Asianet News TamilAsianet News Tamil

எஸ்பிஐ வங்கியின் நிகர லாபம் 83% அதிகரிப்பு.. முழு விவரம் உள்ளே

எஸ்பிஐ வங்கியின் நிகர லாபம் மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் 83% அதிகரித்துள்ளது.

83 percent increase in SBI Bank's net profit.. full details inside.
Author
First Published May 19, 2023, 11:35 AM IST

இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) வங்கியின் நிகர லாபம் மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் 83% அதாவது ரூ.16,695 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் இது ரூ.9,113 கோடியாக இருந்தது. தொடர்ந்து, மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் ஒரு பங்குக்கு (1130%) ரூ.11.30 ஈவுத்தொகையை வங்கி அறிவித்துள்ளது. நான்காவது காலாண்டில் நிகர வட்டி வருமானம் 29% அதிகரித்து ரூ.40,393 கோடியாகஉள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலாண்டில் ரூ.31,198 கோடியாக இருந்தது.

இதையும் படிங்க : கர்நாடக முதல்வர் பதவியேற்பு விழா: அரவிந்த் கெஜ்ரிவால், பினராயி விஜயனுக்கு அழைப்பு இல்லை - ஏன்?

மார்ச் காலாண்டில் வங்கியின் செயல்பாட்டு லாபம் ஆண்டுக்கு ஆண்டு 25% அதிகரித்து ரூ.24,621 கோடியாக உள்ளது. காலாண்டில் உள்நாட்டு நிகர வட்டி வரம்பு 44 அடிப்படை புள்ளிகள் YYY 3.84% ஆக அதிகரித்துள்ளது.

முழு நிதியாண்டில், எஸ்பிஐயின் நிகர லாபம் ரூ.50,000 கோடியைத் தாண்டியுள்ளது. 2023 நிதியாண்டில் லாபம் 50,232 கோடியாக இருந்தது, இது ஆண்டுக்கு ஆண்டு 58% வளர்ச்சியைக் காட்டுகிறது.

 

முழு ஆண்டிற்கான NII ஆண்டுக்கு ஆண்டு 20% உயர்ந்துள்ளது. மேலும் 2023 நிதியாண்டுக்கான இயக்க லாபம் ஆண்டுக்கு ஆண்டு 11% அதிகரித்து ரூ.83,713 கோடியாக இருந்தது.

இதையும் படிங்க : 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்.. பெரம்பலூர் முதலிடம்.. கடைசி இடத்தில் எந்த மாவட்டம்?

Follow Us:
Download App:
  • android
  • ios