250 கோடி ஆண்டு பழமையான கருப்பு கிரானைட் கல்லில் செதுக்கப்பட்ட அயோத்தி ராம் லல்லா சிலை!

மைசூரில் ஐந்து தலைமுறையாக சிற்பம் செதுக்கும் பணியில் இருக்கும் குடும்பத்தைச் சேர்ந்த 38 வயதான அருண் யோகிராஜ் என்பவரால் இந்தக் கல் ராம் லல்லா சிலையாகச் செதுக்கப்பட்டுள்ளது. 

Ram Lalla Idol At Ayodhya Carved Out Of 2.5 Billion-Year-Old Black Granite sgb

புதிய அயோத்தி ராமர் கோவிலில் நடைபெற்ற பிரான் பிரதிஷ்டா விழாவில் ராம் லல்லா என்ற குழந்தை ராமர் சிலை திங்கள்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த 51 அங்குல சிலையை வடிப்பதற்காக பயன்படுத்தப்பட்ட கல் கர்நாடகாவில் இருந்து கொண்டு வரப்பட்ட கருப்பு கிரானைட் கல் ஆகும்.

"இந்தக் கல் 2.5 பில்லியன் (250 கோடி) ஆண்டுகள் பழமையானது" என்று பெங்களூருவில் உள்ள தேசிய ராக் மெக்கானிக்ஸ் நிறுவனத்தின் (என்ஐஆர்எம்) இயக்குநர் எச்.எஸ். வெங்கடேஷ் உறுதிப்படுத்துகிறார். இந்திய அணைகள் மற்றும் அணுமின் நிலையங்களுக்கான பாறைகளை சோதிக்கும் NIRM என்ற நிறுவனம் இயற்பியல்-இயந்திர பகுப்பாய்வு மூலம் கல்லை சோதித்துப் பார்த்து உறுதி செய்யப்பட்டுள்ளது.

"பாறை மிகவும் நீடித்திருக்கும். காலநிலை மாறுபாட்டை எதிர்கொள்ளக்கூடியது. குறைந்தபட்ச பராமரிப்பு போதுமானது. ஆயிரக்கணக்கான ஆண்டுகள் நீடித்திருக்கும்" எனவும் டாக்டர் வெங்கடேஷ் கூறுகிறார். குழந்தை ராமர் சிலை செதுக்கப்பட்ட பாறை தண்ணீரை உறிஞ்சாது என்றும் கார்பனுடன் வினைபுரிவதில்லை என்றும் டாக்டர் வெங்கடேஷ் கூறுகிறார். உறுதியான இந்த கருப்பு கிரானைட் கல் எந்த வகையான செதுக்கலுக்கும் ஏற்றதாக இருக்கும் என்றும் அவர் விளக்குகிறார்.

பூமி உருவான பிறகு உருகிய எரிமலைக் குழம்பு குளிர்ந்தபோது கிரானைட் பாறைகள் உருவாயின. இந்த கிரானைட் மிகவும் கடினமானவை என்பது குறிப்பிடத்தக்கது.

அயோத்தி ராமர் கோயிலுக்கு ரூ.2.51 கோடி நன்கொடை அளித்த முகேஷ் அம்பானி குடும்பத்தினர்!

Ram Lalla Idol At Ayodhya Carved Out Of 2.5 Billion-Year-Old Black Granite sgb

"ராமர் கோயில் பாரம்பரிய கட்டிடக்கலை பாணியில் மற்றும் உயர்தர கற்களைப் பயன்படுத்தி கட்டப்பட்டுள்ளது. ஆனால் அது நீடித்ததாக இருக்க நவீன அறிவியல் மற்றும் பொறியியல் நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன" என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறுகிறார். "இது 1,000 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது" எனவும் அவர் மேலும் தெரிவிக்கிறார்.

உயர்தர கிரானைட் சுரங்கங்களுக்கு பெயர் பெற்ற மைசூரு மாவட்டத்தில் உள்ள ஜெயபுரா ஹோப்ளி கிராமத்தில் இருந்து இந்த கல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பாறை கேம்ப்ரியனுக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்தது. சுமார் நான்கு பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

பூமி சுமார் 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியதாக கணிக்கப்பட்டுள்ள நிலையில், ராம் லல்லா சிலை செதுக்கப்பட்ட கருப்பு கிரானைட் பாறை பூமியின் வரலாற்றில் குறைந்தது பாதி அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் பழமையானது.

மைசூரில் ஐந்து தலைமுறையாக சிற்பம் செதுக்கும் பணியில் இருக்கும் குடும்பத்தைச் சேர்ந்த 38 வயதான அருண் யோகிராஜ் என்பவரால் இந்தக் கல் ராம் லல்லா சிலையாகச் செதுக்கப்பட்டுள்ளது. ராம் லாலா சிலையை உருவாக்க அவருக்கு ஆறு மாதங்கள் தேவைப்பட்டது.

டெல்லியில் உள்ள இந்தியா கேட்டில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 30 அடி கருங்கல் சிலையும் அருண் யோகிராஜ் செதுக்கிய புகழ்பெற்ற படைப்புகளில் ஒன்றாகும்.

சொகுசு கார் சேகரிப்பில் தளபதி, சூப்பர் ஸ்டார் எல்லாரையும் மிஞ்சிய அந்த தெலுங்கு நடிகர் யார்?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios