Air India Urination: பெண் பயணிக்கு அவமதிப்பு: ஏர் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி மன்னிப்புக் கோரினார்

ஏர் இந்தியா விமானத்தில் பெண் பயணி மீது ஆண் ஒருவர் குடிபோதையில் சிறுநீர் கழித்த சம்பவத்துக்கு ஏர் இந்தியா நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி கேம்பெல் வில்சன் மன்னிப்புக் கோரினார்.

CEO of Air India apologises for incident of urination

ஏர் இந்தியா விமானத்தில் பெண் பயணி மீது ஆண் ஒருவர் குடிபோதையில் சிறுநீர் கழித்த சம்பவத்துக்கு ஏர் இந்தியா நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி கேம்பெல் வில்சன் மன்னிப்புக் கோரினார்.

விமான ஊழியர்கள் 4 பேர், பைலட் ஆகிய 5 பேருக்கு பணி ஏதும் ஒதுக்க வேண்டாம் என்று உத்தரவிட்டுள்ள ஏர் இந்தியா நிறுவனம், வரும்காலங்களில் விமானங்களில் மது வழங்குவது குறித்து மறுபரிசீலிக்க இருப்பதாகத் தெரிவித்துள்ளது.

'நான் கடவுள் பெருமாளின் மனைவி': பெண்ணின் முடியை இழுத்து கோயிலை விட்டு வெளியேற்றிய கொடுமை

கடந்த நவம்பர் 26ம் தேதி நியூயார்க் நகரில் இருந்து டெல்லிக்கு வந்த ஏர் இந்தியா விமானத்தில் பிஸ்னஸ் கிளாசில் வந்த மும்பையைச் சேர்ந்த சங்கர் மிஸ்ரா குடிபோதையில், வயதான பெண் பயணி மீது சிறுநீர் கழித்துள்ளார்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மனஉளைச்சலுக்கு ஆளாகிய அந்த மூதாட்டி, , போலீஸிடமும் புகார் செய்ததையடுத்து, சங்கர் மிஸ்ராவை டெல்லி போலீஸார் இன்று கைதுசெய்தனர். 

 இந்த சம்பவத்தில் ஏர் இந்தியா நிறுவனம் சார்பில் அந்த பெண் பயணியிடம் சமாதானம் பேச முயன்று தோல்வி அடைந்ததையடுத்து, கடந்த 4ம் தேதி டெல்லி  போலீஸில் புகார் செய்தனர்.இந்த சம்பவம் குறித்து ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கேம்பெல் வில்சன் மன்னிப்புக் கோரி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

ஏர் இந்தியா விமானத்தில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த மும்பை சங்கர் மிஸ்ரா கைது

ஏர் இந்தியா விமானத்தில் பெண் பயணி மீது சக ஆண் பயணி ஒருவர் நடந்து கொண்ட கண்டிக்கத்தக்க சம்பவம் எனக்கு ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது. இந்த சம்பவத்துக்கு வருந்துகிறோம், இந்த மோசமான அனுபவத்துக்கு வேதனைப்படுகிறோம்

இந்த சம்பவத்தை இன்னும் சிறப்பாக கையாண்டிருக்கலாம் என்று ஏர் இந்தியா நிறுவனம் நினைக்கிறது. விமானத்திலும், தரையிறங்கியபின்பும் தகுந்த நடவடிக்கையை உடனடியாக எடுத்திருக்கலாம்.

விமானத்தில் எந்தவிதமான சம்பவங்கள் நடந்தாலும், அது  அங்கேயே பேசித் தீர்க்கப்பட்டாலும் அதை உடனடியாக நிர்வாகத்துக்கு இனிமேல் தெரிவிக்க ஊழியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

நவம்பர் 26ம் தேதி நியூயார்க்-டெல்லி விமானத்தில் பணியாற்றிய விமான ஊழியர்கள் 4 பேர், பைலட் ஒருவர் ஆகியோருக்கு அடுத்த பணி ஏதும் ஒதுக்க வேண்டாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸும் அனுப்பப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது

போதையில் சக பயணி மீது சிறுநீர் கழித்த ஊழியர்.. வேலையில் இருந்து அதிரடி நீக்கம் !

விமானத்தில் பயணிகளுக்கு மது வழங்கியது, சம்பவத்தை கையாண்டது, புகார் பதிவு உள்ளிட்டவற்றை ஏர் இந்தியா விசாரிக்கும். விமானஊழியர்கள் ஒரு சம்பவத்தை எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு ஊட்டப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. 

அது மட்டுமல்லாமல் எதிர்காலத்தில் விமானத்தில் பயணிகளுக்கு மது வழங்குவது குறித்து மறுபரிசீலனை செய்யப்படும். இந்தச ம்பவத்தில்  பாதிக்கப்பட்ட பெண் பயணிக்கு தொடர்ந்து ஏர் இந்தியா ஆதரவளிக்கும், அவர் மனரீதியாக நலம்பெற துணை புரியும். 

இவ்வாறு கேம்பெல் தெரிவித்துள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios