மத்திய அரசு ஏற்கனவே தனது ஊழியர்களுக்கான அகவிலைப்படியை இந்த ஆண்டு ஒருமுறை உயர்த்தியுள்ளது. அதன்பிறகு, பல மாநிலங்களும் அகவிலைப்படியை உயர்த்தி அறிவித்துள்ளன.
7வது ஊதியக் குழுவின் சமீபத்திய அறிவிப்பு அரசு ஊழியர்களிடையே மகிழ்ச்சியை உண்டாக்கி உள்ளது. மத்திய அரசால் அகவிலைப்படி உயர்வை அதிகரித்த பிறகு, மாநில அரசுகளும் தொடர்ந்து தங்கள் ஊழியர்களுக்கான டிஏவை உயர்த்தி வருகின்றன. இந்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள காங்கிரஸ் ஆளும் மாநிலமான சத்தீஸ்கரின் இந்தப் பட்டியலில் இப்போது சேர்ந்துள்ளது.
அகவிலைப்படி உயர்வு
செய்தி நிறுவனமான பிடிஐயின் அறிக்கையின்படி, சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகேல் தலைமையிலான அரசாங்கம், மாநில அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை 5 சதவிகிதம் (சத்தீஸ்கர் DA உயர்வு) அதிகரிக்க முடிவு செய்துள்ளது. இதன் மூலம், தற்போது சத்தீஸ்கர் மாநில அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 38 சதவீதமாக அதிகரித்துள்ளது. இருப்பினும், இந்த உயர்வுக்குப் பிறகும், மாநில அரசு ஊழியர்களின் அகவிலைப்படி, மத்திய அரசு ஊழியர்களைக் காட்டிலும் குறைவாகவே உள்ளது.
1000 ரூபாய் மகளிர் உரிமைத் தொகை - யார் யாருக்கெல்லாம் கிடைக்கும்? யாருக்கு கிடைக்காது? முழு விபரம்
மத்திய அரசு ஊழியர்கள்
அகவிலைப்படியை உயர்த்தி மத்திய அரசு மார்ச் மாதம் அறிவித்தது. அப்போது மத்திய அரசு அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்தியது. அதன்பிறகு அகவிலைப்படி 42 சதவீதமாக அதிகரித்து, 2023 ஜனவரி முதல் உயர்த்தப்பட்ட கொடுப்பனவு அமலுக்கு வந்துள்ளது. 7வது ஊதியக் குழுவின் கீழ், அகவிலைப்படி ஆண்டுக்கு இருமுறை திருத்தம் செய்யப்படுகிறது. தற்போதைய பணவீக்க விகிதத்தைப் பார்க்கும்போது, மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியில் மேலும் ஒரு உயர்வு விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தல்
சத்தீஸ்கர் உள்ளிட்ட சில மாநிலங்களில் இந்த ஆண்டு இறுதிக்குள் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் தான் அகவிலைப்படியை உயர்த்தும் முடிவு வரும் தேர்தலுடன் இணைக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. அண்டை மாநிலமான மத்தியப் பிரதேசத்திலும் இந்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு 3 மாதங்களுக்குள் அகவிலைப்படி இருமுறை உயர்த்தப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேசத்தில், அகவிலைப்படியானது மத்திய அரசின் 42 சதவீதத்திற்கு சமமாகிவிட்டது.
4 லட்சம் பேர்
முதல்வர் பாகேல் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு அங்கீகரிக்கப்பட்டதாக அரசு அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது. மாநில அரசின் இந்த முடிவால் சுமார் 3.80 லட்சம் ஊழியர்கள் பயன்பெற உள்ளனர் என்று அந்த அதிகாரி கூறுகிறார். அகவிலைப்படியை உயர்த்தும் இந்த முடிவால் மாநில அரசின் கருவூலத்தில் 1000 கோடி ரூபாய் கூடுதல் சுமை ஏற்படும் என்றும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.
அரசு பணியிடங்களில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை.. விதிமுறைகள் என்னென்ன?
