Asianet News TamilAsianet News Tamil

Share Market Today:உற்சாகத்தில் பங்குச்சந்தை! சென்செக்ஸ், நிப்டி புள்ளிகள் ஏற்றம்: டாடா ஸ்டீல் பங்கு லாபம்

வாரத்தின் முதல் வர்த்தக தினமான இன்று மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தைகள் பெரும் ஊசலாட்டத்துடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளன

Amid market turmoil, sensex, nifty indices trade flat: metals shine, pharma suffers
Author
First Published Jan 2, 2023, 9:37 AM IST

வாரத்தின் முதல் வர்த்தக தினமான இன்று மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தைகள் பெரும் ஊசலாட்டத்துடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளன

கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்கப் பங்குச்சந்தையின் விளைவு இந்த ஊசலாட்டத்துக்கு காரணமாக அமைந்துள்ளது. அமெரிக்கப் பங்குச்சந்தை வெள்ளிக்கிழமை முடிவில், சரிவில் முடிந்தது. அமெரிக்காவில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வட்டிவீதத்தை உயர்த்துவது, பொருளாதார மந்தநிலை வரும் என எதிர்பார்ப்பு, சீனாவில் அதிகரிக்கும் கொரோனா பரவல் போன்றவற்றால் பங்குச்சந்தை சரிவுடன் முடிந்தது.

Amid market turmoil, sensex, nifty indices trade flat: metals shine, pharma suffers

NDTV கெளதம் அதானியின் முழுக் கட்டுப்பாட்டுக்குள் வந்தது: 64.71 % பங்குகளுடன் கைப்பற்றினார்

இதன்  எதிரொலி ஆசியப் பங்குச்சந்தையிலும் இன்று தொடர்ந்து வருகிறது. இதன் பாதிப்பு இந்தியச் சந்தையிலும் காலை முதலே இருந்து வருகிறது. இருப்பினும் டிசம்பர் மதாத்தில் ஜிஎஸ்டி வரி வசூல் உயர்வு, பொருளாதார வளர்ச்சி போன்றவை உள்நாட்டு முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளன. ஆனாலும், அந்நிய முதலீட்டாளர்கள் பங்குகளை விற்பனை செய்து தொடர்ந்து முதலீட்டை எடுத்துவருவதும் சந்தையில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது

இதனால் இன்று காலை வர்த்தகம் தொடங்கும்முன்பே மும்பை பங்குச்சந்தையில் 118 புள்ளிகள் உயர்வுடன் இருந்தது, வர்த்தகம் தொடங்கியவும் மளமளவென சரியத் தொடங்கியது.

Amid market turmoil, sensex, nifty indices trade flat: metals shine, pharma suffers

மத்திய அரசு ஊழியர்களுக்கு 7வது ஊதியக்குழுவின் படி விரைவில் அகவிலைப்படி உயர்வு?

மும்பை பங்குசந்தையில் சென்செக்ஸ் 148 புள்ளிகள் உயர்வுடன் 60,988 புள்ளிகளிலும், தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 35 புள்ளிகள் ஏற்றத்துடன், 18,141 புள்ளிகளிலும் வர்த்தகத்தை நடத்தி வருகிறது.

மும்பை பங்குச்சந்தையில் உள்ள 30 முக்கிய நிறுவனங்களில், 16 நிறுவனப் பங்குகள் லாபத்தில் செல்கின்றன, மற்ற நிறுவனப் பங்குகள் சரிவில் உள்ளன. விப்ரோ, இந்துஸ்தான் லீவர், பவர்கிரிட், கோடக் வங்கி, ஹெச்டிஎப்சி வங்கி, ஹெச்டிஎப்சி ,டிசிஎஸ், மாருதி,ஐடிசி, சன்பார்மா உள்ளிட்ட பங்குகள் விலை குறைந்துள்ளன.

Amid market turmoil, sensex, nifty indices trade flat: metals shine, pharma suffers

நிப்டியில் டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், ஹின்டால்கோ, ஓன்ஜிசி, இன்டஸ்இன்டஸ் வங்கிப் பங்குகள் லாபத்தில் உள்ளன. பஜாஜ் ஆட்டோ, ஏசியன் பெயின்ட்ஸ், மாருதி சுஸூகி, ஐடிசி, சன்பார்மா பங்குகள் விலை குறைந்துள்ளன.

Follow Us:
Download App:
  • android
  • ios