ரூ.210 முதலீடு செய்தால், மாதம் ரூ.5000 ஓய்வூதியம் பெறலாம்.. அரசின் இந்த திட்டம் பற்றி தெரியுமா?

அமைப்புசாரா துறையின் கீழ் வரும் மக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு அறிமுகம் செய்த திட்டம் தான் அடல் பென்ஷன் யோஜனா திட்டம்.

Atal Pension Yojan : If you invest Rs.210, you can get a pension of Rs.5000 per month.. government scheme?

பொதுமக்களுக்கு பணத்தை சேமிக்க உதவும் வகையில் மத்திய அரசு பல்வேறு சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அரசின் திட்டங்கள் என்பதால் இதுபோன்ற திட்டங்களில் முதலீடு செய்வது பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. அந்த வகையில் அமைப்புசாரா துறையின் கீழ் வரும் மக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு அறிமுகம் செய்த திட்டம் தான் அடல் பென்ஷன் யோஜனா திட்டம். இந்த திட்டத்தின் கீழ், சந்தாதாரர்களுக்கு குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வூதியம் ரூ. 1000 முதல் ரூ. மாதம் 5000 வரை கிடைக்கிறது. 

அடல் பென்ஷன் யோஜனா: தகுதி

  • 18 முதல் 40 வயது வரை உள்ள அனைத்து இந்திய குடிமக்களும் இந்த திட்டத்திற்கு தகுதியானவர்கள்.
  • பயனர்கள் தங்கள் ஆதார் எண் மற்றும் மொபைல் எண்ணை வழங்க வேண்டும்.
  • பதிவு செய்யும் போது ஆதார் விவரங்கள் இல்லை என்றால், பின்னர் சமர்ப்பிக்கப்படலாம்.

அடல் பென்ஷன் யோஜனா: சிறப்பம்சங்கள்

  • அடல் பென்ஷன் யோஜனா திட்டம் வயதானவர்களுக்கு பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்யும் திட்டம்.
  • அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தின் கீழ், சந்தாதாரர்களுக்கு உத்தரவாதமான குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வூதியம் ரூ. 1000 மற்றும் ரூ. மாதம் 5000. கிடைக்கும்
  • வருமான வரி செலுத்தாத இந்திய குடிமக்கள் அனைவருமே இந்த திட்டத்தில் பயன்பெறலாம்.
  • அனைத்து வங்கி கணக்கு வைத்திருப்பவர்களும் இந்த திட்டத்தில் சேரலாம்.

அடல் பென்ஷன் யோஜனா: பிரீமியம்

அடல் பென்ஷன் யோஜனா பிரீமியங்கள் முதலீட்டாளரின் வயதைக் கொண்டு தீர்மானிக்கப்படுகின்றன. உதாரணமாக, 18 வயது முதலீட்டாளர், 60 வயதை அடைந்த பிறகு, மாதாந்திர அடிப்படையில் ரூ.5000 பெற விரும்பினால் அவர் ரூ.210 மாதாந்திர பிரீமியம் செலுத்த வேண்டும். அதே நேரம், 40 வயதில் இந்த திட்டத்தில் சேரும் முதலீட்டாளர், ரூ.5000 மாதாந்திர ஓய்வூதியத்தைப் பெற, அடுத்த 20 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1454 பங்களிக்க வேண்டும்.

Salary Hike : 7வது சம்பள கமிஷன்: அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்.. சம்பளம் உயர்வு - முழு விபரம் இதோ !!

அடல் பென்ஷன் யோஜனா: ஓய்வூதிய விருப்பங்கள்

5000 ரூபாய் மாதாந்திர ஓய்வூதியம் தவிர, மாதத்திற்கு ரூ 1000, ரூ 2000, மாதம் ரூ 3000 மற்றும் மாதம் ரூ 4000 உட்பட பலவிதமான ஓய்வூதிய விருப்பங்களிலிருந்து ஏதேனும் ஒன்றை முதலீட்டாளர்கள் தேர்வு செய்யலாம்.

அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் எப்படி வெளியேறுவது?

60 வயதை எட்டும்போது போது மட்டுமே, 100% பென்ஷன் தொகையையும் சந்தாதாரர் பெறமுடியும். எனவே 60 வயதாகும் மட்டுமே இந்த திட்டத்தில் இருந்து வெளியேற முடியும். எனினும், எதிர்பாராத விதமாக சந்தாதாரர் இறந்தால், ஓய்வூதிய தொகைக்கு அவரின் வாழ்க்கைத் துணைக்குக் கிடைக்கும். ஒருவேளை சந்தாதாரர் மற்றும் மனைவி இருவருமே இறந்தால், ஓய்வூதிய தொகை அவர் பரிந்துரைத்த நாமினிக்கு திருப்பித் தரப்படும். சந்தாதாரர் ஏதேனும் மோசமான நோயால் பாதிக்கப்படும் பட்சத்தில் அவர் இந்த திட்டத்தில் வெளியேற முடியும்.

திட்டத்தை எப்படி தொடங்குவது?

பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள், தபால் அலுவலகங்களில் இந்த திட்டத்தை தொடங்கலாம். ஆன்லைன் மூலமும் இந்த திட்டத்தை தொடங்க முடியும். வங்கி சேமிப்புக் கணக்கின் மூலம் மாதம், காலாண்டு, அரையாண்டு அடிப்படையில் ஆட்டோ டெபிட் மூலம் சந்தா செலுத்தும் வசதியும் இந்த திட்டத்தில் உள்ளது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios