Asianet News TamilAsianet News Tamil

உங்கள் கனவு காரை வாங்க இதுதான் சரியான நேரம்! அதிரடி மாற்றத்துக்கு ரெடியாகும் டாடா மோட்டார்ஸ்!

டாடா மோட்டார்ஸ் தவிர, மாருதி சுசுகி, மஹிந்திரா மற்றும் மஹிந்திரா, ஹோண்டா கார்ஸ் இந்தியா மற்றும் ஆடி போன்ற பிற வாகன உற்பத்தியாளர்களும் விலையை உயர்த்தியுள்ளன.

Tata Motors Hiking Prices Of Its Entire Range In February 2024 sgb
Author
First Published Jan 23, 2024, 3:24 PM IST

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மின்சார வாகனங்கள் உள்ளிட்ட பயணிகள் வாகனங்களின் விலையை 0.7 சதவீதம் உயர்த்துவதாக அறிவித்துள்ளது. திருத்தப்பட்ட விலைகள் பிப்ரவரி 1, 2024 முதல் அமலுக்கு வரும். செலவுகள் அதிகரிப்பை ஓரளவு ஈடுகட்ட விலை  உயர்த்தப்படுகிறது எனவும் டாடா மோட்டார்ஸ் கூறுகிறது.

தற்போது, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திடம் ஏழு ICE கார்கள் மற்றும் நான்கு EV மாடல் கார்கள் விற்பனையில் உள்ளன. இதில் Tiago, Tiago EV, Tigor, Tigor EV, Punch, Punch EV, Altroz, Nexon, Nexon EV, Harrier மற்றும் Safari ஆகியவை அடங்கும்.

மேலும், 2023 டிசம்பர் மாதத்திற்கான மொத்த உள்நாட்டு விற்பனையில் டாடா மோட்டார்ஸ் 4 சதவீத உயர்வைக் கண்டது. இந்த காலகட்டத்தில் மொத்தம் 76,138 கார்களை விற்றது. மின்சார வாகனங்கள் உட்பட பயணிகள் வாகன விற்பனையின், டாடா மோட்டார்ஸ் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டியுள்ளது.

ராயல் என்ஃபீல்டுக்கு சவால் விடும் புதிய ஹீரோ மாவ்ரிக் 440 அறிமுகம்! விரைவில் புக்கிங் ஆரம்பம்!

Tata Motors Hiking Prices Of Its Entire Range In February 2024 sgb

உள்நாட்டு சந்தையில். கடந்த மாதம் 43,470 கார்களை விற்றது. இது 2022 டிசம்பரில் விற்கப்பட்ட 40,043 கார்களை விட 9 சதவீதம் அதிகம்.

டாடா மோட்டார்ஸ் தவிர, மாருதி சுசுகி, மஹிந்திரா மற்றும் மஹிந்திரா, ஹோண்டா கார்ஸ் இந்தியா மற்றும் ஆடி போன்ற பிற வாகன உற்பத்தியாளர்களும் இதே போன்ற காரணங்களை கூறி தங்கள் வாகனங்களின் விலையை உயர்த்தியுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அண்மையில் புதிய மின்சார காரான Punch EV ஐ அறிமுகம் செய்தது. இதன் ஆரம்ப விலை ரூ.10.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்). இது அதிகபட்சமாக 421கிமீ வரை பயணிக்கும் ரேஞ்ச் கொண்டது. ஐந்து வேரியண்ட்களிலும் கிடைக்கிறது.

250 கோடி ஆண்டு பழமையான கருப்பு கிரானைட் கல்லில் செதுக்கப்பட்ட அயோத்தி ராம் லல்லா சிலை!

Follow Us:
Download App:
  • android
  • ios