கள் இருப்பை பிரதிபலிக்கிறது," என்று தெரிவித்தார்.

மூத்த குடிமக்களுக்கு 8.60% மற்றும் பிறருக்கு 8.35% என 44 மாத காலத்திற்கான நிரந்தர வைப்புத்தொகைகளுக்கு அதிக வட்டி விகிதங்களில் பஜாஜ் ஃபைனான்ஸ் வழங்குகிறது.

10 ஆண்டுகளில், இந்நிறுவனம் தனது டெபாசிட் பதிவில் 60% சிஏஜிஆரிலும், டெபாசிட்டரின் எண்ணிக்கையை 49% சிஏஜிஆரிலும் உயர்ந்துள்ளது. இந்நிறுவனம் 12 மாதங்களுக்கு 7.40% மற்றும் 24 மாதங்களுக்கு 7.55% வட்டி விகிதங்களை வழங்குகிறது. 36 முதல் 60 மாதங்களுக்கு வழங்கும் வட்டி விகிதங்கள் 8.05% ஆகும். மூத்த குடிமக்களுக்கு இந்த விகிதங்களில் கூடுதலாக 0.25% வழங்கப்படுகிறது.

பஜாஜ் ஃபைனான்ஸ் அதன் செயலியில் 73 மில்லியன் வாடிக்கையாளர்களையும் 40.2 மில்லியன் வாடிக்கையாளர்களையும் கொண்டுள்ளது. இந்நிறுவனம் தனது டிஜிட்டல் சேனல்கள் மூலம் நிரந்தர வைப்புத்தொகைகளை வயது வித்தியாசமின்றி அனைத்து வயதுடைய வாடிக்கையாளர்களும் அதிக அளவில் தேர்வு செய்வதை பார்த்து வருகிறது.

அப்பா சொன்ன வார்த்தை உண்மைதான்! லடாக்கில் பைக் ஓட்டி மகிழ்ந்த ராகுல் காந்தி நெகிழ்ச்சி!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios