அமேசானில் ஷாப்பிங் செய்வது அடுத்த மாதத்தில் இருந்து விலை உயர்ந்ததாக இருக்கக்கூடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வீட்டிற்கு தேவையான மளிகைப் பொருட்கள் முதல் டி.வி, ஃப்ரிட்ஜ் என அனைத்து பொருட்களுமே தற்போது ஆன்லைனில் கிடைக்கின்றன. அந்த வகையில் அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள் நாட்டின் முன்னணி நிறுவனங்களாக உள்ளன. நேரடியாக கடைகளுக்கு சென்று ஷாப்பிங் செய்வதை விட, ஆன்லைனில் ஷாப்பிங் செய்வதையே பெரும்பாலான மக்கள் விரும்புகின்றனர்.
இந்நிலையில் அமேசானில் ஆன்லைன் ஷாப்பிங் செய்வோருக்கு ஒரு ஷாக் நியூஸ் வந்துள்ளது. ஆம். அமேசானில் ஷாப்பிங் செய்வது அடுத்த மாதத்தில் இருந்து விலை உயர்ந்ததாக இருக்கக்கூடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமேசான் நிறுவனம் விற்பனையாளர்களிடமிருந்து தனது கமிஷனை அதிகரிக்க விரும்புவதால் விலை உயர்வு அதிகரிக்கக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க : வங்கிகளில் ரு.2000 நோட்டு டெபாசிட்.. இந்த வரம்பை தாண்டினால் பான் கட்டாயம்.. விவரம் உள்ளே..
மேலும் அமேசான் நிறுவனம் தனது செலவைக் குறைக்க விரும்புவதால், அனைத்து விற்பனையாளர்களிடமிருந்தும் அதிக கமிஷன் வசூலிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே அமேசான் நிறுவனத்தின் இந்த மாற்றத்தால், அந்நிறுவனத்தில் நீங்கள் பொருட்கள் வாங்கும் போது நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கமிஷன் அதிகரிப்பு எலக்ட்ரானிக்ஸ், கண்ணாடிகள், ஆடைகள் மற்றும் பல வகைகளில் தயாரிப்புகளை பாதிக்கும் என்றும் கூறப்படுகிறது.
கவர்ச்சிகரமான தள்ளுபடிகள் மற்றும் குறைவான விலைகள் காரணமாக ஆன்லைன் ஷாப்பிங் நாட்டில் வளர்ந்துள்ளது. ஆனால் அடுத்த மாதம் முதல் நடைமுறைக்கு வரும் இந்த மாற்றங்கள், ஆன்லைன் ஷாப்பிங்கில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
எனினும் எந்தெந்த தயாரிப்புகள் எவ்வளவு விலை அதிகரிக்கும் என்பது குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. ஆனால், அமேசான் நிறுவனம் 2 சதவீதம் கமிஷனை உயர்த்தினால், அதே அளவு விலை உயர்வு நுகர்வோருக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.
சந்தை இயக்கவியல் மற்றும் பல்வேறு மேக்ரோ பொருளாதார காரணிகள் காரணமாக இந்த விலை உயர்வு இருக்கலாம் என்று நிபுணர்கள் தெரிவிகின்றனர். எனவே அந்நிறுவனம் தனது செலவினங்களைக் குறைப்பதில் கவனம் செலுத்துகிறது என்றும் அவர்கள் கூறுகின்றனர். அமேசான் ஏற்கனவே உலக அளவிலும் இந்தியாவிலும் பெருமளவிலான பணிநீக்கங்களை மேற்கொண்டுள்ளது. எனவே கமிஷன் கட்டணத்தை திருத்தும் முடிவு ஆச்சரியம் இல்லை என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க : அமெரிக்காவும் இல்ல, சீனாவும் இல்ல.. தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்த சிறிய நாடு தான் முதலிடம்!
