Asianet News TamilAsianet News Tamil

Adani Share Price: NDTV கெளதம் அதானியின் முழுக் கட்டுப்பாட்டுக்குள் வந்தது: 64.71 % பங்குகளுடன் கைப்பற்றினார்

என்டிடிவியின் 64.71 சதவீதப் பங்குகளைக் கைப்பற்றி, அந்த சேனலை முழுமையாக தனது கட்டுப்பாட்டுக்குள் தொழிலதிபதிர் கெளதம் அதானி கொண்டு வந்தார்.

Adani Group acquires Full control of NDTV
Author
First Published Dec 31, 2022, 11:34 AM IST

என்டிடிவியின் 64.71 சதவீதப் பங்குகளைக் கைப்பற்றி, அந்த சேனலை முழுமையாக தனது கட்டுப்பாட்டுக்குள் தொழிலதிபதிர் கெளதம் அதானி கொண்டு வந்தார்.

என்டிடிவி நிறுவனர்கள் பிரணாய் ராய், ராதிகா ராய் இருவரின் பங்குகளையும் 17 சதவீதம் அதிகவிலைக்கு வாங்கியது அதானி குழுமம். தொடக்தத்தில் ஆர்ஆர்பிஆர்(RRPR) போல்டிங் நிறுவனத்தை நடத்திய பிரணாய் ராய் மற்றும் ராதிகா ராயிடம் இருந்து 27.26 சதவீதப் பங்குகளை ஒரு பங்கு ரூ.342.65க்கு அதானி குழுமம் வாங்கியது. அதன்பின் ரூ.602 கோடியை பிரணாய் ராய்க்கு அதானி குழுமம் கைமாற்றி, ஆர்ஆர்பிஆர் ஹோல்டிங்கை அதானி குழுமம் கைப்பற்றியது

NDTV-யிலிருந்து வெளியேறினார் பிரணாய் ராய்,ராதிகா ராய்: பங்குகள் அதானி குழுமத்துக்கு மாற்றம்

Adani Group acquires Full control of NDTV

அதானி குழுமத்திடம் என்டிடிவி வந்தபின், முதல்கட்டமாக சஞ்சய் புகாலியா, செந்தில் சின்னையா செங்கல்வராயன் நிர்வாகக்குழுவில் நியமிக்கப்பட்டனர். அதன்பின் நேற்று முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சுனில் குமார், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அமன் குமார் சிங் ஆகியோர் கூடுதலாக அதானி குழுமம் நியமித்துள்ளது

பிரணாய் ராயிடம் 15.94 சதவீத பங்குகளும், ராதிகா ராயிடம் 16.32 சதவீதப் பங்குகளும் இருந்தன. இவற்றில் பெரும்பகுதியை அதானி குழுமத்திடம் விற்றுவிட்டு இருவரும் குறைந்த அளவாக 2.5 சதவீதப் பங்குகளை மட்டுமே வைத்துள்ளனர்

ஆர்ஆர்பிஆர் நிறுவனம் கடந்த 2009 -ம் ஆண்டு தனது கைவசமுள்ள 29.18 சதவீத என்டிடிவி பங்குகளை விஷ்வபிரதான் கமர்சியல் லிமிடெட் (VCPL) நிறுவனத்திடம் அடமானம் வைத்து 403 கோடி ரூபாய் கடன் பெற்று இருந்தது. 

இந்தியாவின் ஜிடிபிக்கு 10,000 கோடி பங்களித்த யூடியூபர்கள்.. லட்சக்கணக்கில் உருவான வேலைவாய்ப்புகள் !!

அதானி குழுமத்தின் சார்பில் அதானி என்டர்பிரைசஸ் நிறுவனத்தால் மறைமுகமாக நடத்தப்படுவதுதான் இந்த விஷ்வபிரதான் கர்ஷியல் லிமிடட் நிறுவனம்.

Adani Group acquires Full control of NDTV

விபிசிஎல் நிறுவனத்திடம் பெற்ற கடனை திரும்பச் செலுத்தும் காலம் 10 ஆண்டுகளாக என்டிடிவிக்கு நிர்ணயக்கப்பட்டு அதற்குரிய காலமும் முடிந்துவிட்டது. கடனை ஆர்ஆர்பிஆர் ஹோல்டிங் நிறுவனம் திரும்ப செலுத்தாத காரணத்தினால் தற்போது விசிபிஎல் நிறுவனம் அந்தப் பங்குகளை அதானி குழுமத்துக்கு விற்பனை செய்தது. 

இந்நிலையில் அதானி குழுமம், என்டிடிவியின் கூடுதலாக 26 சதவீதப் பங்குகளை வெளிச்சந்தையில் வாங்கிவிட்டது. இதையடுத்து அதானி குழுமத்திடம் 37 சதவீதத்துக்கும் அதிகமான பங்குகள் கைவசம் வந்துவிட்டன. இப்போது பிரணாய் ராய், ராதிகா ராயும் தங்கள் பங்குகளை அதானி குழுமத்திடம் விற்றதையடுத்து, 64.71 சதவீதப் பங்குகள் அதானி குழுமத்திடம் உள்ளன.

Wilful Defaulter:தகுதியிருந்தும் கடனைச் செலுத்தாத டாப்50 நபர்கள் மட்டும் ரூ.93 ஆயிரம் கோடி வங்கிகளுக்கு பாக்கி

Adani Group acquires Full control of NDTV

பிரணாய் ராய், ராதிகா ராயிடம் இருந்து ஒரு பங்கு ரூ.342.65 க்கு அதானி குழுமம் வாங்கியுள்ளது. 1.75 கோடிப்பங்குகளை ரூ.602.30 கோடிக்கு அதானி குழுமம் வாங்கியது. இந்த பங்கு கைப்பற்றுதல் பணி டிசம்பர் 30ம் தேதி முடிவடைந்தது. இதையடுத்து என்டிடிவி சேனல் முழுமையாக அதானி குழுமத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது

Follow Us:
Download App:
  • android
  • ios