Asianet News TamilAsianet News Tamil

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க சூப்பர் சான்ஸ்! 5 நாள் மட்டும் ஸ்பெஷல் ஆஃபர் கொடுக்கும் ஓலா!

ஜூன் 26 வரை மட்டுமே இந்தச் சலுகை அமலில் இருக்கும். அதற்கு ஓலா ஸ்கூட்டர் வாங்கினால் ரூ.15,000 வரை சேமிக்க முடியும்.

Ola S1 electric scooter gets benefits of up to Rs 15,000 but only for five days sgb
Author
First Published Jun 22, 2024, 5:00 PM IST

எலக்ட்ரிக் வாகன உற்பத்தியாளரான ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் S1 சீரிஸ் ஸ்கூட்டர்களுக்கு குறுகிய கால சலுகைகளை அறிவித்துள்ளது. ஜூன் 26 வரை மட்டுமே இந்தச் சலுகை அமலில் இருக்கும். அதற்கு ஓலா ஸ்கூட்டர் வாங்கினால் ரூ.15,000 வரை சேமிக்க முடியும்.

Ola S1 X+

Ola S1 X+ இப்போது ரூ. 89,999 ஆரம்ப விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த மாடல் ரூ. 5,000 தள்ளுபடியுடன் கிடைக்கும். இது ஸ்டாக் இருக்கும் வரை மட்டுமே. மேலும், கிரெடிட் கார்டு EMI முறையில் வாங்கினால் ரூ. 5,000 கேஷ்பேக் பெறலாம். ரூ. 5,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸும் பெறலாம். சில வங்கிகளில் கடன் பெறுபவர்களுக்கு ரூ.5,000 வரை கேஷ்பேக் சலுகையும் வழங்கப்படுகிறது.

சமீபத்தில், ஓலா நிறுவனம் S1 X சீரிஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தியது. இது 2 kWh, 3 kWh மற்றும் 4 kWh என மூன்று விதமான பேட்டரிகளில் கிடைக்கிறது. இவை முறையே ரூ.74,999, ரூ.84,999 மற்றும் ரூ.99,999 விலையில் கிடைக்கின்றன.

20 ஆயிரம் பட்ஜெட்டில் செம ஸ்மார்ட்போன் வாங்கணுமா? இதைப் பார்த்துட்டு செலக்ட் பண்ணுங்க!

Ola S1 Pro மற்றும் S1 Air

இது தவிர, எஸ்1 ப்ரோ மற்றும் எஸ்1 ஏர் மாடல்களை வாங்கும்போது ரூ.2,999 மதிப்பிலான ஓலா கேர்+ சந்தாவையும் நிறுவனம் வழங்குகிறது. இந்தச் சந்தா மூலம் ஆண்டுதோறும் ஓலாவின் சர்வீஸ் பிக்அப் மற்றும் டிராப்,  திருட்டுப் பாதுகாப்பு, சாலையோர உதவி போன்ற பல்வேறு சேவைகளைப் பெறலாம்.

மேலும், இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை சில கிரெடிட் கார்டு EMI மூலம் வாங்கும்போது ரூ.5,000 வரை கேஷ்பேக் சலுகையும் பெறலாம்.

Omeprazole – Fomepizole குழப்பத்தில் எடப்பாடி! விளக்கம் கொடுத்த அமைச்சர் மா. சுப்பிரமணியன்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios