அஹமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு இழப்பீடு மற்றும் காப்பீட்டுத் தொகை கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. சர்வதேச விதிகள் மற்றும் பயணக் காப்பீட்டின் அடிப்படையில் இழப்பீடு வழங்கப்படும்.
அஹமதாபாத் நகரில் நடந்த மிகவும் மோசமான விமான விபத்து உலகையே கண்கலங்க வைத்துள்ளது. விமானத்தில் பயணித்த ஒருவரை தவிர மற்ற அனைவரும் உயிரிழந்தனர். இந்த மோசமான நிகழ்வுக்காக உலக தலைவர்கள் பலரும் இரங்கள் தெரிவித்துள்ளனர். விபத்து குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ள போதிலும், உறவுகளை இழந்து தவிப்போருக்கு ஆறுதல் சொல்லி தேற்ற முடியாத நிலையே ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் விமான விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு இழப்பீட்டு தொகையை மத்திய மாநில அரசுகள் அறிவித்துள்ள நிலையில் அவர்கள் காப்பீட்டுத்தொகை பெற முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது
சர்வதேச விதிகள் – Montreal Convention, 1999
விமான பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு சர்வதேச விதிகள் பாதுகாப்பாக இருக்கிறது. சர்வதேச விதிகள் – Montreal Convention, 1999 உடன்படிக்கையின் கீழ், விமானத்தில் பயணிக்கும் ஒருவர் விபத்தில் உயிரிழந்தாலோ அல்லது காயமடைந்தாலோ, அவருக்கு அல்லது அவருடைய குடும்பத்திற்குப் பொருளாதார நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் இந்தியாவும் உறுப்பினராக உள்ள நிலையில், சர்வதேச விதிகளை இந்தியா கடைபிடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
முக்கியக் கொள்கைகள்
உயிரிழப்பு: பயணியின் மரணத்திற்கு ரூ.1.4 கோடி இழப்பீடு
காயம் : காயத்தின் அளவின்படி ரூ.1.4 கோடி வரை இழப்பீடு
சர்வதேச விதிகளின்படி உயிரிழப்பு ஏற்பட்டால் பயணியின் மரணத்திற்கு ரூ.1.4 கோடி அல்லது 1,75,000 அமெரிக்க டாலர்கள் இழப்பீடு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் காயம் ஏற்பட்டால் காயத்தின் அளவின்படி ரூ.1.4 கோடி வரை இழப்பீடு வழங்கப்படும். ஏர்லைனின் தவறான நடவடிக்கையால் விபத்து ஏற்பட்டது என நிரூபிக்கப்பட்டால், இழப்பீட்டுத் தொகை அதிகரிக்கலாம். இந்த விதிகள் சர்வதேச விமானப் பயணங்களில் மிகக் கடுமையாக பின்பற்றப்படுகின்றன.
இந்தியா – DGCA வழிகாட்டுதல்களும் பயணக் காப்பீடும்
ஏர்லைன் நிறுவனங்கள், பயணச்சீட்டின் விலைக்குள் அடங்கிய வகையில் பயண காப்பீட்டையும் வழங்குகின்றன. பயணிகள் தனிப்பட்ட பயணக் காப்பீடும் எடுத்து வைத்திருக்கலாம். வெளிநாட்டுப் பயணங்களுக்குச் செல்லும் போது, இந்த பயணக் காப்பீடு உயிர் காப்பீட்டாகவும் செயல்படும். விமான விபத்தில் மரணமடைந்தால், பயணக்காப்பீட்டில் குறிப்பிட்ட தொகை குடும்பத்தினருக்கு வழங்கப்படும்.
அஹமதாபாத் AI171 விமான விபத்துக்கான இழப்பீடு
AI171 விமானம் அஹமதாபாத் முதல் லண்டன் செல்வதற்கான சர்வதேச விமானம் என்பதால், Montreal Convention விதிகள் இங்கு பயன்படுத்தப்படும்.ஏர்லைன் நிறுவனம் தன்னால் வழங்க வேண்டிய இழப்பீடு தவிர, பயணக் காப்பீட்டும் வைத்திருந்தால், அது தனியாக வழங்கப்படும். இது பயணியின் குடும்பத்துக்கு இரட்டை நிவாரணமாக இருக்கும்.
இழப்பீடு பெறும் செயல்முறை
உயிரிழந்தவர் மற்றும் அவருடைய வாரிசுகள் யார் என்பதைக் கணக்கிடும் பணிகள் நடக்கின்றன. குடும்பத்தினர் ஏர்லைனிடம் மற்றும் காப்பீட்டு நிறுவனத்திடம் கோரிக்கைகள் தாக்கல் செய்ய வேண்டும். பின்னர் விபத்து விசாரணை அறிக்கை இழப்பீட்டுத் தொகையை நிர்ணயிக்க முக்கிய பங்கு வகிக்கிறது. சட்ட ஆலோசனைகள் மூலம் சில குடும்பங்கள் தங்களுக்கேற்ற இழப்பீட்டை உறுதிப்படுத்த முயற்சிக்கின்றனர். AI171 விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு, ஏர்லைனிடமிருந்து சர்வதேச ஒப்பந்தப்படி ₹1.4 கோடி வரை, பயணக் காப்பீடு இருந்தால் அதனுடனான கூடுதல் தொகையும், இழப்பீடாக வழங்கப்படும்.இது, அரசியல் அல்லது நீதிமன்ற நடவடிக்கைகளின் அடிப்படையில் மேம்படும் வாய்ப்பு உள்ளது.
