Asianet News TamilAsianet News Tamil

7th Pay Commission: DA : மத்திய அரசு ஊழியர்களுக்கு 7வது ஊதியக்குழுவின் படி விரைவில் அகவிலைப்படி உயர்வு?

7-வது ஊதியக் குழுவின் பரிந்துரையின்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு இன்றோ அல்லது புத்தாண்டுக்குப்பின்போ மத்திய அரசு அறிவிக்கும் எனத் தெரிகிறது

Central government employees will receive a pay raise, and 18-month Dearness Allowance arrears will be paid soon.
Author
First Published Dec 31, 2022, 3:32 PM IST

7-வது ஊதியக் குழுவின் பரிந்துரையின்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு இன்றோ அல்லது புத்தாண்டுக்குப்பின்போ மத்திய அரசு அறிவிக்கும் எனத் தெரிகிறது

அகவிலைப்படி, அகவிலைப்படி உயர்வு மற்றும் பிட்மென்ட் பேக்ட்டர் மறுஆய்வு, 18 மாத டிஏ நிலுவைத்தொகையை தருதல் ஆகியவற்றின் மீது மத்திய அரசு இன்று அல்லது நாளைக்குள் முடிவு எடுக்கலாம் எனத் தெரிகிறது. இந்த முறை மத்திய அரசு ஊழியர்களின் பிட்மென்ட் ஃபேக்டர் படி,(Fitment factor) அடிப்படை ஊதியமும் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.

ஆண்டுக்கு இரு முறை மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது. அந்த வகையில் ஜனவரியிலும், ஜூலை மாதத்திலும் வழங்கப்படுகிறது.

Central government employees will receive a pay raise, and 18-month Dearness Allowance arrears will be paid soon.

கடந்த செப்டம்பர் மாதம் அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப்பட்டதையடுத்து, 38 சதவீதமாகஅதிகரி்த்தது. இதன் மூலம் 48 லட்சம் ஊழியர்களும், 68 லட்சம் ஓய்வதியதார்களும் பயன் அடைந்தனர். 

இந்நிலையில் மத்திய அரசு வட்டாரங்கள்தகவலின்படி, 2023ம்ஆண்டு மார்ச்சுக்கான அகவிலைப்படி 3 முதல் 5 சதவீதம் வரை உயர்த்தப்படலாம் எனத் தெரிகிறது. இது 2023, ஜனவரி மாதத்தில் இருந்தே நடைமுறைப்படுத்தப்படலாம். அவ்வாறு இருந்தால், அகவிலைப்படி 43 சதவீதமாக அதிகரிக்கும்.

கடந்த 2020 ஜனவரி முதல் 2021 ஜூன் மாதம்வரை 18 மாதங்களுக்கு அகவிலைப்படி நிலுவைத் தொகையை மத்திய அரசு ஊழியர்களுக்கு இன்னும் வழங்கவில்லை. மத்திய அரசு ஒருவேளை  இதில் முடிவு எடுத்தால் 18 மாத நிலுவைத் தொகையும் ஊழியர்களுக்கு கிடைக்கும்.

பிட்மென்ட் பேக்டர் திருத்தப்பட வேண்டும்,மறுஆய்வு செய்யப்பட வேண்டும் என்று ஊழியர்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருக்கிறது. தற்போது பிட்மென்ட் பேக்டர் 2.57 ஆகஇருக்கிறது இதை 3.68 ஆக உயர்த்த வேண்டும்என்று கோருகிறார்கள்.  பிட்மென்ட் பேக்டர் திருத்தப்பட்டால், ஊழியர்களின் அடிப்படை ஊதியமும் அதிகரிக்கும்.

Central government employees will receive a pay raise, and 18-month Dearness Allowance arrears will be paid soon.

பிட்மென்ட் ஃபேக்டர் (fitment factor)என்றால் என்ன

பிட்மென்ட்ஃபேக்டர் என்பது, 6-வது ஊதியக் குழுவின் அடிப்படை ஊதியத்தை, திருத்தப்பட்ட 7-வது ஊதியக்குழுஅமைப்போடு பெருக்கி வரும் தொகையாகும். 7-வது ஊதியக் குழுவில் பிட்மென்ட் ஃபேக்டர் (fitment factor)2.57 எனநிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிட்மென்ட் ஃபேக்டர் உயர்ந்தால், ஊழியர்களின் ஊதியமும் தானாக உயர்ந்துவிடும்.

கடந்த 10 மாதங்களாக சில்லறைப் பணவீக்கம் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டு அளவான 6 சதவீதத்தைக் கடந்து சென்று,கடந்த மாதம்தான் குறைந்துள்ளது. ஆதலால், 10 மாத சராசரியைக் கணக்கிட்டு அகவிலைப்படி உயர்த்தப்படலாம். 

கடந்த செப்டம்பர் மாதம் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4 சதவீதம் உயர்ந்தது. இதன் மூலம் மத்திய அரசுக்கு கூடுதலாக ரூ.6,591.36 கோடி செலவானது
 

Follow Us:
Download App:
  • android
  • ios