Asianet News TamilAsianet News Tamil

Air India Pee Incident: ஏர் இந்தியா விமானத்தில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த மும்பை சங்கர் மிஸ்ரா கைது

ஏர் இந்தியா விமானத்தில் கடந்த நவம்பர் மாதம் பெண் பயணிமீது குடிபோதையில் சிறுநீர் கழித்த மும்பையைச் சேர்ந்த சங்கர் மிஸ்ரா பலநாட்களாக தலைமறைவாக இருந்தநிலையில் பெங்களூருவில் இன்று போலீஸார் கைது செய்தனர்.

Mumbai Shankar Mishra, a passenger on an Air India flight who urinated on a woman, was caught in Bengaluru.
Author
First Published Jan 7, 2023, 10:56 AM IST

ஏர் இந்தியா விமானத்தில் கடந்த நவம்பர் மாதம் பெண் பயணிமீது குடிபோதையில் சிறுநீர் கழித்த மும்பையைச் சேர்ந்த சங்கர் மிஸ்ரா பலநாட்களாக தலைமறைவாக இருந்தநிலையில் பெங்களூருவில் இன்று போலீஸார் கைது செய்தனர்.

சங்கர் மிஸ்ரா தொடர்ந்து தலைமறைவாக இருந்ததைத் தொடர்ந்து அவருக்கு எதிராக டெல்லி போலீஸார் விமானநிலைங்களில் லுக்அவுட் நோட்டீஸ் அளித்திருந்த தேடிவந்தநிலையில் பெங்களூருவில் மிஸ்ரா கைது செய்யப்பட்டார்.

பெண் பயணி மீது சிறுநீர் கழித்த விவகாரத்தில் சங்கர் மிஸ்ராவின் வழக்கறிஞர்கள், பெண் பயணிக்கு ரூ.15 ஆயிரம் இழப்பீடு தொகை தந்தனர். ஆனால், அந்த தொகையை அந்த பெண் பயணியின் மகள் திருப்பி அனுப்பிவிட்டார்.

'நான் கடவுள் பெருமாளின் மனைவி': பெண்ணின் முடியை இழுத்து கோயிலை விட்டு வெளியேற்றிய கொடுமை

Mumbai Shankar Mishra, a passenger on an Air India flight who urinated on a woman, was caught in Bengaluru.

அமெரிக்காவில் நியூயார்க் நகரில் இருந்து டெல்லிக்கு கடந்த நவம்பர் 26ம் தேதி ஏர் இந்தியா விமானம் வந்தது. இதில் பிஸ்னஸ் கிளாஸில் 102 பயணிகள் இருந்தனர். விமானத்தில் விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டு, விமானம் பறந்து கொண்டிருந்தது. 

அப்போது, பிஸ்னஸ் கிளாசில் 8ஏ பிரிவில் அமர்ந்திருந்த மும்பையைச் சேர்ந்த சங்கர் மிஸ்ரா குடிபோதையில், சிறிதுதூரம் நடந்து வந்து, வேறுஒரு இருக்கையில் அமர்ந்திருந்த வயதான பெண் பயணி மீது சிறுநீர் கழித்துள்ளார்.

அழிவின் விளிம்பில் உத்தரகாண்ட் ஜோஷிமத்! கர்னபிரயாகிலும் 50 வீடுகளில் விரிசலால் மக்கள் பீதி

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மனஉளைச்சலுக்கு ஆளாகிய அந்த மூதாட்டி, டாடா சன்ஸ் குழுமத் தலைவர் சந்திரசேகரனுக்கு கடிதம் எழுதியுள்ளார், போலீஸிடமும் புகார் செய்தார். இந்த சம்பவத்தில் ஏர் இந்தியா நிறுவனம் சார்பில் அந்த பெண் பயணியிடம் சமாதானம் பேச முயன்று தோல்வி அடைந்ததையடுத்து, கடந்த 4ம் தேதி டெல்லி  போலீஸில் புகார் செய்தனர்.

Mumbai Shankar Mishra, a passenger on an Air India flight who urinated on a woman, was caught in Bengaluru.

இதையடுத்து, டெல்லி போலீஸார் பெண் பயணி மீது குடிபோதையில் சிறுநீர் கழித்த சங்கர் மிஸ்ரா மீது வழக்குப்பதிவு செய்தனர். அவருக்கு எதிராக, ஐபிசி 294, 509, 510 ஆகிய பிரிவுகளில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து தேடி வந்தனர். 

ஆனால், சங்கர் மிஸ்ராவுக்கு மும்பை, பெங்களூரு இரு நகரங்களில் அலுவலகங்கள் இருந்ததால் இங்கு அடிக்கடி சென்று வந்ததால் போலீஸாரால் கைது  செய்யமுடியவில்லை. சங்கர் மிஸ்ராவும் போலீஸார் கைதுக்கு பயந்து இருப்பிடத்தை மாற்றியுள்ளார். இதையடுத்து டெல்லி போலீஸார் சங்கர் மிஸ்ராவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் அளித்தனர். போலீஸாரின் விசாரணைக்கு ஆஜராகாமல் சங்கர் மிஸ்ரா தவிர்த்து வந்தார்.

போதையில் சக பயணி மீது சிறுநீர் கழித்த ஊழியர்.. வேலையில் இருந்து அதிரடி நீக்கம் !

பெண் பயணி மீது சிறுநீர் கழித்த விவகாரத்தைத் தொடர்ந்து, சங்கர் மிஸ்ரா, பணியாற்றிய அமெரிக்க நிதிச் சேவை நிறுவனமான வெல்ஸ் பர்கோ அவரை வேலையிலிருந்து நீக்கியது. வெல்ஸ் பர்கோ நிறுவனத்தின் துணைத் த லைவராக சங்கர் மிஸ்ரா இருந்தார்.

Mumbai Shankar Mishra, a passenger on an Air India flight who urinated on a woman, was caught in Bengaluru.

இந்த விவகாரத்தை மோசமாகக் கையாண்டதற்காக ஏர் இந்தியா தலைவருக்கு எச்சரிக்கை நோட்டீஸை இந்திய சிவில் விமாநப் போக்குவரத்து இயக்குநரகம் அனுப்பியுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios